- Home
- Archive For June 2009
சினி சிப்ஸ் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, சினி தகவல்கள்
* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள்.
* நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
* இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை.
* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் கரங்கள். அவரது 100வது திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.
* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் வளையாபதி.
* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் சக்சஸ்... வெற்றி.
* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் கல்லுக்குள் ஈரம்.
* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் பணம் பத்தும் செய்யும்.
* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.
* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர்.
* நடிகை சவுகார்ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. இந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார்.
* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.
* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.
* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.
* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் ஏழை படும் பாடு.
ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!
****
நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.
****
போன் வந்தால் மணிக்கணக்காகப் பேசும் வழக்கம் கொண்டவர் ஜோன்ஸின் மனைவி. அவர் அன்று பத்து நிமிடத்தில் பேசிவிட்டு போனை வைத்துவிட, ஜோன்ஸ் ஆச்சரியமாகக் கேட்கிறார். "என்ன சீக்கிரம் போனை வைத்துவிட்டாய்?""ஆமா.. வேற என்ன பண்றது, ராங் நம்பர் வந்தா!." என அலுத்துகொண்டார் அவர் மனைவி.
****
ஜோக்கர் ஜோன்ஸ் ஒரு கிளினிக்கில் டாக்டரின் அறை முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகே ஒரு நபர் அழுதுகொண்டிருக்கிறார்.
ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?
நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.
ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.
நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..
****
ரயில் டிக்கெட் பரிசோதகர் ஜோன்ஸைப் பார்த்தது கேட்கிறார், "டிக்கெட் ப்ளீஸ்!"
ஜோன்ஸ் : (பாக்கெட்டிலும் பேக்கிலும் தடவிப்பார்த்துவிட்டு) ஐயோ.. டிக்கெட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!
பரிசோதகர் : பரவாயில்லை..உங்களைப் பார்த்தா நல்ல மனுசனாத் தெரியுது. கண்டிப்பா நீங்க எடுத்துருப்பீங்க. நான் அடுத்த ஆளப் பார்க்கிறேன்.(சிறிது நேரம் கழித்து பரிசோதகர் திரும்பி வர, இன்னமும் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்.)
பரிசோதகர் : இன்னுமா தேடுகிறீர்கள்? நான் தான் காண்பிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டேனே!
ஜோன்ஸ் : அடப்போய்யா நீ வேற! டிக்கெட் இருந்தாத்தானே நான் எந்த ஊருல எறங்குறதுன்னு தெரியும்.
தென்னாலிராமன் கதை !!!
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
காதலர் தின உடையின் நிறங்கள் !!!
குறிச்சொல் February 14, Kadhal haikkoo, love poem, loves day poems .Kadhal Kavithaigal, PANITHULI SHANKAR, Tamil Kavithaigal, காதலர் தினம்
கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் - Panithuli shankar Kadhal Kavithaigal
சிகப்பு - காதல் தோல்வி
பச்சை - காதலுக்காக எதிர்பார்த்தல்
மஞ்சள் - காதலித்தல்
வெள்ளை - காதலில் நாட்டம் இல்லை
நீலம் - இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கருப்பு - கடலை போடுவதற்கு மட்டும்.
அழகாக இல்லை என்று வருத்தப் படாதே
உன் தகுதி உயரும் பொழுது நீ அழகாக தெரிவாய். . .
அருகில் இருந்தாலும்
ஆச்சரியங்களின் குவியல் நீ
தொலைவில் இருந்தாலும்
தொலைந்து போகாத எண்ணங்கள் நீ
தாயை மகிழ்விக்க
எதையும் வாங்கிக்கொடுக்கா விட்டாலும் என்ன வேண்டும் என்று கேட்டாலே போதும்.
பேசி பயனில்லை எனும் போது மௌனம் சிறந்தது தான்
பேசுவதிலே அர்த்தம் இல்லை எனும் போது
பிரிவு சிறந்தது தான் !
அனைத்தும் கிடைத்தவனுக்கு அலட்சியம்,
எதுவும் இல்லாதவனுக்கு அது லட்சியம்...
அன்பை மட்டுமே அனைத்துப் பக்கங்களிலும் நிரப்பி வைத்திருக்கும் புனித நூல்
அம்மா.
பிடித்த பொன்மொழிகள் !!!
உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?

ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.
ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், “பழகுதற்கு” இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம்.
அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் பகுதியிலுள்ள பெண்களே 3 முதல் 8 வரையிலான இடத்தை இட்டு நிரப்புகிறார்கள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒட்டுமொத்த அமெரிக்காவில் உள்ள அழகான பெண்களை விட அதிகமான அழகிகள் இருக்கின்றனர் என கூறி அந்தப் பத்திரிகை அமெரிக்கப் பெண்களின் எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த பட்டியலில் மூலையிலும் இடம் பிடிக்கவில்லை. நெதர்லாண்டில் சைக்கிளோட்டும் பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் சைக்கிள் ஓட்டி ஓட்டி நல்ல உடலமைப்பைப் பெற்றது தானாம்.
பல்கேரியாவிலுள்ள பெர்னா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிசுலாவின் கராகஸ் கனடாவின் மாண்டிரியல் இஸ்ரேலின் டெல் அவிவ் என எல்லா நாடுகளிலும் வலம் வரும் அழகிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நாட்டில் இந்திய நாட்டைக் காணவே காணோம்.
அட ! என்னப்பா எத்தனை உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகளைப் பிரசவித்த நாடு இது. மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே.
சுஜாதா ரசித்த கவிதை
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, சுஜாதா ரசித்த கவிதை
40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, அறிவியல் ஆயிரம்
இது குறித்து பல்கலையின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்ததில், இங்கு "சைலோட்டம் நூடம்' எனும் அரிய வகை தாவரம் இருந்தது. இந்த அரிய வகை தாவரம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய முதல் சாற்றுக் குழாய்களைக் கொண்ட ஒரு தாவரம். "சைலோட்டாசியே' என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரம், "சைலோப்பிசைடா' என்ற கூட்டமைப்பில் காணப்படுகிறது. இதன் கிளைகள், இரு வேறு கிளைகளாகப் பிரிந்து காணப்படுவதும், வித்துக்களை உண்டாக்கும் தன்மை கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து காணப்படுவதும் இந்த தாவரத்தின் சிறப்பு தன்மைகள். இதற்கு வேர்கள் இல்லை,வேர்களுக்குப் பதிலாக, இரு கிளைகளாகப் பிரியும் மட்ட நிலத்தண்டு மட்டுமே உண்டு. இலைகள் சிறியவை. வித்துக்களை உருவாக்கும் பகுதிகள், தாவரத்தின் தண்டின் நுனி அல்லது பக்கவாட்டில் நேரடியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த அரிய வகை தாவரயினத்தை அழிவில் இருந்து பாதுகாக்க ஆய்வு செய்து வருகிறோம் என்று பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார்.

கோவை : பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள் இல்லாத அரிய வகை தாவரம், பாரதியார் பல்கலை வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள தாவர வகைகளை கணக்கு எடுக்கும் பணி துவங்கியது. கணக்கு எடுப்பதோடு, அதன் வரலாறு, தனித்துவம் குறித்தும் பல்கலையின் தாவரவியல் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வில், "சைலோட்டம் நூடம்' எனும் அரிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டது.
சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!!
சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர்
ஆனந்தராஜ் - சாராய வியாபாரம்
சிவகுமார் - ஓவியர்
ஜெய்கணேஷ் - காய்கறி வியாபாரம்
நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா
பாண்டியன் - வளையல் கடை
விஜயகாந்த் - அரிசி கடை
ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி
பாக்யராஜ் - ஜவுளிக்கடை
அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன் - உணவு விடுதி
பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ் - ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர்
பாலச்சந்தர் - கணக்காளர்
விசு - டி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விசை - ஓட்டல் பணியாளர்
மோகன் - வங்கி ஊழியர்
ராஜீவ் - ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்
தியாகராஜன் - இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன் - எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்து - மொழி பெயர்ப்பாளர்
சேரன் - சிம்சன் நிறுவன தொழிலாளி
சரத்குமார் - பத்திரிகை அலுவலக நிர்வாகி
நடிகைகள்
நடிகைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் விளம்பர பட நடிகையாகவும், மாடலிங்கிலும், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாகவும்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே வாய்ப்பு கிடைத்ததால் கலையுலக சேவை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.
மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, ஒரு மாறுப்பட்ட கற்பனை
அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,
என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…
“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…
அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….
நீ தான் நான் முதன்
முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…
“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்
காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.
“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…
“இப்போ என்ன?
உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?
” என்றாள்“க க க போ” என்றேன்..“முடியாது!
என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..
சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…
ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…
“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..
அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…
“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,
குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…
எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…
“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…
இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…
“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”
என்றேன்…
பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,
ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…
அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,
“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று….
…..தொடரும்
கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்
1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?
4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?
சில பாடல்களும் அதன் விளக்கங்களும் !!!
குறிச்சொல் சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல
சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
1) நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?
3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?
4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?
5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........
உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...சம்மதம்தானா ?
8)என்ன சத்தம் இந்த நேரம்
உயிரின் ஒலியாஅங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா
9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......
அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....
நம்ம பக்கமும் வந்ததுக்கு நன்றி சாமியோவ் அப்பிடியே ஓட்டையும் குத்திட்டு உங்ககருத்தையும் சொல்லிட்டு போங்க சாமியோவ்........
ஹைக்கூ கவிதைகள் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, ஹைக்கூ கவிதைகள்
என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
அதிசயம்
அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........
ஒவியன்
சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......
தனிமை
ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......
காகிதப் பூ
மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...
அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள்
அக்டோபர் 2, 1931.
ஐன்ஸ்டீன் எழுதியது..
பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!
என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.
அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.
உண்மையும் வியப்புடனும்,
உங்கள்,
ஆ. ஐன்ஸ்டீன்
நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள்
இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.
வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.
அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.
கோர்ட்டுக்குப் போன குதிரை !!!
தெரியுமா உங்களுக்கு ??????
-
வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில்
-
மூச்சும், முழுங்கவும் முடியும்..புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
-
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
-
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
-
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
-
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
-
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும். -
எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
-
. 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
-
சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
-
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
-
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
-
பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
-
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
-
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
-
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
-
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
-
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
-
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
-
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
-
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்
சில சுவையான உண்மை நிகழ்வுகள் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள்
- இந்திராவின் ஆட்சிக்காலம் அது.!!!
மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.
கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது
'' என்றார்.அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.
***************************** *******************************************
மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பேச்சில் நகைச்சுவை பொங்கும். ஒருமுறை கச்சேரி ஒன்றில் தமது பாட்டுக்குப் பொருந்தாமல் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த வித்வானைப் பார்த்துச் சொன்னார்: ""என் பாட்டுக்கு வாசிப்பா. நீ "உன்பாட்டுக்கு' வாசிச்சுக்கிட்டே போறியே.''
********************************** ****************************************
ஒரு முறை திருச்சிக்கு வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் காமராஜர். அவரை வரவேற்கக் கையில் மாலையுடன் காத்திருந்தார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர். அவரைக் கண்ட காமராஜர், ""படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட்றதுக்கு க்யூல நிககி்றீங்களே'' என்றார்.
********************************** ************************************
""சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்''- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.
********************************* ******************************************
v மனதைத் தொட்ட வரிகள் !!!
குறிச்சொல் அ முதல் ஃ வரை அம்மா, மனதைத் தொட்ட வரிகள்
Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்
Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்
Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்
Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்
Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா
Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.
Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே
Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
v சின்னச் சின்னத் தகவல்கள்.!!!

Ø அடிக்கடி தாடி, மீசை சேவ் பண்ணினா நெறய முடி வளரும்னு நெனச்சா அது உங்க முட்டாத்தனம்… இத நான் சொல்லலீங்க… அதிகம் படிச்ச டாக்டர்ஸ்…
Ø அந்த காலத்திலயே சாப்பாட பதப்படுத்தி டப்பால அடச்சு போருக்கு அனுப்பிச்சி வச்சாராம் நம்ம “மாவீரன் நெப்போலியன்”.
Ø உலகம் முழுக்க ஒரு வருஷத்துக்கு 40 லட்சம் டன் உப்பு தேவப்படுதாம்…
Ø லாட்டரிக்கு பேர் போன “பூட்டான்”ல சினிமாத் தேட்டரே கிடையாதாம்…
Ø ஆரஞ்சு நிறம் மனசுக்கு மகிழ்ச்சியத் தருமாம்.
