இன்று ஒரு தகவல் - புத்திசாலித்தனம் - Panithuli shankar Indru Oru Thagaval - Brilliant

1



னைத்து அபின்ன் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் உங்கள் அனைவரையும் நான் வாசித்து வியந்த மீண்டும் ஒரு தகவல்களின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி !


ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்
1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்
என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…
மேலும் வாசிக்க.. >>

விழியின் சிறப்பு புதிய சிந்தனை - இன்று ஒரு தகவல் - பனித்துளி சங்கர்

0


னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் உங்கள் அனைவரையும் நான் வாசித்து வியந்த மீண்டும் ஒரு தகவல்களின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி !


சரி இனி நாம் தகவலுக்கு வருவோம். கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.

அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.

”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.

இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.

அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது…



மேலும் வாசிக்க.. >>

வெற்றியின் இரகசியம் - தாமஸ் ஆல்வா எடிசன் - தன்னம்பிக்கை தகவல்கள்

0



னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள்அனைவரையும் நான் வாசித்து வியந்த சில தகவல்களின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி !
 சரி இனி நாம் தகவலுக்கு வருவோம் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிவில்லை ஆகவே நான் வாசித்து அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன. ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல! அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.


மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.

தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.

முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.


மேலும் வாசிக்க.. >>