போராட்டம் -- பயங்கரவாதம் !!!!


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார் . அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது . இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன் , விழாவுக்கு அவரையும் அழைத்தார் .

 ஆனால் , ரன்பீர்சிங்கோ , ' ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது . அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம் ! என்றார் . யோணன் சிங் அந்த விருதைப் புறக்கணித்தார் .

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது ! போராட்டத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும் என்ன விதியாசம் என்பதை , உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும் .

0 மறுமொழிகள் to போராட்டம் -- பயங்கரவாதம் !!!! :