பனித்துளி சங்கரின் கவிதைகள் : நிசப்த இரவுகள் - Panithuli shankar kavithaigal in Tamil

27


ழுது அழுது நனைந்த கன்னங்கள்
உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
தழ் சொல்லாத பிரியங்கள்
உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...
விம்மி விம்மி நிசப்தம் கிழிக்கும்
சிறு அழுகை சத்தம் என்னை
முழுவதுமாய் சிறை பிடிக்கிறது .

ன்னவென்று கேட்க எத்தனித்தும்
இயலாத உள்ளமாய்
பக்கத்து அறையில்  
பாதி உணர்வு குடித்த
அவளின் சத்தத்தின்
மிச்சத்தில் இறந்து கொண்டிருக்கிறேன் .

ருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!

முற்று பெறாத சுவாசமாய்
என் மனம் எங்கோ
வெகுதொலைவில் மெல்ல மெல்லத்
தொலைந்துபோய்க் கொண்டிருக்கிறது
அந்த பாதி வெளிச்சம்
அனைத்து இரவில் !

வெளிச்சத்தில் தொலைத்த
பொருளாய் என் இதயம்
உன்னிடம்

ரவுக்குள் தொலைந்த
வெளிச்சமாய் இங்கு
இன்னும் தனிமையில்
நான் . ..
 

நேசத்துடன் 
பனித்துளி சங்கர் 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



  
மேலும் வாசிக்க.. >>

அரிய வியப்பானத் தகவல்கள் : தீப்பெட்டி தோன்றிய வரலாறு !

29

னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் புதிய செய்தியுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னதான் அறிவியலின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும் இன்னும் இந்த உலகம் அனைத்தையும் அச்சுறுத்தும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஐம்பூதங்கள் (பஞ்சபூதங்கள்) இந்த ஐம்பூதங்கள் பற்றி அனைவரும் நன்கு அறிந்ததே என்றாலும் மீண்டும் ஒரு முறை தெரிந்துகொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் இவ்வைந்தும் இவ்வுலகத்தில் இயற்கையின் அன்பான ஆயுதங்கள். சில சமயங்களில் இயற்கை சீற்றங்களால் நாம் சீண்டப்பட்டும், நம் செயற்கைகளினால் அவை சீண்டப்பட்டும் நமக்கு நாமே காயத்தை ஏற்படுத்திக் கொள்வது வாடிக்கையாகிப்போனது.

ரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த ஐம்பூதங்களில் நாம் பார்க்க இருப்பது நெருப்பு பற்றிதான். கற்காலத்தில் மனிதன் கண்டு பிடித்த ஒரு அரிய பொக்கிஷம் இதனால்தான் இன்றும் நாம் சுவையான உணவுகளை சமைத்து உண்டு கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த நெருப்பையும் ஒரு பெட்டிக்குள் அடைத்து உலகிற்கு அறிமுகம் செய்தார் ஒருத்தர் என்றால் நம்புவீர்களா !? ஆம் நண்பர்களே..! நாம் இன்றைய தகவலின் வாயிலாக தீப்பெட்டி என்ற ஒன்று எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றிதான் இன்று அறிந்துகொள்ளப் போகிறோம் சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் .

ந்த நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர். இங்கு சிலருக்கு ஜான்வாக்கர் என்று சொன்னதும் மற்றொன்றும் ஞாபகத்திற்கு வந்திருக்கும் இது உச்சரிப்பில் ஒரு மதுபானத்தின் பெயரும் உண்டு. சரி அது இப்ப நமக்கு வேண்டாம் அதைப் பற்றி சொன்னால் அப்பறம் ஒரு சிலர் போதையில் மறுமொழி எழுதாமலும், ஒட்டுப்போடாமலும் போயிட்டேன் என்று காரணம் சொன்னாலும் சொல்லுவிங்க..!! (ஹி...ஹி..ஹி.. ச்சும்மா தமாசுக்கு)

ஆகவே இப்ப நாம் இந்த தீப்பெட்டியை மட்டும் பற்றி அறிந்துகொள்ளலாம். (ங்கொய்யால அப்பத்தல இருந்து இதையேதான் சொல்லுற உடனே விஷயத்திற்கு வாலேனு சொல்லுறது நல்லா கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்) ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார் அப்பொழுது சில குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்து பூசினார் அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டி அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதில் இருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்து பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் உன்று வைத்திருக்கிறார் அப்பொழுது அதன் வழியாக சென்ற அனைத்து விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீ பிடித்துக்கொண்டதாம். அப்பொழுது தொடங்கிய இந்த குச்சி முறைதான் இன்று தீப்பெட்டி என்ற பெயரில் உலகமெங்கும் பெட்டிகளில் அடைத்து கையாளப்படுகிறது.

