அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் உங்கள் அனைவரையும் நீண்ட பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . கடந்த சில மாதங்களாக புதிய படிப்பிற்கான தேர்வு சுமை சற்று அதிகரித்திருந்ததால் தொடர்ச்சியாக பதிவுகள் எதுவும் தர இயலவில்லை . சரி கடந்தவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் உங்கள் அனைவரிடமும் தகவல்களைப் பகிர்ந்து பல மாதங்களைக் கடந்துவிட்டேன் . அதை இனி தினம்தோறும் வெளிவரும் பதிவுகள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் .
நண்பர்கள் பலர் மெயில் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு கவிதைகள் பற்றி தங்களில் விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பதிவுகள் கொடுத்து நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நேரமின்மையால் அது இயலவில்லை. ஆகவே, இந்த பதிவின் வாயிலாகவே அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எனது ஆயிரமாயிரம் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் .
சரி உறவுகளே..! இனி இன்றைய தகலவளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் . தகவல் என்றதும் பலருக்கு சலிப்புத் தட்டி விடும் . இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பல வருடங்களுக்கு முன்பு எனது மனநிலையும் இந்த வார்த்தைக்குள் தான் அடகு வைக்கப்பட்டிருந்தது . ஆனால் இன்று தினமும் தீர்ந்து போகாத சுவாசத்தைபோலவே இந்த தகவல் தாகமும் தொற்றிக் கொண்டுவிட்டது. இன்னும் என்னவெல்லாம் இந்த உலகத்தில் மறைந்து கிடக்கிறது ? இல்லை நம்மைப் போன்றவர்கள் மறந்து கிடக்கிறோமோ ? என்ற கேள்விகளும் சில நேரம் இதயத்தை முற்றுகையிடத் தொடங்கிவிடுகிறது. சரி இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம் .
உலகத்தில் இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் சாதிக்கத் துடிக்கும் அதீத ஆர்வத்தை தினம்தோறும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதனை வெறும் வார்த்தைகளில் மட்டும் நின்று போகாமல் இந்த உலகத்தில் மனிதன் வாழும் வரை நிலைத்திருக்கும் அளவிற்கு சாதனைகளின் பொக்கிஷமாக ஒரு புத்தகம் உருவாக்கி வைத்தார்கள் நம் முன்னோர்கள் அதுதான் கின்னஸ். நம்மில் அனைவரும் இந்த சாதனை சிகரத்தை எட்ட முடியாமல் போனாலும் இந்த புத்தகம் யாரால் எப்பொழுது உருவாக்கப் பட்டது என்பதைப் பற்றியாவது தெரிந்துகொள்ளலாமே ஆர்வத்தின் முடிவுதான் இந்தப் பதிவு என்று சொல்லலாம் .
கின்னஸ் புத்தகம் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நதிக்கரையில் தோன்றிய ஆச்சரிய சந்தேகத்தில் விதை ஊன்றப்பட்டதுதான் இந்த கின்னஸ் புத்தகம் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..!அயர்லாந்து நாட்டை சேர்ந்த ‘சர்க்யூ பீவர், என்பவர்தான் இந்த கின்னஸ் புத்தகத்தை உருவாக்க வி(தை )டை தேடியவர் என்று சொல்லலாம் . பலருக்கு இவர் யார் என்ற சந்தேகங்களும் வாசிப்புடன் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கக் கூடும் அதையும் சொல்லிவிடுகிறேன்.
