காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!

24
வெற்று கிண்ணமாய் இருந்த
என் வாழ்வை நிறைத்து கொள்ளவென
நீயாய் வந்தாய்
ஒரு நொடிதான் ..
மறுநொடியே கனவானது அந்த
அழகிய நிஜம் ...
 ணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம் !!!

15


சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?
 வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1930-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம். இதை ஒட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



தேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 6 மணிஇடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை


ரவேற்புரை: பத்திரிக்கையாளர் பாரதி தம்பி



ருத்துரை:



எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யாவழக்கறிஞர் சுந்தர்ராஜன்பெண்ணியலாளர் ஓவியா‘தலித் முரசு’ புனித பாண்டியன்ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சிகொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்



கேள்வி நேரம்: விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.

ன்றியுரை: பாஸ்கர்,  கீற்று.காம்


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 24 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -3 !!!

12

னைவருக்கும் வணக்கம் ."இன்று ஒரு தகவாலில் சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய ப திவுகள் கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம்
ட்டம் பற்றிய இறுதிப்  பதிவில்  நமக்குத் தெரிந்ததெல்லாம் விமானங்கள் மட்டும்தான் மனிதர்களை தாங்கிக்கொண்டு விண்ணில் பறக்கும் என்பதுதானே ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இன்று நாம் பறக்கவிட்டு பரவசப்படும் இந்த பட்டத்தில் மனிதர்கள் பரந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?? உண்மைதான் இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில் பட்டம் மீண்டும் உங்களின் இதயங்களை சுமந்து மகிழ்ச்சியில் விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் என்று முடித்திருந்தேன் இதோ மீண்டும் உங்களின் இதயங்களை விண்ணை நோக்கி பறக்கவிடப்போகிறது பட்டம் பற்றிய இந்த தகவல்கள் . 
19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் 20ஆம் நூற்றாண்டில் இராணுவப் பயன்பாடுகளுக்கும் பட்டம் உதவியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பட்டங்கள் இராணுவ ஒற்றர்களை ஏற்றிக்கொண்டு உயரப் பறந்திருக்கின்றன. முதல் உலகப்போரின் போது பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய இராணுவங்கள் பட்டங்களைக் கொண்டு எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகள் பரிமாறிக் கொள்ளவும் செய்தன. ஜெர்மானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ வீரனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் பட்டங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தது.
 ரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படையில் பட்டங்களின் பல்வேறு பயன்கள் நடைமுறையில் இருந்தன. ஹாரி சாவ்ல்லின் பேரேஜ் பட்டம், இலக்கிற்கு மிக அருகில் விமானங்கள் பறக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்தன. விமானி கடலில் காணாமல் போனால் கிப்ஸன்-கேர்ள் எனும் பெட்டிப் பட்டத்தைப் பறக்க விட்டு உதவியை நாடினர். பால் கர்பர் பட்டத்தில் இயக்கும் தன்மையுடனான வைரம் இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது (1939-1945) பட்டங்கள் துப்பாக்கி இலக்குகளாக இருந்து பயிற்சிக்கு உதவியிருக்கின்றன. பிரெஞ்சு இராணுவப்பட்டங்கள் பட்ட ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். அதன் தூக்குதிறன் மற்றும் நிலைத்தன்மை மிக உயரப் பறப்பதற்கு ஏற்றவை. 1903 நவம்பரில் சாமுவேல் ஃப்ராங்க்லின் கோடி என்பவர் பட்டங்களால் செலுத்தப்பட்ட கப்பலில் இங்க்லிஷ் கால்வாயைக் கடந்திருக்கிறார் .
விமானத்தின் அறிமுகம் இந்தப் பட்டங்களின் பயன்பாட்டைப் பழைமையாக்கி விட்டன. அதன் பிறகு தான், பட்டம் விடுதல் வெறும் பொழுதுபோக்காயிற்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பொழுதுபோக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நைலான், ஃபைபர் கிளாஸ், கார்பன் கிராஃபைட் போன்றவற்றைக் கொண்டு மிக உறுதியான பட்டங்களைச் செய்தனர். இவை குறைந்த எடையுடன் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை. நவீன பட்டங்களும் கண்டுபிடிக்கப் பட்டன. பீட்டர் லின் என்பவர் 1980களில், ந்யூஸிலந்தில் ஒரு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பட்டத்தை உருவாக்கினார். இது இயந்திரத்துடன் கூடியது. 1999ல், ஒரு குழுவினர் பட்டத்தைக் கொண்டு வடதுருவத்தில் ‘ஸ்லெட்ஜு’களை இழுத்திருக்கிறார்கள்.
19910ல், பீட்டர் பவெல் என்பவர் பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல் தீவிர விளையாட்டாகவும் பட்டத்தை விடலாம் என்று கருதினார். அப்போதிலிருந்து பட்டங்களில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டன. நுட்பமான வித்தைகள் செய்து காட்டினர். வேகமாகப் பறக்க விட்டனர். பல போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டனவாம் . என்ன நண்பர்களே இதுநாள் வரை பொழுது போக்கும் ஒரு விளையாட்டாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பட்டத்திற்குப் பின்னால் புதைந்து கிடக்கும் இது போன்ற அறிய தகவல்களை அறிந்த உங்களின் இதயங்களும் நூல் இன்றி மகிழ்ச்சியில் விண்ணில் உயரத்தில் பறந்திருக்கும் என்று நம்புகின்றேன். மறக்கம்ல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

