என்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரே கவலையில் இருக்கிறது இந்த உள்ளம் . கவலையை விடுங்க !
சோலியை முடிங்க !
ஜாலியா சிரிங்க !
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"
இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."
யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"
" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்..!"
கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....
மற்றவன்: ஏன்?
ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன
சொருகிடுறாங்க.
டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
ஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
சர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...
ஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று கேட்டார்.
சர்ச்சில் "நான்தான்
பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.
"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது
ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.