தில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீ பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார் இந்த கண்டுபிடிப்பும் அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது காரணம் இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீ பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்கு காரணம், அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசை தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் என்பவரையும், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர் அதன் பிறகுதான் பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது.
 
ன்ன நண்பர்களே..! இன்றைய தீப்பெட்டி பற்றிய தகவல் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு வியப்பான அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 
 
 

மேலும் வாசிக்க.. >>

ஆயிரம் (1000 ) பாலோவேர்ஸ்கள் ஐந்து லட்சம் (5,00000) ஹிட்ஸ்கள்

96


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்.

குறுகிய காலத்தில் ஆயிரம் (1000 ) பின் தொடர்பவர்களையும் தினமும்
ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !






மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் கவிதை - நினைவு தேசம்

28


 எத்தனை உலக அதிசயங்கள்
 உன்னை மட்டுமே சுற்றி சுற்றி
மகிழ்ச்சி கொண்டேன்

த்தனை இயற்கை அதிசயங்கள்
உன் அன்பான வார்த்தைகளில்
 மட்டுமே தெரிந்துகொண்டேன் .

த்தனை விபத்துக்கள்
பூகம்பம்கூட செய்யாத மாற்றத்தை
உனது இதழோர
புன்னகையில்தான் உணர்ந்துகொண்டேன் .

றந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது .

ன் மடியில் தலை சாய்த்து
உறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்
 மீண்டும் புதிப்பிக்க
முயற்சித்து தோற்றுப்போகிறேன் .

றந்து போவேனோ
என்பதற்காக சுவாசிக்கவில்லை
ஒரு வேளை
உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .!
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு வருது: ஜோக்ஸ் - வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை தர்பார்

27


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி


புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"



விவசாயம் பண்ணறது தப்பா சார்?"
"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"
"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"



ண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"
"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"



ல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
ன்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.


ன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்



ர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
ர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.



ன்னர்: கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
மைச்சர் :இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்களாம்



ன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
ன்ன?
இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - மன்மத மலர்கள் அறிய தகவல்கள் !

19

னைவருக்கும் வணக்கம்..! தகவல்கள் சொல்லி அதிக நாட்கள் ஆகிவிட்டது அதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த மன்மத என்ன நண்பர்களே மன்மத என்று தொடங்கியது அனைவருக்கும் மன்மத அம்புதான் ஞாபகத்தில் உதித்து இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை இன்றைய தகவலில் நாம் பார்க்க இருப்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த அறிவியல் அமிலங்களும் உயிர் பெறாத நிலையில் என்பதைவிட மனிதன் சிந்திக்கத் தொடங்காத என்று சொல்வதே சாலச் சிறந்தது. அப்படிபட்டக் காலத்தில் இன்று நம் மக்கள் பயன்படுத்தும் போதைப் பொருட்கள், மற்றும் மயக்க மருந்துகள், ஆளை கொல்லும் விஷம், மனிதனை பிரமிப்பில் ஆழ்த்தும் திரவம் என அனைத்தும் சில மலர்களில் இருந்தே உருவாக்கி இருக்கிறார்கள் அதனால்தான் இந்த மலர்களுக்கு மன்மத மலர்கள் என்றும் அந்த மலர்களில் இருந்து உருவாக்கப்பட்ட பானங்களுக்கு மன்மத பானங்கள் என்றும் பெயர் வைத்தார்களாம்.

ரி அப்படி மனிதனே சிந்திக்கத் தொடங்காத கற்காலத்தில் சிறப்பு பெற்று திகழ்ந்த அந்த மலர்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம இருக்கலாம் இதோ அந்த மன்மத மலர்கள்..


தாமரை பூ - மயக்கும் தன்மை கொண்டதாம்
சோக பூ - ஸ்தம்பிக்கச் செய்தல் தன்மை கொண்டதாம்
மா பூ - வற்றச் செய்தல் தன்மை கொண்டதாம்
வமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்
நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்


ந்த பூக்களில் மிகவும் விசித்திரங்கள் நிறைந்த பூ எதுவென்றால் அசோக பூ என்றுதான் சொல்லவேண்டும். காரணம் மனிதர்களாகிய நாம் இந்த பூவில் இருந்து உருவாக்கப்படும் பானத்தை அருந்தினால்
 
 உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இந்த மன்மத மலர்களைப் பற்றியத் தகவல் உங்கள் அனைவரின் அறிவு பசிக்கும் சிறிது தீனி போட்டு இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும் .
 


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

ஒலைக் காத்தாடி - கவிதை

19

நிழல்களைக் குடித்து
நிஜங்களில் இறந்து போகிறேன்
சுவாசம் இன்றி
சுற்ற மறந்து போன
சிறு ஓலைக் காத்தாடியாய் !


மேலும் வாசிக்க.. >>

காலப் பெருவெளி -தமிழ்க் கவிதைகள்..!