மௌனம் பேசும் வார்த்தைகள் !!!

29

ண்கள் இரண்டும் பேசும் போது
உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன
இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது
இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும்
அந்த நான்கு காதுகளிற்கும்
கேட்டவில்லை .!
ன்றைய நட்புக்கும் ,காதலுக்கும்
ஒரு நூலிடையே வித்தியாசம்
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 23 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -2 !!!

20

  னைவருக்கும் வணக்கம் ."இன்று ஒரு தகவல் 22 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய PART - 1 பதிவு கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம் .


ட்டம் பற்றிய முதல் பதிவில் இன்று உலகத்தில் கொடிகட்டிப்பறக்கும் பல துறைகள் இந்த பறக்கும் பட்டத்தினால்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா ? உண்மைதான் இதைப்பற்றிய விரிவான பல அறிய தகவல்கள் மூலம் உங்களை வியப்பில் ஏற்ற மீண்டும் இந்த பட்டம் எனது அடுத்தப் பதிவில் உங்களின் இதய விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் என்று முடித்திருந்தேன் இதோ மீண்டும் உங்களின் இதயங்களை விண்ணை நோக்கி பறக்கவிடப்போகிறது பட்டம் பற்றிய இந்த தகவல்கள்


திகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் பெரிதாக இருந்தன என்று வரலாறு சொல்கிறது. சில வேளைகளில் எதிரிகள் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வீசியெறியவும் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன.


ன்று நாம் இ -மெயிலிலும் . SMSலும் எளிதாக பரிமாறிக்கொள்ளும் செய்திகளை ஒரு காலத்தில் பட்டத்தில் கட்டி பறக்க விட்டு இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?ஒருமுறை லியாங் முடியாட்சியில் வூதியின் பேரரசர் ஸியாவ் யான் (கி.பி 464-549) நான்ஜிங்கின் தாய்ச்செங்கில் ஹோவ் ஜிங்கின் கீழிருந்த கலகக்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டார். அப்போது பேரரசர் ஒரு பட்டத்தில் தான் அவசர உதவி கேட்டு செய்தி அனுப்பியிருக்கிறார். உதவியும் வந்திருக்கிறது!


தூரத்தைக் கணக்கிடவும், காற்றின் வேகத்தைக் கண்டறியவும், மனிதனை உயரப் பறந்து கூட்டிப்போக, செய்திகள் அனுப்ப, தொலைத் தொடர்புக்கு, இராணுவப் பயன்பாடுகளுக்கு என்றும் பல்வேறு விஷயங்களுக்குப் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. மிகப்பழைய சீனப்பட்டம் தட்டையாக இறக்கைகளில்லாமல் தான் இருந்தது. பிறகு, வாலில்லாமல் இறக்கைகளுடன் உருவாகின. அதன் பிறகு, ஊதல்கள் மற்றும் நூல்களை இணைத்துச் செய்தார்கள். இவ்வகைப் பட்டங்கள் பறக்கும் போது இனிய இசையை உருவாக்கின.


