மல்லிகைகள்

நார்களில் விலங்கிட்டு கூந்தலில்
சிறைபட்ட சுதந்திரப் பூக்களே!
ஆயுள் தண்டனையை
மரண தண்டனையாய் மாற்றியவள்
அருகில் வந்து அழகாய் இருக்கா!
என்று கூந்தலை காட்டினாள்
சோகத்தில் சிரித்தன
சுதந்திர மல்லிகைகள்.
மரணத்திலும் மணம் வீசும்
மல்லிகை மலர்களே!
இறப்பையே பிறப்பாய் கொண்ட
உங்களைப் பார்த்தும்
இறப்பையே மறந்துவிட்ட
நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

0 மறுமொழிகள் to மல்லிகைகள் :