கைக் குட்டை அளவில் உடுத்திக் கொள்வதுதான் இன்றைய அதி நவீன வளர்ச்சியின் அழகான மகத்துவம் என்று ரசிக்கத் தொடங்கிவிட்டோம். இனி வரும் காலங்களில் ஆடை என்ற ஒன்று முகவரி இழந்து எங்கேனும் தொலைந்து போகும் நிலை வரலாம். சரி இது ஒருபக்கம் இருக்கட்டும் இன்றையத் தகவலுக்கும் இந்த ஆடைக் குறிப்புக்கும் என்ன இருக்கிறது என்று பலரின் உள்ளங்களில் கேள்விகள் எழலாம். உலகத்தில் இதுவரை உருவாக்காப்பட்ட ஆடைகளின் வடிவமைப்பை கணக்கெடுக்கத் தொடங்கினால் பல நூற்றாண்டுகளைப் பிடிக்கும் என்று ஒரு தகவல் கூறுகிறது. இதுதான் உண்மையும் கூட என்று சொல்லவேண்டும் காரணம் காலத்தின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு மனிதனின் புதுமைகள் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய அவசர உலகத்தில்.
இன்று வட்டமாக இருக்கும் ஆடை ஒன்று நாளை சதுரமாக மாறிவிடுகிறது. நாளைக்கு சதுரமான ஆடை எந்த வடிவத்தில் உருவம் பெரும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவில் மனிதர்களாகிய நாம் ஆடைகளில் தினமும் ஒரு புதுமையை உருவாக்கி கொண்டே இருக்கிறோம். சரி இனி விஷயத்திற்கு வருவோம். என்னதான் இந்த உலகத்தில் இதுவரை ஒவ்வொரு ஆடையும் பல வடிவங்களைக் கொண்டு திகழ்ந்தாலும் இன்னும் உலகத்தில் ஒரே வடிவத்தை மட்டுமே அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒன்று உள்ளது என்றால் அது கைக் குட்டை ஒன்றுதான் என்று சொல்லவேண்டும். சரி இந்த கைக் குட்டையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத் தோன்றலாம். நமது மனித இனத்தில் பலர் ஆடைகளை பயன் படுத்துவதற்கு முன்பாகவே இந்த கைக் குட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது உலகில். ஒரு காலத்தில் இன்று மொபைல் போன்களைப் போல அனைவரின் கைவசம் இந்தக் கைக்குட்டைகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. சரி இதன் வடிவத்தில் என்ன சிறப்பு என்று நாம் பார்க்கலாம். பொதுவாக இதுவரை கைக் குட்டைகள் அதிகமாக சதுர வடிவத்தில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமும் அடங்கி இருக்கிறது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை தெரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இவ்வளவு மாற்றம் கண்ட நமது நாகரீக துணி வகைகளில் நாம் பயன்படுத்தும் கைக் குட்டை மட்டும் இன்னும் அதிக மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு மன்னன்தான் காரணம் என்றால் நம்புவீர்களா..?!!! ஆம் நண்பர்களே..!!. பிரஞ்சு மன்னன் ஒருவர் உலகத்தில் ஆடைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுது மனிதன் உடுத்தும் ஆடைகளில் ஒரு போதும் நாம் மாற்றம் ஏற்படாத வகையில் செய்ய இயலாது என்ற எண்ணிய மன்னன்,
முதன் முதலில் மனிதர்களாகிய நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி கைக்குட்டைக்கு என்று முதன் முதலில் சதுர வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று 1785 ஆம் ஆண்டு இதற்காக ஒரு சட்டமே இயற்றி இருக்கிறார். ஒருவேளை யாரேனும் இதை மீறி வேறு வடிவத்தில் கைக் குட்டைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற பயங்கர தண்டனையையும் அறிவித்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்திற்குப் பிறகுதான் சர்வதேச கைக் குட்டை தயாரிப்பாளர்களும் கைக் குட்டைகளை சதுர வடிவில் மட்டுமே தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடு மட்டும் இல்லாது ஜப்பான் , இலங்கை போன்ற நாடுகளில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்தவர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்ன நண்பர்களே..!! இன்றைய தகவல் உங்கள் அனைவருக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
இந்தப் பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , இன்டலி , மற்றும் தமிழ் 10 -ல் குத்தவும் .