ப்பொழுதெல்லாம் ஏற்படும் சண்டைகளை கட்டுக்குள் கொண்டு வர பல ஆயிதங்களைப் பயன்படுத்துகிறது ஒவ்வொரு நாடுகளும் ஆனால் கி.பி 600ல் ஒரு முறை கொரியாவின் ஒரு கலகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர தளபதி கிம் யுன்-ஸின்னுக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால், அவரது படைகள் சண்டையிட மறுத்தன. அப்போது வானில் ஒரு எரிநட்சத்திரம் விழுவதைக் கண்டனர். முதலில் அதை துர்சகுனம் என்று கருதினர். அவர்களை அவ்வாறு நம்ப வைக்க தளபதி தான் ஒரு பட்டத்தில் நெருப்புப் பந்தை இணைத்துப் பறக்கவிட்டார். படை வீரர்கள் விழுந்த நட்சத்திரம் மேலேறிச் சென்றதைக் கண்டது நல்ல சகுனமாகக் கருதி உற்சாகமாகப் போரிட்டு கலகக்காரர்களை வீழ்த்தியிருக்கிறார் . (618-907) மத்தியில், சீனச்சமூகம் அப்போதுதான் பட்டுக்கு பதிலாகக் காகிதம் உலகத்தில் முதன் முதலில் பயன்படுத்ப்பட்டதாம் .கி.பி 1232ல், மங்கோலிய எல்லையில் பட்டங்கள் அம்புகள் மற்றும் வில்களுடன் வீரர்களை உயரே பறக்க விடப் பயன்பட்டிருக்கின்றன. அங்கிருந்து எதிரிகளைத் தாக்கியிருக்கிறார்கள்.


ரோப்பாவிற்குப் பட்டத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமை முதன் முதலில் மார்கோ போலோவிற்கே சேரும் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பட்டத்தை மார்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டு போனார். பின்னர், 1500களில் ஐரோப்பாவிற்குப் பரவியது. அதன் பிறகு, ஐரோப்பியர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் பட்டம் பல்வேறு வழிகளில் உதவிற்று. கடல் வணிகத்தின் போது வேண்டாதவருக்குத் தண்டனையளிக்க, மீன்பிடித்துறையில் மீன்பிடிக்க, மதக் கொண்டாட்டங்களில் அலங்கரிக்க, வானிலையைக் கணிக்க, காற்றின் வேகத்தை அறிய என்று ஏராளமான பயன்பாடுகள் பட்டத்திற்கு இருந்திருக்கின்றன.


த்துடன் நின்று போகவில்லை இந்த பட்டத்தின் சாதனைகள் இன்று உலக மக்கள் தொகையையும் பின்னுக்குத் தள்ளும் அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் போக்குவரத்துதுறையிலும் பட்டம் உதவியிருக்கிறதென்றால் சிலரால் நம்ப முடியாமலிருக்கலாம். பட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சக்தியை ஆய்ந்தறிந்தவர் ஜியார்ஜ் பொக்கோக். 1822ல், இவர் ஒரு ஜோடி பட்டங்களைக் கொண்டு ஒரு வண்டியை ஒரு மணி நேரத்தில் 20 மைலுக்குச் செலுத்தியிருக்கிறார். அவரின் சில பயணங்கள் ஒருமணி நேரத்தில் 100 மைல் வரையிலும் கூட இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஒரு வண்டியில் பூட்டியிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தே சாலைவரி விதிக்கப்பட்டது. ஆகவே, இவரின் இப்பயணங்களுக்கு வரி விதிக்கப்பட வில்லை!


ன்று வானிலையை ஆராய்வதற்கு அறிவியலால் ஆயிரம் கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கிறது . ஆனால் நமது முன்னோர்கள் இதே வானிலையை ஆராய்வதற்கு பட்டங்களைப் பயன்படுத்தினார்கள் என்றால் நம்புவீர்களா ? 1782ல், பென்ஜமின் ஃப்ராங்க்லின் எனும் அமெரிக்க விஞ்ஞானி மின்னலையும் இடியையும் ஆராய்ந்தறிய பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் பட்டங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளின் மூலம் காற்றுவெளியில் இருந்த மின்சாரத்தை ஆராய்ந்தார். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மற்றும் ரைட் சகோதரர்கள் ஆகியோரும் பட்டங்களைக் கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெட்டி வடிவிலான பட்டங்களைக் கொண்டு 1890களில் துவங்கி 40 ஆண்டுகளுக்கு காற்றின் வேகம், வெப்பம், அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்.இன்றும் மீனவர்கள் தூண்டிலைக் கடலுக்குள் விட பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். புகைப்படக்கலைஞர்கள் பட்டத்தின் உதவியுடன் மேலிருந்து பருந்துப் பார்வையில் புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.


