மம்மி..மம்மி..ஈஜிப்ஷியன் மம்மி!!எகிப்து என்றவுடன் நம் நினைவில் வருவது அழகான நைல் நதி, வரிவரியாக காற்று கோலமிட்டிருக்கும் பாலைவனங்கள், உலக அதிசங்களில் ஒன்றான பிரமிடுகள், அதில் மீளாத்துயில் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட மம்மீக்கள்!!!!!!!

அண்ணன் மருமகள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் எகிப்து சென்று வந்தாள். உடனே எனக்கு இந்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவாசைப்பட்டேன்.அதன் விளைவே இப்பதிவு.

சிகாகோ ஃபீல்ட் மியூசியத்தில் கண்ட எகிப்து மம்மிக்கள் எப்படி பதப்படுத்துகிறார்கள் என்பது பற்றி மினியேச்சர் உருவில் படிபடியாக காட்டுகிறார்கள்.எத்தனையோ லட்சக்கணக்கான வருடங்கள் கழிந்தும் தன் பூதவுடலை விட்டுச்சென்றிருக்கும் யாரோ ஒருவர்
பதப்படுத்தும் வழிமுறைகள்

பதப்படுத்துமுன் உடலின் உள்ளுறுப்புகள் அகற்றப்படுகின்றன.


தேவையான தைலங்கள் தடவப்பட்டு பாண்டேஜ் துணியால் சுற்றப்படுகிறது
மம்மி தயாரானதும் அதற்கான பெட்டியில் வைத்து எகிப்திய பூசாரியால் அந்த ஆத்மாவுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. செய்தவர்களுக்கு எந்த தொந்தரவும் நேராமலிருக்க.
அடுத்து பதப்படுத்த உப்பு தூளில் மூடப்பட்டு காத்திருக்கும் உடல்கள்.


பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள்.

அழகழகான வளையல்கள், காதணிகள்!!

கிளியோபாட்ரா கண்களைச் சுற்றியணியும் கண்ணாடி போலில்லை?


அணிகலன்கள்தான். ஆனால் எங்கு அணிவது என்பதுதான் தெரியவில்லை.0 மறுமொழிகள் to மம்மி..மம்மி..ஈஜிப்ஷியன் மம்மி!! :