அயர்லாந்து நாட்டில் இருந்து கின்னஸ் வாட் என்ற சாலையின் நிர்வாக இயக்குனராக இருந்தவர்தான் இந்த ‘சர்க்யூ பீவர், என்பவர் .இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில் வேட்டைக்கு செல்வது வழக்கம் . இப்படித்தான் அன்றையப் பொழுதும் நதிக்கரை ஓரமாக வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஏதோ ஒரு தங்க நிற ஒளியுடன் வானத்தில் வரிசையாக ஒரு கூட்டம் தன்னை நோக்கி வருவதை அறிந்தார் சற்று நேரம் செல்ல செல்ல அவை ஒரு பறவை இனம் என்று அறிந்த பீவர் அந்த பறவைகளில் ஒன்றை வேட்டையாட எண்ணி தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து நிமிர்ந்து பார்த்தபோது அந்த பறவை கூட்டம் பார்வைகளுக்கு எட்டாத தூரத்தில் எங்கோ சென்றிருந்ததாம் .
அப்போது இவரின் மூலையில் தோன்றிய அந்த சந்தேகம் உலகத்தில் மிகவும் வேகமாக பறந்து செல்லக் கூடிய பறவை இனம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற ஆச்சரியம்தான் இன்று உலகத்தில் பல உயிர்களையும் பொருட்படுத்தாமல் சாகசங்கள் நிகழ்த்தி இடம்பெறத் துடிக்கும் இந்தக் கின்னஸ் புத்தகத்தை ஏற்படுத்தியது என்றால் பார்த்துகொள்ளுங்கள். அன்று அவரையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்ற பறவைகளின் பெயர் கோல்டன் ப்ளவர் என்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்தான் அவருக்கே தெரிய வந்ததாம். தான் ஒருவனாக இந்த ஆச்சரியம் குவிந்த புத்தகத்தை உருவாக்க இயலாது என்று உணர்ந்த பீவர், அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.
தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். இன்னதக் கின்னஸ் புத்தகத்தின் சிறப்பைபோலவே இதில் சில மர்மங்களும் மறைந்திருக்கிறது கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளியிடவில்லை இதற்க்கானக் காரணங்கள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த சாதனை புத்தகம் இன்று நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் வெளிவருகிறது. இதில் இன்னும் மிகவும் வியப்பிற்குரிய தகவல் என்னவென்றால் ஐக்கிய அரபு நாடுகளின் போது நூலகங்களில் இருந்து இந்தப் புத்தகங்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக திருட்டு போகிவிடுவதாக அந்த அரசாங்கங்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தில் புதைந்து கிடக்கும் ஆச்சரியத்தின் ஆர்வத்தை .
புத்தாண்டுச் சிறப்புத் தகவல்
BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை CHOOSE YOUR MOBILE UMBER (CYM ) SCHEME என்ற திட்டத்தை இணைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்களில் இருந்து நமக்கு தேவையான எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 6 வழிகளில் தேடக்கூடிய வகையில் உள்ளது. இதன் மூலம் எளிதாக நமக்கு தேவையான எண்ணை தேர்வு செய்யலாம்.
பின்னர் ரிசர்வ் நெம்பர் என்பதை க்ளிக் செய்வதன் மூலம் நம்முடைய செல்போன் எண்ணிற்கு SMS மூலம் ஒரு PIN எண் அனுப்பப்படுகிறது. அது 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும். அதனை கொண்டு BSNL அலுவலகம் அல்லது Retailers -ஐ அனுகி ஆக்டிவேட் செய்து சிம் வாங்கிடலாம். இதில் கூடுதலாக (SMS) குறுஞ்செய்தி அனுப்பியும் ரீடெய்லர் மூலமும் பதிவு செய்யும் முறையும் உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் அருமையான திட்டம் மற்றும் சேவையாகும். கூடுதல் விவரங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். புதிய விருப்ப எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டிகளை க்ளிக் செய்து பயன்பெறலாம்.
சென்னை டெலிகாம் சர்க்கல் வாடிக்கையாளர்கள்
தமிழ்நாடு டெலிகாம் சர்க்கல் வாடிக்கையாளர்கள்
என்ன உறவுகளே..!இன்றையப் பதிவும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2012ன் நல்வாழ்த்துகள்.
என்றும் நேசமுடன்
உங்கள் பனித்துளி சங்கர்.
* * * * * * *