- Home
- Archive For June 2015
தமிழ் காதல் கவிதைகள் - இலையுதிர் காலம் - பனித்துளி சங்கர் - Tamil Kadhal kavithaigal
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/29/2015 02:38:00 PM
குறிச்சொல் Kadhal Kavithaigal, Love POEMS, New kathal kavithai, Panithuli shankar Kavithai 2015, Tamil Kavithai, காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள்
குறிச்சொல் Kadhal Kavithaigal, Love POEMS, New kathal kavithai, Panithuli shankar Kavithai 2015, Tamil Kavithai, காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள்
அதிர்ஷ்ட நாணயம் - பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல்
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/29/2015 02:35:00 PM
குறிச்சொல் Muyarchi, Nampikkai kathai, panithuli, உழைப்பு, கதை, சிறு கதை, தகவல்கள், தன்னம்பிக்கை, நாணயம், முயற்சி
குறிச்சொல் Muyarchi, Nampikkai kathai, panithuli, உழைப்பு, கதை, சிறு கதை, தகவல்கள், தன்னம்பிக்கை, நாணயம், முயற்சி
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான்.
‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!
Subscribe to:
Posts (Atom)