30


ன் நினைவுகளால் உறக்கம்
தொலைத்தப் பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன்

கைகளில் ஆயிதம் இல்லை
கற்பனைகளுடன் தினமும் மோதி மோதி
காயப்படுகிறது நிஜங்கள் .

ன்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொருவரின் பார்வைகளிலும்
ஏதோ சொல்ல நினைத்து கரைந்துபோன
சோகங்களின் வார்த்தைகளை எல்லாம்
அவர்களின் உதட்டு சுளிப்புகளில்
மொத்தமாய் என்னை நோக்கி
வீசி செல்கிறார்கள் .

ங்கேனும் சிதறும்
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம்
மீண்டும் உன் ஞாபகங்கள்
என் இதயத்தை நிரப்பி செல்வது
வாடிக்கையாகிப்போனது .

காற்றின்றி இறந்து போகும்
ஒரு புல்லாங்குழலின் இசையாய்
தினம் உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்

நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!!



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 

மேலும் வாசிக்க.. >>

ஜோக் - Joke சிரி சிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART - 4 !!!

39


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி




ணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு
னைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்



பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?



பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
 பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.



பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்



டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
ண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
 டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..


டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
 பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

தகவல் களஞ்சியம் - மிரட்டும் தவளைகள் வியப்பான தகவல்கள்

23


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று ஒரு புதுமையான தகவலின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் அனைவரும் தவளைகளைப் பார்த்து இருப்போம். ஆனால் இந்த தவளைகளில் உள்ள வியப்பானத் தகவல்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த மிரட்டும் தவளைகள் என்ற தலைப்பில் இந்த தகவலை தந்திருக்கிறேன். சரி இனி நாம் மிரட்டலுக்கு வருவோம். சாரி விஷயத்திற்கு வருவோம்.
னித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன அதாவது கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த தவளை இனம். இதை விட ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த தவளைகளில் மட்டும் மொத்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த தவளைகள் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை கொண்டவை. இதை பற்றி விரிவாக அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும் .
ம் அனைவருக்கும் இதுவரை தவளைகள் நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ குழிகள் அமைத்தோ அல்லது பாறைகளின் இடுக்குகளிலோதான் வாழ்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தவளை இனம் கூடு கட்டி வாழ்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! ஆம் நண்பர்களே..!! சில மாதங்களுக்கு முன்பு தென் இந்தியாவில்தான் இந்த அறிய வகை தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை தவளைகள் மிகவும் வினோதமான முறையில் புற்களினாலான குட்டுகள் அமைத்து வாழ்கின்றன என்பது ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
 தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் வாழும் சில தவளை இனங்கள் எலியை விட மிக வேகமாக ஓடும் திறமை பெற்று இருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு முறை தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் ஆய்விற்காக பிடித்து வரப்பட்ட தவளைகளை, எலிகள் அடைக்கப்பட்ட ஒரே கூண்டில் போட்டு அடைத்திருக்கிறார்கள் அப்பொழுது பயத்தில் தவளைகள் அதிக ஓலி எழுப்பியதால் வேறு வழியின்றி தவளைகளின் பெட்டியை மாற்றுவதற்காக திறந்த பொழுது ஒரு தவளையும், எலியும் வெளியில் தப்பி ஓடிய பொழுது எலியை விட அதி வேகத்தில் தவளை ஓடுவது கண்டு வியந்த கண்டுபிடிப்பாளர்கள், மீண்டும் பல சோதனைகள் செய்து பார்த்ததில் எலியை விட தவளைகளின் வேகம் அதிகம் இருப்பது உறுதி செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ந்த தவளை இனம்தான் இப்படியென்றால் இதைவிட ஒரு தவளையின் செயல் மிகவும் வியப்பிற்குரியது அது என்னவென்றால் இந்த தவளைகளை கும்பகர்ணன் தவளைகள் என்று கூட சொல்லலாம். எதற்காக இந்த தவளைகளை கும்பகர்ணனுடன் ஒப்பிடுகிறேன் என்றால் இந்த தவளை இனம் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் உறங்கும் திறமை உள்ளவையாம். பலருக்கு சில கேள்விகள் இதில் எல்லாம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உறங்கினால் உணவிற்காக என்ன செய்கின்றன என்று. இந்த தவளைகள் சுவாசிப்பதின் மூலம் தங்களின் உணவுகளை சரி செய்து கொள்கின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது 
 னிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தகவல்களை விட மிகவும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பொதுவாக தவளைகள் பூச்சிகளை தின்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேட்டு இருக்கிறோம் ஆனால் வட ஆப்பிரிக்கா காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள சில தவளை இனம் பாம்புகளையே முழுவதும் முழுங்கும் அளவிற்கு திறமையும் உருவமும் கொண்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தவகை தவளைகளின் உமிழ் நீரில் மனிதர்களை கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ன்ன நண்பர்களே இன்றைய தவளைகள் பற்றிய தகவல்கள் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரையும் ஒரு புதுமையான தகவலுடன் சந்திக்கிறேன். மறக்கமால் உங்களின் கருத்து பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின்- தித்திக்கும் தீபாவளி சிறப்புக் கவிதை

28

னைத்து நண்பர்களுக்கும் இந்த பனித்துளி  சங்கரின்  இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!


தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!
து வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!

ங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!

தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து
சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !
சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!
முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!

ந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விளக்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!

த்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!

யன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.

த்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .

னமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !

ப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.
பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து
சத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!
 
 
 
  ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 
 
மேலும் வாசிக்க.. >>

கொட்டிக் கிடக்கிறது குட்டித் தகவல்கள்

20

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த குட்டிக்குட்டித் தகவல்கள் தொடரில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குட்டிக்குட்டி தகவல்கள் என்றதும் பலருக்கு சில சந்தேகங்கள் ஏற்படலாம். ஆம் நண்பர்களே ஒரு தகவலை பல பக்கங்கள் எழுதி சொல்வதை விட ஒரே பக்கத்தில் பலத் தகவல்களை தரவேண்டும் என்று எனது எண்ணங்களில் வெகு நாட்களாகத் தேங்கிக் கிடந்த ஆசைக்கு உயிர் கொடுக்கும் முதற்கட்ட முயற்சிதான் இந்தக் குட்டிக்குட்டித் தகவல். சரி இனி நாம் தகவலுக்கு போகலாம்.


பொதுவாக நாம் அனைவரும் பின்னோக்கி நடக்கும் பறவை மற்றும் பின்னோக்கி நடக்கும் விலங்குகள், இயந்திரங்கள் இன்னும் ஏன் மனிதர்களை பற்றிக்கூட அறிந்திருப்போம் ஆனால் விண்ணில் ஒரு முழு கிரகமும் பின்னோக்கி சுழல்கிறது என்றால் நம்புவீர்களா !?
ஆம் நண்பர்களே..!! நமது பூமியைப் போன்ற ஒரு கிரகம் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனி சிறப்புடன் பின்னோக்கி சுழன்று கொண்டிருக்கிறதாம். அது மட்டும் அல்லாது சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்திருப்பதும் இந்த கோள்தானாம்.
இந்த விநோதக் கோளின் பெயர் வெள்ளி.

இதன் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இரவில் நிலவிற்கு அடுத்ததாக அதிகப் பிரகாசத்தை ஏற்படுத்தக்ககூடிய சிறப்பு இந்த வெள்ளி கோளிற்குத்தான் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால்தான் இதற்கு காலை மாலை நட்சத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று சொல்கிறது அறிவியல் கணிப்பு .

சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு இந்த சிரிப்பு என்று பாடி வைத்தான் கண்ணதாசன். ஆனால் மனிதர்களாகிய நம்மைப் போலவே சிரிக்கக்கூடிய பறவை ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா..!! ஆம் நண்பர்களே..!!

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் வாழக்கூடிய குக்​கூ​பரா என்ற பறவை இனம்தான் இந்த சிறப்பிற்குரியது. இந்தப் பறவைகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மனிதர்களைப் போலவே சிரிக்கும் சிறப்புக் கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அது மட்டும் இல்லாது மனிதர்களாகிய நமக்கு வேறுபடும் பெண்களின் சிரிப்பு ஆண்களின் சிரிப்பு என்ற வேறுபாட்டைப் போலவே இந்த பறவை இனத்திலும் பெண் பறவைகள் பெண்களைப் போலவும் ஆண் பறவைகள் ஆண்களைப் போலவும் ஒலி எழுப்பி சிரிக்கும் சிறப்பம்சம் கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரி நண்பர்களே..!! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மனிதர்களைப் போல இந்த பறவை சிரிப்பதைக் கூட நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் ஆனால் இதையும் தாண்டி மிகப் பெரும் வியப்பை கொண்ட பறவை ஒன்று அமெ​ரிக்​கா​வில் வாழ்கிறது.

 இந்த பறவை இனத்தின் பெயர் பிட்​டர்ன். இதன் வியப்பை ஏற்படுத்தும் சிறப்பு என்னவென்றால் இந்த பறவை எழுப்பும் சத்தம் சிங்கம் கர்ஜிப்பது போன்று இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக இந்த பறவைகள் வசிக்கும் இடத்தில் மான் மற்றும் முயல் போன்ற சாதுவான விலங்கினங்களை பார்க்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது .

ன்ன நண்பர்களே இன்றையக் குட்டிகுட்டித் தகவல்கள் தொடரில் தந்தத் தகவல்கள் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் இந்த குட்டிக்குட்டி தகவல்களில் இன்னும் பல வியப்பானத் தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.
   

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>