- Home
- Archive For June 2013
மலை சுமக்கும் மலர் - மலர்கள் கவிதை - கவிஞர் பனித்துளி சங்கர் - Flower Love kavithaigal in tamil
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/22/2013 03:56:00 PM
குறிச்சொல் Cute Tamil poem, kadhal kavithai, PANITHULI KAVITHAI, Roja Poems, Tamil Love Kavithai, காதல் கவிதை, புன்னகை, பூந்தோட்டம், மலர் கவிதை
குறிச்சொல் Cute Tamil poem, kadhal kavithai, PANITHULI KAVITHAI, Roja Poems, Tamil Love Kavithai, காதல் கவிதை, புன்னகை, பூந்தோட்டம், மலர் கவிதை
பனித்துளி சங்கர் - தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை கடி காமெடி . Panithuli shankar tamil jokes story ,tamil dirty jokes
6
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/22/2013 03:54:00 PM
குறிச்சொல் mokkai, panithuli shankar jokes story, Tamil jokes sms, Tamil SMS Jokes, கடி, சிரிப்பு, தத்துவம், மொக்கை, லொள்ளு, ஜோக்ஸ்
குறிச்சொல் mokkai, panithuli shankar jokes story, Tamil jokes sms, Tamil SMS Jokes, கடி, சிரிப்பு, தத்துவம், மொக்கை, லொள்ளு, ஜோக்ஸ்
பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ]
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]
கவிதை பிரசவம் - பனித்துளி சங்கர் அழகிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் - Panithuli shankar Tamil Cute SMS Kavithaigal
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/20/2013 04:29:00 PM
குறிச்சொல் Love POEMS, sms, Tamil Kadhal Kavithai, கவிதை, காதல் கவிதை, சிந்தனை, புதுக் கவிதை, பொது கவிதை, ஹைக்கூகள்
குறிச்சொல் Love POEMS, sms, Tamil Kadhal Kavithai, கவிதை, காதல் கவிதை, சிந்தனை, புதுக் கவிதை, பொது கவிதை, ஹைக்கூகள்
மழைத்துளி முத்தம் - Panithuli shankar iyarkai kavithaigal In Tamil - இயற்கை ஹைக்கூ கவிதைகள்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/20/2013 04:10:00 PM
குறிச்சொல் HAIKU, Kadhal Mutham kavithai, Tamil Mazhai Kavithai, இயற்கை கவிதை, மழை கவிதை, முத்தம் கவிதை, ஹைக்கூ கவிதை
குறிச்சொல் HAIKU, Kadhal Mutham kavithai, Tamil Mazhai Kavithai, இயற்கை கவிதை, மழை கவிதை, முத்தம் கவிதை, ஹைக்கூ கவிதை
சிகரம் தொடும் நட்பு - கவிஞர் பனித்துளி சங்கர் நட்பு கவிதை - Beautiful Natpu Tamil Kavithai - Panithuli shankar
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/20/2013 03:53:00 PM
குறிச்சொல் KAVITHAIGAL, Nadpu kadhal kavithai, SMS Tamil SMS | Tamil Kavithai | Panithuli shankar Kavithaigal, Thozhamai kavithaigal, அன்பு, தமிழ் காதல், நேசம், பாசம்
குறிச்சொல் KAVITHAIGAL, Nadpu kadhal kavithai, SMS Tamil SMS | Tamil Kavithai | Panithuli shankar Kavithaigal, Thozhamai kavithaigal, அன்பு, தமிழ் காதல், நேசம், பாசம்
கவிஞர் பனித்துளி சங்கர் - கண்ணீர் பரிசளிக்கும் - அழகிய தமிழ் கதைகள் - குருட்டுத் தாய் - Tamil Kathaigal - Tamil sad Real Story
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/19/2013 04:15:00 PM
குறிச்சொல் Amma Feel, Kathaikal Page, panithuli shankar kathai, Tamil Short Stories, Tamil Stories, அம்மா, அன்பு, கதைகள், சோகம், பாசம், பிரிவு
குறிச்சொல் Amma Feel, Kathaikal Page, panithuli shankar kathai, Tamil Short Stories, Tamil Stories, அம்மா, அன்பு, கதைகள், சோகம், பாசம், பிரிவு
கண்ணீர் சிந்த வைத்த உண்மைக் கதை . வாசிக்க மறக்காதீர்கள்
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், " அம்மா , நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ தான் சமைத்தாயா?" என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, "இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி உம்மா என கத்தி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும் நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கம் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா " என கதறினான். கண்ணீர் விட்டான். ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு அம்மா .
