இன்று ஒரு தகவல் - வானவில்லின் அதிசயம்..!!! (Panithulishankar in Rainbow News)

8

னைவருக்கும் வணக்கம் நண்பர்களே..!! மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் அனைவரையும் இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். வழக்கம்போல் வேலைப் பளு காரணமாகவும், அவசர வேலை காரணமாக அமீரகத்திலிருந்து சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருந்த காரணத்தினாலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக பதிவுகள் எதுவும் எழுத இயலாத நிலை ஏற்பட்டது.  எனவே இந்த இடைவெளியினை நிரப்பும் விதமாக நாம் இன்று ஒரு தகவலில் வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தங்களுடன் பகிர்கிறேன். சரிங்க நண்பர்களே..! வாருங்கள் பதிவுக்கு செல்வோம்..!!

வானவில் என்பது மழை காலத்தில் வானில் தெரியும் வண்ண வடிவமான வில். இது மழை பெய்வதற்கு சற்று முன்னோ அல்லது பின்னோ மட்டும் வானவில் தோன்றுவதை பார்ப்பது வழக்கம். சில நேரம் குளிர்ந்த காலங்களில் மழை வருவதற்கு அறிகுறியாக நிலவை சுற்றி பெரிய ஒளி வளையம் தோன்றுவதை கூட (நிலாக்கோட்டை கட்டுவதாக) கண்டிருப்பீர்கள். இவை அனைத்திற்கும் காரணம், குளிர்ந்த நீராவியானது தூசு வடிவப் பனிக்கட்டி படிவங்களாக நிறைந்திருப்பது தான். இந்த தூசு வடிவில் இருக்கும் சிறு படிகங்களே நானோ படிகங்கள் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இவை நீராவியால் ஆனவை. இதைப்போல பல இரசாயனங்கள் பலவித படிகங்களை உருவாக்குகின்றன. 
வானவில் சுமார் 7 நிறங்களை கொண்டது என்பது ஊர் அறிந்த உண்மை; ஆனால் மழை நீரில் இந்த வண்ணங்கள் கரைந்து வந்ததாக சரித்திரம் உண்டா என்றால் இல்லை. ஏன்? காரணம் ஒளியானது ஒரு குறிப்பிட்ட பண்புகள் கொண்ட படிகங்களில் ஊடுருவிச் செல்லும்போது அவை பிரிந்து பல நிற கதிர்களை வெளியிட்டு வண்ணக் காட்சிகளுக்கு உள்ளாகிறது. இது ஒளியின் இயற்பியல் பண்பு. இப்பண்பு வெளிப்பட இந்த படிகங்கள் மிக அவசியம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரை இவை அனைத்தும் படிகங்களே! இவைகள் அனைத்தும் வெள்ளை வண்ணத்தில் தோன்றினாலும், இவற்றை நீரில் கரைத்தால் அவை பால் போல் ஆவதில்லை. ஆனால் திட வடிவில் இருக்கும் போது மட்டும் வெள்ளையாக காட்சி அளிக்கின்றன. காரணம் அவை ஒளி அலைகளை பிரதிபலிக்கின்றன. எனவே வண்ணங்கள் உண்டாவதற்கு குறிப்பிட்ட படிகங்களே காரணமாக முடியும்.
ம் முன்னோர்கள் வண்ணப்பூச்சுகள் (பெயிண்டுகள்), சாயங்கள் அல்லாத இத்தகைய வண்ண தொழில் நுட்பத்தை எப்படியோ அறிந்திருக்கிறார்கள். இவற்றை கொண்டுதான் காலத்தால் அழியாத பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள் என்பது சமீபத்தைய ஆராய்ச்சிகளின் முடிவு. அவை நீண்ட காலம் சிதைவுறாமல் இருக்க வினை புரியாத பல மந்த உலோகங்கள் மற்றும் கலவைகளை நானோ படிகங்களாக்கி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாகத்தான் உள்ளது. சரி நண்பர்களே..!! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

டிஸ்கி.-
தொடந்து பதிவுகள் எழுதாவிட்டாலும் நமது முந்தைய பதிவுகளை வாசித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தும், நமது வலைப்பக்கத்தில் இணைந்தும், ஆதரவு நல்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை உரிதாக்குகிறேன். நன்றி..! நன்றி..!! நன்றி..!!!

என்றும் நேசமுடன்
பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>