பரட்டை என்கிற அழகுசுந்தரம் !!!

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்


மகனாகும் வரம் வேண்டும் தாயே


என் கடவுள் என் உலகம் நீயே


என் கடவுள் என் உலகம் நீயே


(ஏழேழு ஜென்மம்..)
தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்


விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா


தாய் வீசிடும் ஓர் பார்வை தான்


நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா


ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்


வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்


மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே


(ஏழேழு ஜென்மம்..)


தேகம் இது தாய் தந்தது தாய்


இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது


தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்


நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது


தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை


தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை


சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது


(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)0 மறுமொழிகள் to பரட்டை என்கிற அழகுசுந்தரம் !!! :