அப்படியா !!!!


* இப்போதுள்ள அரசியல் தலைவர்களும் , மந்திரிகளும் எதுக்கெடுத்தாலும் , எங்கு போனாலும் விமானத்தில் பறக்கிறார்கள் . ஆனால் , நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசபிதா மகாத்மா காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாதாம் .


* ரோஜாப்பூவிலிருந்து முதன்முதலில் பன்னீர் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் தாஜ்மஹால் உருவாகக் காரணமாக இருந்த நூர்ஜஹானின் தாயார் சாலிமாதான் .


*மனிதனுக்கு 32 பற்கள் , நாய்க்கு 42 பற்கள் . ஆனால் , ஆமைக்குப் பல்லே கிடையாது .


* இரத்தத்தில் கொழுப்புப் பொருள்கள் , கேல்சியம் படிவதால் நெஞ்சுப்பை நாளம் குறுகி விடுகிறது . இதனால் , இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது . அல்லது நின்று விடுகிறது . அப்போது மாரடைப்பு உண்டாகிறது .


* சென்னை வானொலி நிலையம் , 1938-ம் ஆண்டு ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது . அவர் ஆற்றிய உரையே வானொலியில் முதல் தமிழ் பேச்சாகும்


* மாவீரன் அலெக்ஸாண்டர் , ப்ளேட்டோ , டாவின்சி , மைக்கேல் ஏஞ்சலோ... இப்படி ' ஹோமோசெக்ஸ் ' மேதைகளைப்பற்றிய பெரிய புத்தகமே உண்டு


* உடல் எடையைக் குறைக்க இன்று நவீன சிகிச்சைகள் வந்துள்ளன . இதற்கு Endoscopic allergan baloon என்று பெயர் ..

0 மறுமொழிகள் to அப்படியா !!!! :