பனித்துளி சங்கர் - அன்னையின் மடியில் , இதயம் உருகும் அழகிய தமிழ் கதைகள் , Amma Tamil kathaigal Kavithaigal

4







வள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........


மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் - புரியங்களின் சிதறல்கள் - Panithuli shankar Tamil Kadhal Kavithaigal 2013

0



Panithuli shankar Kadhal Kavithaigal

மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் - இன்று ஒரு சிந்தனை கதை - அப்பா மகன் - Tamil sinthanai kathaigal

2







ஒரு குட்டி கதை...

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.... வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல் திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?
மேலும் வாசிக்க.. >>

கவிதைகள்

0












































மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - மதுரை பெயர்க்காரணம் வரலாறு - Indru oru thagaval Madurai history

1






மாமதுரை /
மதுரை பெயர்க்காரணம் :

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும்.

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும்.

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.



மேலும் வாசிக்க.. >>

தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal

0


























































































































































































































மேலும் வாசிக்க.. >>