கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது !!!


கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயில் மின்னஞ்சல் சேவை செவ்வாய்க்கிழமை இரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது. இதனையிட்டு கூகுள் நிறுவனம் சர்வதேச ரீதியாகத் தன்னோடு இணைந்திருக்கும் 150 மில்லியன் பாவனையாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறது.


இது போன்ற தவறுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.


எத்தனையோ பேர் தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தொடர்புகளை ஜீ மெயிலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்று அதன் நிறுவன அதிகாரியான பென் டெயினர் தெரிவித்தார்.


இதே போன்று கடந்த மே மாதமும் பாரிய தொழில்நுட்ப பிரச்சினை ஒன்று கூகுள் இணையத்தள சேவையில் இடம்பெற்றிருந்தமை குறிபிடத்தக்கது


0 மறுமொழிகள் to கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது !!! :