அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஒட்சிசனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.
"நகைச்சுவை" சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் 'ஒழுங்காக இயங்கு' என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??* * * * *
MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
* * * * *
தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு. காதுல பஞ்சு வச்சுக்க...!!
ஏண்டா வைக்கலே'ன்னா?
நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க
வேண்டியது ஆகிடும்!
* * * * *
உனக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''" பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''எஸ்
* * * * *
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* * * * *
சரி நண்பர்களே..!! இந்த இறுதியான மொக்கை சிந்தனைப் பற்றி யோசித்துக்கொண்டே இருங்க அடுத்த நகைச்சுவை பதிவில் சந்திக்கிறேன்.
நேசத்துடன்,
பனித்துளி சங்கர்.
* * * * *