- Home
- Archive For January 2012
பனித்துளி சங்கர் தமிழ் கவிதைகள், Tamil Kavithaigal SMS Love poem Panithuli shankar 2012
18
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
1/25/2012 01:44:00 AM
குறிச்சொல் kadhal Kavithaiagl, love sms, SMS Love Poem, Thanimai Kavithai, ஏக்கம், கவிதைகள், காதல் கவிதைகள், ஞாபகம், தனிமை
குறிச்சொல் kadhal Kavithaiagl, love sms, SMS Love Poem, Thanimai Kavithai, ஏக்கம், கவிதைகள், காதல் கவிதைகள், ஞாபகம், தனிமை
பனித்துளி சங்கர் - நினைவுகள் ஆயிரம் சார்லி சாப்ளின் - Charlie chaplin Real Life
11
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
1/09/2012 10:34:00 PM
குறிச்சொல் Charlie chaplin jokes, sweet memories, கண்ணீர், சார்லி சாப்ளின், சினிமா, மகா நடிகன், ஜோக்ஸ்
குறிச்சொல் Charlie chaplin jokes, sweet memories, கண்ணீர், சார்லி சாப்ளின், சினிமா, மகா நடிகன், ஜோக்ஸ்
பனித்துளி சங்கர் காதல் கவிதை - Kadhal Kavithai / Love Poem - முகவரி மரணம்
10
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
1/05/2012 12:24:00 AM
குறிச்சொல் கவிஞர், கவிதைகள், காதல், ஞாபகம், தனிமை, நினைவு, பனித்துளிசங்கர், பிரிவு, மரணம்
குறிச்சொல் கவிஞர், கவிதைகள், காதல், ஞாபகம், தனிமை, நினைவு, பனித்துளிசங்கர், பிரிவு, மரணம்
2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதைகள் - பனித்துளி சங்கர் 2012 new years kavithaigal
7
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
1/01/2012 08:03:00 AM
குறிச்சொல் 2012 புத்தாண்டு கவிதைகள், new Kavithaigal 2012, New Year 2012 kavithaigal, new years poems, puthandu kavithaigal, கவிதைகள்
குறிச்சொல் 2012 புத்தாண்டு கவிதைகள், new Kavithaigal 2012, New Year 2012 kavithaigal, new years poems, puthandu kavithaigal, கவிதைகள்
இதயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!
ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.
நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!
இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!
இதுநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.
கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை !
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!
நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!
ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் !.
இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!
எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.
நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.
நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .
புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!
பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய ADVANCE புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
இது கடந்த வருடத்திற்கு நான் எழுதிய மீள் கவிதை
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Subscribe to:
Posts (Atom)