புதிய தமிழ் கவிதைகள் - உறவுகள் - New Best Tamil quotes 2021 - Panithuli shankar

1






காலப்போக்கில் நம்மில் சில உறவுகள்
கிளை பிரியும் இலைகளைபோலவே
யாருமே அறியாமல்
உடைந்தும், உதிர்ந்தும் போகின்றோம் ...


இறுதிவரை கிளைசேரத் துடிக்கும்
உதிர்ந்த இலைகளைபோலவே இயலாமல்
சருகாகவே மண்ணில் மரணித்துப்போனது
நாம் தொலைத்த உறவுகளை
புதிப்பிக்க நினைத்த காலங்கள் !....

                                                                                                -பனித்துளிசங்கர்.

மேலும் வாசிக்க.. >>

புதிய தமிழ் காதல் கவிதைகள் 2021 - தனிமை - Panithuli shankar New Kavithai - Thanimai 2021

0


 



நான் எதைப்பற்றி
அதிகம் எழுதவேண்டும் என்பதை
நீ இல்லாத தனிமைதான் தீர்மானிக்கிறது !....


                                                                      - பனித்துளிசங்கர்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் கவிதைகள் - வாழ்க்கை - Panithuli shankar Tamil Kavithai - Valkai

0

 





“எல்லாம் இழந்துவிட்ட பிறகும்
இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கையில்
எழுவதற்காக மீண்டும் ஒருமுறை முயற்சிக்க
எனக்கொன்றும் முரண்பாடுகளில்லை
இன்னும் எஞ்சி இருக்கும்
இந்த வாழ்கையில்…


                                                      -- பனித்துளிசங்கர்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் - முதுமை கவிதை - Tamil Kavithai muthumai - Panithuli shankar 2021

0


து எதுக்கோ ஆசைப்பட்டு 
இறுதியில் இனி எதற்கு 
இதெல்லாம் எனக்கு என்ற 
முதுமையின் பெருமூச்சில் 
முற்றுப்புள்ளி எட்டுகிறது
 அதுவரை சேர்த்துவைத்த 
இளமைகால ஆசைகள் .....

                                  - பனித்துளி சங்கர்.
 


 

மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் காதல் சிலுவைகள் - தமிழ் கவிதை

0

 


உன்
திறந்த இதயத்தில்
உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .

உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .

நீ
பார்க்கும்போது
உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .


நீ பேசும்பொழுது
உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் ....

உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின்
விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.

இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம்
என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் ....

நமது திருமணத்தில்
வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,

மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,

நம் காதல் பொய்த்தால்
கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,

ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் ....

நம்மை பிரிக்க நேர்ந்தால்
இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் ....

உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்

இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .....

என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !

உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !

காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்....

காதல் செய்வதற்க்கு
நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் ...

காதலுக்கு
கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது ....

பறப்பதற்கு கற்றுத் தந்தாய்
என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !...

குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !

ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !

தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!

ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !

இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.

இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது
.
எப்படி ஓடிவருவேன் காதலா !!???
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !

உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,

உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........

- கவிஞர் பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

நாளை 21.04.2021 கடைசி தேதி - மெட்ராஸ் உயா்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க

0


மெட்ராஸ் உயா்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் விவரம்

  • சோப்தாா் (Chobdar) - 40
  • அலுவலக உதவியாளா் (Office Assistant) - 310
  • சமையல்காரர் (Cook) - 1
  • வாட்டா்மேன் (Waterman) - 1
  • ரூம் பாய் (Room Boy) - 4
  • காவலாளி (Watchman) - 3
  • புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer) - 2
  • நூலக உதவியாளர் (Liberary Attendant) - 6

கல்வித் தகுதி - 8ம் வகுப்பு தோ்ச்சி 

சம்பள ஏற்றமுறை (திருத்தியமைக்கப்பட்டது) ரூ.15,700 - 50,000 

வயது வரம்பு

  • பாெதுப்பிாிவினா் 18 முதல் 30 வயதுக்குள்
  • இடஒதுக்கீட்டுப் பிாிவினா் 18 முதல் 35 வயதுக்குள்

விண்ணப்பக் கட்டணம் 

பாெதுப்பிாிவினா் ரூபாய் 500

ஆதிதிராவிடா், பழங்குடியினா், அனைத்துப் பிாிவு மாற்றுத் திறனாளிகள் - முழு கட்டண விலக்கு

மேற்படி  வேலைவாய்ப்பு பதவிகளுக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பொதுவான அறிவுரைகள் காண இங்கு கிளிக் செய்யவும்

அறிவிப்பு தமிழில் காண இங்கு கிளிக் செய்யவும்

அறிவிப்பு ஆங்கிலத்தில் காண இங்கு கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க Madras High Court Official Website

Please Click Here for     Login (Already Registered) / Fresh Registration and Apply Online for the Posts of Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer and Library Attendant / Forgot Password

********

மேலும் வாசிக்க.. >>

Online Application for the posts of Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman and Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman, Scavenger - in various Judicial Districts in the state of TamilNadu- 2021

0

Notifications for various posts in the subordinate courts in Tamil Nadu 

- Click here to apply

Important Dates
Date of Notification18-04-2021
Last date for Registration, payment of Registration Fee, submission of Online Application and for remittance of Examination Fee (payments to be made only through online. No offline payment permitted)06-06-2021

NAME OF THE JUDICIAL DISTRICTS

Click the name of the districts for Notifications, Registration and Online application
மேலும் வாசிக்க.. >>

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனித்துளி சங்கரின் 2021 ஆம் ஆண்டின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

1

 அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனித்துளி சங்கரின் 2021 ஆம் ஆண்டின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . எல்லா வளமும் பெற்று அனைவரும் எந்த குறையும் இன்றி அனைவரும்


இன்புற வாழவேண்டும்  ....

மேலும் வாசிக்க.. >>