Ø நம்ம டைரக்டர் அமீர் இது வரையும் அவர் எடுத்த படம் ஒன்னக்கூட பாத்தது இல்லியாம்.
Ø நடிகர் பிரகாஜ்ராஜும் நம்ம ராகுல் திராவிட்டும் ஒரே காலேஜாம். பிரகாஜ்ராஜ் சீனியராம்.
ரசித்த சில கிறுக்கல்கள்
குறிச்சொல் .kavithai, HAIKKU, kadhal kavithai, nadpu kavithai, tamil love poem, கவிதைகள்
நனைந்து பார்
அதன் சுகம் புரியும் உனக்கு. நீ வரும்வரை
என்னை
எவரும் கவனிப்பதில்லை
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது
உன்னோடு கூட வரலாம் நான்
* * * * *
காதலை விட காதலர்களே
உனை
தயவு செய்து சிரித்துவிடாதே
யாரிடமும்
******
நண்பனாக பழக இனிமையானவன் ,........
* * * * *
காற்றில்
* * * * *
மனிதர்கள் யாருமற்ற
உன் இதயக்
நிறைவேறாக் காதலால்
கவிதை - தபால் துறைக்கு அனுப்ப படாத கடிதம் !
உன் பெயரை
என் கோபங்கள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
வாழ்க்கையின் ரகசியம் புகைபோல்
வரும் வழியோரம்
* * * * *
நனைந்து பார்
அதன்
சுகம் புரியும் உனக்கு.
*
நீ வரும்வரை
என்னை
எவரும் கவனிப்பதில்லை
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது
உன்னோடு கூடவரலாம் நான்
*
காதலை விட காதலர்களே
உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்
*
நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை
தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்
ஜோக்ஸ்
குறிச்சொல் cinima joke, comedy, indru oru mokkai, joke, nagaisuvai, sirippu, sms joke, Tamil Kadi Jokes, ஜோக்ஸ்
***
பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.
***
ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே". உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.
* * * *
தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?
வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி
இருக்கேன்.
*****
வாத்தியார் :
உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவனை எழுப்பிவிடு.
மாணவன் :
அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?
*****
டைரக்டர் :
இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
*****
மனைவி :
(கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
* * * * *
மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் :
ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?
****
ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.
****
நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் :
டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு. நபர் : ??!!
****
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 1 48766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.
*******
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
*******
என்ன சமையலோ ?
கணவன் : இன்னிக்கி என்ன சமையல்மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு
*******
முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.
&& 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க, சொந்த வீடுதான் இருக்கு.
*******
ஒருவர் உங்கள் மேல் கல்லை வீசினால், நீங்கள் அவர்மேல் பூவை வீசுங்கள்ஆனால்,மறுபடியும் அவர்கள் கல்லை வீசினால், ஒரு பூந்தொட்டியை தூக்கி எறியுங்கள். என்ன வில்லத்தனம்?
*******
&& 1 : உங்கள் சொந்த ஊர் எது?
*******
நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. கணவன் தொலைபேசுகிறான்.கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?
சிந்தனை துளிகள் !!!!

ஊர் ஊராகச் சுற்றி உபதேசம் செய்து விட்டு, தனக்கென்று தலை வைத்துப் படுக்க ஓர் இடமில்லாமல், கடைசியில் சிலுவையில் அறையுண்டு இறந்த ஏசு நாதரை வெற்றியாளர் என்று சொல்லவேண்டுமா, தோல்வியாளர் என்று சொல்லலாமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்து, கால் நடையாகக் காடு மேடெல்லாம் சுற்றி, கடைசியில் இரு வகுப்பினரும் ஒருவரை ஒருவர் கோரமாகத் தாக்கிக்கொண்டிருந்த நிலையில் குண்டு பட்டு இறந்தாரே, அந்த காந்தியடிகள் வெற்றியாளரா, தோல்வியாளரா? அவ்வளவு பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம். நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியாளராகக் கருதப்பட வேண்டுமென்றால், எந்த உரைகல்லில் சோதித்துக் கொள்ளலாம்?
ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்:
● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது
● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது
● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது
● இயற்கையை ரசிப்பது
● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது
● ஓர் ஆரோக்யமான குழந்தை
● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது
● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது
● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது
இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே.