வாசிப்பு பசி - நூல் கவிதைகள் - கவிஞர் பனித்துளி சங்கர் - Panithulishankar Vaasippu tamil kavithai sms

2


நூலகம் கவிதை ! தோ ஒன்றை தொலைத்து விட்டதாய்
எண்ணும் பொழுதெல்லாம் 
என்கால்கள் என்னை இட்டுச்செல்லும் 
இடமேன்னவோ நூலகமாகத்தான் இருந்திருக்கிறது,

நுழையும் பொழுதே ஒருவித அமைதி 
இடையிடையே மெல்ல கேட்கும் பாதணி சத்தம்,,,
நிசப்த்தத்தை கிழிக்கும் நாற்காலி அசைவுகள் ,,,
இப்படி மாறுபட்ட உலகத்துள் நுழையும் அனுபவம்.

அது என்னவோ தெரியவில்லை உட்காந்து இருக்கும் 
அனைவர் முகத்தினிலும் அப்படிஒரு இறுக்கம்...
அடிக்கடி நினத்துப்பார்ப்பதுண்டு ....சொல்லிவைத்தாற்போல்
அப்படி என்னதான் படிக்கிறார்கள் அனைவரும்????

கண்களை சுழலவிட்டு ஒதுக்குப்புறமாய்
ஓர் மூலையில் இருந்த 
ஒற்றை நாற்காலியை தேடியாமர்கிறேன் ....
கூடடைந்த பறவையாய்..
சற்று வசதியாய் பின்சரிந்து
உட்கார்ந்து கண்ணை மூடி 
நூல்களின் நெடியுடன் கூடிய மூச்சொன்றை
உள் இழுத்து விட்டபோது 
உள்ளசுகம் என்ன சொல்ல?

ஆனாலும் கையில் நூலின்றி 
ஆறுதலாய் உட்கார்ந்து இருக்கும் என்னை 
நூதனமாய் பார்த்தவாறே செல்பவர்களுக்கு 
எங்கே தெரியப்போகிறது 
நான் தாய்மடி தேடிவந்த கன்று என்று.....

                   - கவிஞர் பனித்துளிசங்கர்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் ரசிக்கலாம் சிரிக்கலாம் - சிரிப்பு ஜோக்ஸ் நகைச்சுவை கதைகள் - Panithuli shankar Tamil jokes sirippu kathaigal

0
ருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது "இல்லை" என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்..?! என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னார்கள். "எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்..?! ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.

மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar புதிய தமிழ் கவிதைகள் - Kadhal kavithaigal tamil - நீயில்லா பொழுதுகள் - நன்றி ஆனந்த விகடன்

0


மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் - சுவராஸ்யமான தகவல்கள் நாகேஷ் - Panithuli shankar interesting tamil stories

0''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு?'

''தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும். நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்கவைத்தது. அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். இத்தனைக் கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது. ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான். நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன். கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!
மேலும் வாசிக்க.. >>

கவிஞர் பனித்துளி சங்கர் கைபேசிக் காதல் கவிதைகள் - Panithuli shankar Tamil new SMS Kadhal Kavithaigal

0

நடை பழகும் காதல் !மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் சாதிக்க வேண்டுமா ? வாசிக்க வேண்டும் - தன்னம்பிக்கை கதைகள் -Thannambikkai kathaigal in tamil

6


நம்பிக்கை  கதைகள் !


ம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில், 
கொஞ்சம் பெரிய தூண்டில், 
அதைவிடப் பெரிய தூண்டில், 
ஃபிஷிங் ராட், 
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். 
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
மேலும் வாசிக்க.. >>