ன்று நம்மை எல்லாம் ஆகாயத்தில் பறக்க செய்து பல ஆயிரம் கிமீ தொலைவுகளை எளிதாக கடக்க செய்யும் இந்த விமானங்கள் உருவாவதற்கு ஒரு உந்துதலாக பயன்பட்ட முக்கியக் காரணிகளில் பறக்கும் பட்டமும் ஒன்று என்றால் நம்புவீர்களா ? .1894 நவம்பர் 12ல், லாரென்ஸ் ஹார்கிரேவ் என்பவர் தனது பட்டத்திலேறி நிலத்திலிருந்து எம்பிச் சிறிது தூரம் பறந்தார். அன்றே அவர் விமானத்தைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தார் என்று சொல்லலாம். மேலும் நுட்பமாக ஆராய்ந்து வளைந்த இறக்கைகள் கொண்டதும் விசையுடனானதும் என்று பல்வேறு வகைப் பட்டங்களை உருவாக்கினார். அத்துடன் வானிலைக் கருவிகளும் புகைப்படக் கருவிகளையும் பட்டங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடித்தார். தன் கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெறத் தவறி விட்டார். மனிதகுல மேன்மைக்குப் பயன்படட்டும் என்று கருதிவிட்டார். ஆகவே, அவரது ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வில் இறங்கி இலாபம் ஈட்டியோரைத் தாக்கிப் பேசினார்.
மக்குத் தெரிந்ததெல்லாம் விமானங்கள் மட்டும்தான் மனிதர்களை தாங்கிக்கொண்டு விண்ணில் பறக்கும் என்பதுதானே ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இன்று நாம் பறக்கவிட்டு பரவசப்படும் இந்த பட்டத்தில் மனிதர்கள் பரந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?? உண்மைதான் இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில் பட்டம் மீண்டும் உங்களின் இதயங்களை சுமந்து மகிழ்ச்சியில் விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் .


 பட்டம் பறப்பது மீண்டும் தொடரும்






ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!!

33
னிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !.
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !
 நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !
தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .

ன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
 நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 22 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1

22

னைவருக்கும் வணக்கம் . இன்று நம்மில் பலர் பல காரணங்களால் பல கடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை அதில் ஒன்று குழந்தை பருவம் என்றும் சொல்லலாம். சிறு வயதில் நம்மை புன்னகை சிந்த வைத்த நிகழ்வுகள் எத்தனை ,எத்தனையோ ! பலர் தடுத்தும் அதைத்தான் செய்வேன் என்று பிடிவாதத்துடன் செய்த தவறுக்களும் பல .ஆனால் இன்று அதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் அளவிற்கு நம்மில் பலருக்கு நேரம் இல்லை .
டித்து பட்டம் பெற்று இன்று பலர் பல சாதனைகள் செய்திருக்கிறார்கள் .படிக்காமல் பலர் பட்டம் பெற்று இருக்கிறார்கள் .இன்னும் பலர் இவைகள் இரண்டும் இன்றி தங்களது வாழ்வை செம்மையாக வழி நடத்துகிறார்கள் . ஆனால் இங்கு அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வானில் பறக்கும் பட்டம் அறிமுகம்தான் .படித்து வாங்கிய பட்டத்தை பற்றி பலருக்கு நன்றாகத் தெரியும் .அறியாத குழந்தை வயதில் நம்மை மகிழ்ச்சியின் எல்லையை கடக்க செய்த விளையாட்டுகளில் பட்டம் பறக்க விடுவதும் ஒன்று .அந்த பட்டம் பற்றி இன்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று பார்த்தால் பட்டம் என்றால் பறக்கும் இதுதான் அதிகமானோர் சொல்லும் ஒரே பதிலாக இருக்கும் . அதுதான் இன்று அந்த பட்டம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து உங்களின் இதயங்களையும் சற்று நேரம் சுதந்திரமாக விண்ணில் பறக்காவிடப்போகிறேன் .
முதன்முதலில் பட்டங்களைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.சீனாவின் கண்டுபிடிப்பான பட்டம் நவீன விமானங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. காற்றை விட லேசான பலூன் முதன்முதலில் 1783-லும் விசை விமானம் 1903-லும் பறக்கவிடப் பட்டன என்பார்கள். இவை சீனப்பட்டத்தின் வரலாற்றை ஒப்பு நோக்கினால் மிகவும் சமீப காலங்களில் நடந்தவை என்றே சொல்ல வேண்டும்.16-17ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் பட்டம் விற்கவும் வாங்கவும் பட்டிருக்கின்றன. சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பட்டம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது.

