அதிவேக விமானம்...!!!

X-43A விமானம் செலுத்து வாகனத்துடன்..!

(The X-43A was carried to speeds of Mach 9 by a booster rocket)

உலகின் அதிவேக விமானத்தையும் அதற்கான விசேட இயந்திரத்தையும் அமெரிக்க விண்ணியல் ஆய்வு நிறுவனம் நாசா வடிவமைத்து சில சோதனைப் பறப்புக்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளது...!X-43A எனும் நாமம் கொண்ட இந்த விமானம் 10 மச் (Mach)(விமானப் பறப்பு வேகம்) அதாவது 11,000 கிலோமீற்றர்கள்/ மணி எனும் வேகத்தில் பறந்து உலக சாதனை படைத்தது...!
 
 
இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிகமாகும்...! இவ்வகை விமானத்தின் முன்னைய பறப்புச் சாதனை 6.83 மச் ஆகும்...! இதனுடன் ஒப்பிடும் போது அதிவேகப் பயணிகள் விமானமாக இருந்த கொங்கோட்டின் வேகம் சுமார் 2 மச் தான்...!
 
 
இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள விமான இயந்திரம் மற்றைய ஜெட் விமானங்களில் உள்ளதைப் போன்றதன்றி விசேடமாகத் தயாரிக்கப்பட்டதுடன்... வழமையாக விமான இயந்திரங்களில் வளிமண்டலக் காற்றை உள்வாங்க இயக்கப்படும் விசிறி கொண்ட இயந்திரங்கள் இவ்விமானத்தில் இல்லை என்பதும் இங்கு விமானத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்ட காற்று வாங்கி - ஒடுக்கியும் விமானத்தின் வேகமும் அப்பணியை ஆற்றப் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்...!


இந்த விமான இயந்திர வடிவமைப்பு விமான இயந்திர வடிவமைப்பில் ஒரு புரட்சிகர மாற்றமாகும்...!


இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சிட்னிக்கு சுமார் இரண்டு மணித்தியாலத்துள் பயணிக்க முடியும்...கொள்கை அளவில்...!


மேலே உள்ளது இந்த விமான இயந்திரத்தின் செயற்படு முறை...!


கீழே உள்ளது சாதாரண ஜெட் விமான இயந்திரத்தின் செயற்படு முறை...!


X-43A விமானம் பறப்புச் செய்யப்பட்ட முறை...!

0 மறுமொழிகள் to அதிவேக விமானம்...!!! :