பனித்துளி சங்கர் இன்று ஒரு அறியத் தகவல் - ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு

13

னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி .

பொதுவாக தகவல்கள் என்றாலே நம்மில் பலருக்கு பல புதுமையான கற்பனைகள் நமது எண்ணங்களில் ஓடத் தொடங்கிவிடும் . அத...
ிலும் சினிமா சார்ந்த ஒரு தகவல் என்றால் இன்னும் நமக்கு அதில் பல சுவராஷ்யங்கள் இணைத்து கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகங்கள் இல்லை என்று சொல்லலாம் .


சரி அப்படி என்னதான் இன்றைய சினிமா சார்ந்த இன்று ஒருதகவல் என்று நீங்கள் எல்லாம் கேட்கத் தொடங்கும் முன்பே நான் தொடங்கி விடுகிறேன் .

''நாம் உண்ணவே உணவு இல்லை நமக்கு ஒரு குழந்தை தேவையா என்று என்னும் அளவிற்கு மிகவும் மனம் வருந்தி ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா?''

''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.

பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர் .

அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம்.
இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான்.

தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.

அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.

அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் 'லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி’ ஆனது.

ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

இன்று காமெடி, சண்டை படங்களுக்கு இன்றுவரை நிகரில்லாத ஹீரோவாக மற்றும் ஆசியாவின் மிகபெரும் ஸ்டாராக இருக்கும் அந்த 'கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!''

அதுமட்டும் இல்லை நண்பர்களே தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ ஆம் ஜாக்கிசான்: தி மியூசிக்கல்` என்ற பெயரில் மியூசிக் ஆல்பமாக தயாரிக்க இருக்கிறார் ஜாக்கிசான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .

என்ன நண்பர்களே இன்றையத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லவும் .


என்றும் நேசத்துடன்
பனித்துளி சங்கர் .

இயன்றவரை நாம் அறிந்ததை பிறரையும் அறிய செய்வோம்..........
மேலும் வாசிக்க.. >>

பனிததுளி சங்கரின் குட்டித் தகவல்கள் - (Panithulishankar in kutty kutty thagavalgal)

12

னைவருக்கும் வணக்கம் நண்பர்களே..!! நீண்ட இடைவெளிக்குப் பிறகு குட்டித் தகவல்கள் பதிவுகளுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி..! புதிதாக வருபவர்கள் குட்டித் தகவல்கள் என்றவுடன் ஏதோ பெண்குட்டியையோ, ஆண்குட்டியையோ, மான் குட்டியையோ, கன்றுக் குட்டியையோ, ஆட்டுக் குட்டியையோ, நாய்க் குட்டியையோ, பூனைக் குட்டியையோப் பற்றிக் குறிப்பிடுவதாக நினைத்து பதிவை படிக்க ஆரம்பித்தால் கம்பெனி பொறுப்பல்ல...!!! :) (ஸ்ஸ்சபா.... ஓவரா மொக்க போடுறானே மைண்ட் வாய்ஸ்......)

ரு தீவில் ஒரு வழக்கம் இருந்தது. யார் வேண்டுமானாலும் அரசர் ஆகலாம். ஆனால், ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும். பிறகு, அருகில் உள்ள இன்னொரு தீவில் அவரைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அங்குள்ள கொடிய விலங்குகள் அவரைக் கொன்று தின்றுவிடும். பல ஆண்டுகளாக இந்தப்பழக்கம் இருந்தது. இந்தமுறை ஓர் இளைஞன் அரசனானான்; சிறப்பாக ஆட்சி செய்தான்; ஐந்தாண்டுகள் முடிந்தன. அவனை அடுத்த தீவில் கொண்டு தள்ளிவிடப் படகில் அழைத்துப் போனார்கள்.
னால், என்னே ஆச்சர்யம்....! அந்தத் தீவில் மனிதர்கள் பலர் இருந்து அவனை வரவேற்றார்கள். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா ? இந்த தீவை ஆண்டுக் கொண்டிருந்தபோதே மறைமுகமாக சில படை வீரர்களை அங்கே அனுப்பி மிருகங்களைக் கொன்றான். காடுகளை எல்லாம் செம்மைப் படுத்தினான். வீடுகளை உருவாக்கினான். குடும்பங்களைக் குடி பெயரச் செய்தான். இப்போது இன்னொரு நாடு உருவாகிவிட்டது. இப்போது இரண்டு நாடுகளுக்கும் இவனே தலைவன்.

க்கதையிலிருந்து நாம் அறியப்படுவது யாதெனில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பினையும் சீரிய முறையில் திட்டமிட்டு, சிறந்த முறையில் பயன்படுத்தினால், சீர்மிகு இலக்குகளையும் குறிக்கோளையும் சிரமமின்றி அடையலாம்; சாதனை பல படைக்கலாம்..!!

என்றும் நேசமுடன்
பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>