சுமார் கி.மு 200ல், ஹ்ஹன் முடியாட்சியின் போது சீனத் தளபதி ஹன் ஹ்யூஸின் ஒரு நகரின் கோட்டைச் சுவரைத் தாண்டிப் பறந்த பட்டத்தை வைத்து, மாளிகையின் அரண்களின் தூரத்தையும் எண்ணிக்கையையும் அறிந்தார்களாம் . அதன் பிறகு, நகருக்குள் புகுந்து ஆக்கிரமிக்கவும் வென்றிடவும் செய்தார்களாம் . முதன்முதலில் பட்டம் பறக்கத் தொடங்கியதற்கான சான்றுகள் இங்கிருந்துதான் தொடங்கின .

ரு முறை ஒரு சீன விவசாயி பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நூலைக்கட்டிக் கொண்டிருந்தான் என்றும் பலத்த காற்று அடித்ததில் முதல் பட்டம் பிறந்தது என்று சீனப்புராணக்கதை ஒன்றும் சொல்வதுண்டு. பட்டம் ஆசியாவிற்குள் பரவி, பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறு கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டன. பட்டம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமில்லை. அது விஞ்ஞானத்துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் பங்களித்திருக்கிறது. பட்டத்தைப் போன்ற வடிவில் தான் முதன்முதலில் விமானங்கள் தயாராகின.பட்டங்களுக்கான அருங்காட்சியகம் அகமதாபாத்திலும், ஜப்பானில் டோக்யோ நகரிலும் உள்ளது. உலகப் பட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் நாள் அகதாபாதில் கொண்டாடப்படுகிறது. சுமார் 2,500 கிலோ எடையுள்ள பட்டம் ஜப்பானில் பறக்க விடப்பட்டது.அமெரிக்காவில் சுமார் 5,400 மீட்டர் உயரத்தில் பட்டம் பறக்க விடப்பட்டது.

திகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் ............


ன்று உலகத்தில் கொடிகட்டிப்பறக்கும் பல துறைகள் இந்த பறக்கும் பட்டத்தினால்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா ? உண்மைதான் இதைப்பற்றிய விரிவான பல அறிய தகவல்கள் மூலம் உங்களை வியப்பில் ஏற்ற மீண்டும் இந்த பட்டம் எனது அடுத்தப் பதிவில் உங்களின் இதய விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் .

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

மேலும் வாசிக்க.. >>

சிறகு தொலைத்த பட்டாம் பூச்சி !!!

35

தோற்றுப் போகிறாய்
என்று
தெரிந்தும் மீண்டும்
முயற்சிக்கிறாய் என் இதயத்தில்
இடம் பிடிக்க
ஆனால்
நானோ மீண்டும்
ஒரு ரோஜா
இந்த
வலியின் கனலில்
உயிர் இழக்க விரும்பாதவளாய் .!

ட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன் அவனுடன்
ஆனால் இன்று
சிறகுகள் தொலைத்தவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான்...!
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன்...
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல்.....!

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

26

 தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! 
 வசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன ! 

பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! 

ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!

ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 21 - மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!

28

ம் தினசரி வாழ்க்கை முறைகளில் அறிவியலின் ஆதிக்கத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கணக்கிட்டால் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் நமது இயற்கையான ஆயுட் காலத்திலிருந்து அறுபது விழுக்காடு இந்த உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள செயற்கையான கண்டுபிடிப்புகள் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. இப்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு உலகத்தில் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலையில் மொத்தம் ஆயிரத்திற்க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இது அனைத்திலும் நமக்கு பயன் தரும் விடயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளால் பாதிப்புகள் என்ன ? அதைப் பற்றி எந்த சிந்தனையும் இன்றியே இன்றைய அறிவியல் வளர்ச்சி தினந்தோறும் வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. பிரச்சனைகள் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே அனைவரின் மனதிலும் குடியேறியுள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

அதன் அடிப்படையில் பார்க்கத் தொடங்கினால் இப்பொழுது உலகத்தில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் பிரசவிக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரானிக் சாதனம் மொபைல் என்றுதான் சொல்லவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு மொபைல் போன்கள் முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே

 இன்றைய நிலையில் நமது பார்வையை சற்று மொத்த உலகத்தை நீக்கி விரித்தால் நமது கண்களில் அதிகம் காட்சிதரும் ஒரே விசயம் இந்த மொபைல் போன்கள் என்று தெரியவரும் . அந்த அளவிற்கு உலகத்தில் இன்று அதிகமாக பயன்படுத்தப்படும் எலெக்ட்டிரிக் சாதனங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது இந்த மொபைல்போன்கள். ஒருவேளை இன்று இந்த மொபைல் போன்களின் சேவை நிறுத்தப்பட்டால் உலகத்தில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் இருந்து நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் ஆதிக்கம் எந்த அளவிற்கு மக்களுடன் ஒன்றிப்போய்விட்டதென்று.

