காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu)

12

குடை இல்லாத நேரத்தில்
வந்து செல்லும்
மழை போன்றுதான்
நிகழ்ந்துபோனது
உனது வருகையும்
உன் பார்வையால்
என்னை நனைத்து சென்றாய்.,
சிறு புன்னகையால்
என் இதயம் திருடிச்சென்றாய்.,

மீண்டும் ஒரு மழைக்காக
குடையின்றியே 
காத்துக் கிடக்கிறேன்
உன் வருகையை
உயிரின் இறுதிவரை 
ஏந்திக்கொள்ள !...

-நேசத்துடன்
பனித்துளி சங்கர்-.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

முப்பொழுதும் உன் கற்பனைகள் - பனித்துளி சங்கர் கவிதைகள்

6


றங்கிப்போன இரவின் நடு நிசியில்
உறங்காமல் விழி மூட மறந்திருந்தேன்
அவளின் நினைவுகளுடன்.. .!
அவன் விரட்ட
அவள் ஓட என வெகு நேரம்  
தனித் தனியே சுற்றித்திரிந்த
ஒரு காதல் ஜோடி ஒன்றாய்
முத்தமிட்டுக் கொண்ட சத்தத்தில்
மெல்லத் திரும்பிப் பார்த்தேன்
மணி பனிரெண்டு...!!

- நேசமுடன் 
பனித்துளி சங்கர்
* * * * * * *
    மேலும் வாசிக்க.. >>