தமிழ் கவிதைகள் - Tamil Kavithai - கவிஞர் பனித்துளி சங்கர்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/10/2013 03:36:00 PM
குறிச்சொல் Nice Tamil Kavithai Photos, panithuli shankar kavithai, Tamil Kadhal Kavithai, Tamil sms kavithaigal, கவிதைகள், காதல் கவிதை, புது நட்பு கவிதை
குறிச்சொல் Nice Tamil Kavithai Photos, panithuli shankar kavithai, Tamil Kadhal Kavithai, Tamil sms kavithaigal, கவிதைகள், காதல் கவிதை, புது நட்பு கவிதை
பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - யாரும் வாசிக்காதீர்கள் - உதவிகளின் அற்புதங்கள் J. Paderewski & Paderewski
4
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/08/2013 04:14:00 PM
குறிச்சொல் Friendship, Indru oru thagval, Panithuli shankar Articals, uthavi kathaigal, தகவல்கள், தன்னம்பிக்கை கதைகள், நண்பர்கள்
குறிச்சொல் Friendship, Indru oru thagval, Panithuli shankar Articals, uthavi kathaigal, தகவல்கள், தன்னம்பிக்கை கதைகள், நண்பர்கள்
உண்மை நிகழ்வு.
1892 ஆம் வருடம் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஒரு அனாதை மாணவன் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்.தன் நண்பன் ஒருவனுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கல்லூரிக்கு பணம் கட்டலாம் என முடிவெடுத்தான்.
J. Paderewski என்னும் பியானோ கலைஞரை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவர் மேனேஜரை சந்தித்தனர்.அவர் 2000 டாலர்கள் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார்.இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டனர்.
இசை நிகழ்ச்சி நடத்தும் நாள் வந்து விட்டது,ஆனால் இவர்களால் 1600 டாலர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்க முடிந்தது. Paderewski யிடம் வசூல் பண்ண 1600 டாலர் பணத்தை கொடுத்து விட்டு மீதி 400 டாலருக்கு செக் கொடுத்தனர்.அடுத்த வாரம் இந்த செக் மூலம் பணம் எடுத்து கொள்ளுங்கள் அதற்குள் நாங்கள் வங்கியில் பணத்தை செலுத்தி விடுகிறோம் என்றனர்.
Paderewski இதை நான் ஒத்து கொள்ள முடியாது என்று கூறி செக்கை கிழித்து எறிந்தார்.1600 டாலர் பணத்தையும் அவர்களிடமே திருப்பி குடுத்து விட்டு உங்கள் கல்லூரி கட்டணத்தை இதை வைத்து கட்டுங்கள் என்றார்.இலவசமாகவே அவர்களுக்காக அந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார்.
அறிமுகமே இல்லாத இரண்டு கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக பண உதவி செய்த அற்புதமான மனிதர் Paderewski சில வருடங்களில் போலாந்து நாட்டு பிரதம மந்திரி ஆனார்.
அற்புதமாக அவர் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் போது உலக போர் ஆரம்பமானது.உலக போரில் போலாந்து நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.1.5 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர், போலாந்து நாடும் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது. Paderewski அமெரிக்காவின் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவிடம் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.
Herbert Hoover என்பவர் தான் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்தார்,பின்னாளில் அவர் அமெரிக்காவின் பிரெஸிடெண்டாக இருந்தார். Paderewski உதவி கேட்டுள்ளார் என்று தெரிந்தவுடன் டண் கணக்கில் உணவு தாணியங்களை கப்பலில் ஏற்றி போலாந்து நாட்டுக்கு அனுப்பினார்.
போலந்து சகஜ நிலைமைக்கு திரும்பியதும் Paderewski , Herbert Hoover க்கு நன்றி சொல்ல அமெரிக்கவுக்கு புறப்பட்டார்.
Paderewski நன்றி சொல்ல வாயெடுத்த போது நில்லுங்கள் பிரதம மந்திரி அவர்களே நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.நீங்கள் செய்த உதவியை விட நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்த இரண்டு இளைஞர்களுக்கு உதவி செய்தீர்களே அதில் ஒருவன் தான் நான்.அன்று நீங்கள் செய்த உதவியால் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.
அறிமுகம் இல்லாத ஒருவருக்கு செய்த உதவியால் ஒரு நாட்டுக்கே உணவு கிடைத்தது.
இந்த உலகம் ஒரு அற்புதமான படைப்பு.எதை நாம் மற்றவர்களுக்கு செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும்.
உங்களால் ஆன உதவிகளை இல்லதவர்களுக்கு வழங்குங்கள் நண்பர்களே..!
சிறப்பான வாழ்வியல் சிந்தனைகள் - கவிஞர் பனித்துளி சங்கர் - Panithuli shankar sinthanaigal in tamil
4
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/03/2013 05:42:00 PM
குறிச்சொல் PANITHULI SHANKAR KAVITHAIGAL, Ponmozhi, Sinthanaigal, thaththuvam, கவிதைகள், சிந்தனைகள், தத்துவம், பொன்மொழி
குறிச்சொல் PANITHULI SHANKAR KAVITHAIGAL, Ponmozhi, Sinthanaigal, thaththuvam, கவிதைகள், சிந்தனைகள், தத்துவம், பொன்மொழி
சிறப்பான சிந்தனைகள் பத்து......
படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
Subscribe to:
Posts (Atom)