ப்பொழுதுக்கூட சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆய்வின் அறிக்கை அறிய வந்தது. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.

மெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (EWG) சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.



வ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

ங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.

துபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

மெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.



சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

ஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

மெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

ன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2010 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 78,000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர். கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐ.நா கூறி வருகிறது.

மொபைல் போன்கள் தங்களது செய்திகளை நினைத்த நேரத்தில் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு என்பது மறைந்து இன்று தங்களது பணத்தின் அளவையும் வசதியையும், சுற்றி இருக்கும் மக்களுக்கு அறிவிக்கும் ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போய்விட்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். நாம் சந்திக்கும் எவரிடமெனும் மொபைல் போன்கள் இல்லை என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும் ஒரு கொடிய எண்ணம் இன்று பலரின் மனதில் குடியேறத் தொடங்கிவிட்டது. இந்த பதிவின் வாயிலாக யாரும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இல்லை என் நோக்கம். நமது தினசரி வாழ்வில் நாள் ஒன்றிற்கு நம்முடன் அதிகமாக உறவாடும் ஒரு சாதனம் மொபைல் போன் என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட இந்த அறிவியலின் அறிய கண்டுபிடிப்பால் நமக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளை அறியாத பலருக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்.



தினம் தினம் ஒரு புதிய மாடல் வந்துகொண்டிருக்கிறது மொபைல் போன்களில் இது போன்று கவர்ச்சிகரமான பல மாடல்களையும் அதனால் ஏற்படும் ஒரு சில பயன்பாடுகளையும் மட்டுமே மக்களின் மத்தியில் விளம்பரம் செய்து அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பூசி மறைத்து விடுகிறது பல வளர்ந்த நிறுவனங்கள். அதையும் நம்மைப் போன்றோர் மிகப்பெரிய சாதனைகளாக எண்ணி கை தட்டிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் நின்று விடவில்லை இந்த மொபைல் போன்களால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆபத்துக்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது என்பது இது வரை வெளியாகியுள்ள ஆய்வுகளின் அறிக்கை என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அதிர்ச்சி தரும் ஒன்றாகிப்போனது.

 ஆபத்து என்று தெரிந்தும் அதைத்தான் பயன்படுத்துவோம் என்று இன்னும் அறியாமையில் மூழ்கிப்போய் தங்களுக்குத் தாங்களே ஆபத்துக்களை ஏற்படுத்தி கொள்ளும் அவல நிலையில்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .

ப்பொழுதாவது யோசித்ததுண்டா நாம் ? தினமும் வியர்வை சிந்தி நிலத்தில் பாடுபடும் விவசாயி தொண்ணூறு வயது வரை எந்த நோய்களும் இன்றி மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஆனால் அலுவலகத்தில் ஏசியில் வேலைபார்க்கும் யாரும் இப்பொழுதெல்லாம் ஐம்பது வயதைத்தாண்டி வாழ்வதே அதிசயமாக இருக்கிறது. காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் பல விலை உயர்ந்த சாதனங்கள்தான் அனைத்திற்கும் காரணம். சில தினங்களுக்கு முன்பு கூட ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருவதாக ஒரு செய்தி அறிந்தேன். மனித இனத்தையும் தாண்டி விலங்குகளையும் இயக்கும் வகையில் இந்த மொபைல் போன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இன்னும் காலப்போக்கில் மனித இனத்தின் அழிவிற்கு இந்த மொபைல் போன்களே ஒரு மிகப்பெரிய அணுகுண்டை போன்ற ஒரு ஆயுதமாகவும் மாறிப்போகலாம் என்றால் அது மிகையாகது.
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

துளியில் தெறிக்கும் சொர்க்கம் !!!

26

ம்மா ......
உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான் தாயாகும் வரை....
அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை ஏந்தியபோது
எதுவுமே உணரவில்லை...பேரின்பத்தை தவிர,
 
முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென ..
இப்போது வருந்துகிறேன் அதற்காக,,,
என் மகள் தந்த முத்தத்தில் பட்ட
எச்சில் துளியில் தெரிகிறது
என் சொர்க்கம்........


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>