இன்று ஒரு தகவல் 9 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் !!!

41

ன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் . இந்த ஒளிமயமான உலகம் ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது . அந்த அறியாமை இருட்டை தான் கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து . கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தான் ஒரு சரித்திர நாயகன் அவர்தான் சாக்ரடீஸ் .
சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.. அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. "கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்" என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை .


கிரேக்க நாட்டின் த்த்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.

எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்
.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.

இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

தென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை. அன்றைய மனிதனின் அறிவு அப்படி.
நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.

மூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாமல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந்தார். அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர் .


கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த
மூடக்கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது . அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான் . இளைஞர்களைக் கெடுக்கிறார் , கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார் , வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார் , புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .

இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்குவிசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் .
நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .

இதன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது . மரணம் , மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்யத் . தொடங்குகின்றனர் .
                                                            
                                                         கேள்வி சரித்திரம் தொடரும் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

                                                                                                                           
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 8 - ஹிட்லர் இறுதி நிமிடங்கள் !!!

53


டந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
வரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் ஹிட்லர் .

ரு முறை ,

(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு
நேசநாடுகளின் படைகள் பெர்லின் நகரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் , ' தோல்வி நிச்சயம் ' என்கிற காலகட்டத்தில் ஹிட்லர் தான் செய்த தவறுகளை, கொடூரங்களை, கொலைகளை உணர்ந்தாரா ?! இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது....
ந்தக் கடைசி நாட்கள்....மார்ஷல் ஷுகோவ் தலைமையில் ரஷ்ய ராணுவ டாங்கிகள் பெர்லின் தெருக்களில் நுழைந்து விட்டன. இன்னொருபுறம் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் நூற்றுக்கணக்கான டாங்கிகளுடன் பெர்லின் நகரில் ஓடும் புகழ்பெற்ற ரைன் நதியைக் கடந்தார்.

பாதி பாலத்தில் டாங்கியிலிருந்து கீழே குதித்த பேட்டன் ஓரமாக நின்று பாண்ட் 'ஜிப் 'பை கழற்றியது கண்டு மற்ற ராணுவ வீரர்கள் சற்றுத் திகைத்தனர். பாலத்தின் மேலேயிருந்து பேட்டன் , ரைன் நதியின் மீது சிறுநீர் கழித்தார் ! பிறகு திரும்பிப்பார்த்து புன்னகையுடன் ' இது என் நீண்ட நாள் கனவு !' என்று அவர் சொல்ல , அமெரிக்க வீரர்கள் பலமாகச் சிரித்தார்கலாம்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

பரிதாபமாய் என் தாய் மண் !!!

63

நான் நடை பயின்ற கடற்கரையில்
நான் பொறித்த என் காலடித் தடங்களை
போர் அலை வந்து முற்றாக அடித்துச்
சென்றிருந்தது.......

நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........

பொன்கதிர் விழைந்த கழனிகளில்
மலிந்து கிடக்கின்றது
பிணங்களின் எச்சங்கள்....

காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்....

ன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??

பாடம் பயின்ற பள்ளிக் கூடங்கள்
காலம் செய்த கோலத்தால்
அகதி முகாம்களாயோ இல்லை
அந்நியனின் பாசறை ஆகவோ
மாறி தன் கோலம் மாறி இருந்தது....

முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....

குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

67

ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தொடர் பதிவு எழுதிட இங்கு என்னை அழைத்த நண்பர் சங்கவி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேருந்துகள் எத்தனையோ கதைகளையும், சுமைகளையும், தினம் தினம் அரங்கேற்றும் ஒரு நாடகப்பட்டறை. எத்தனை எத்தனையோ நிழல்கள் நிஜங்களாகவும், நிஜங்கள் நிழல்களாகவும் மாறும் ஓவியக்கூடம்...!பலதரப்பட்ட மனிதர்களை சுமந்து சென்றாலும் சேற்றில் பூத்த செந்தாமரையாய் காதலும் அங்கே பூக்கத்தான் செய்கிறது. பல காதல் தோற்றாலும் சில காதல் மட்டும் ஜெயித்து வெற்றிநடை போடுகிறது.
காலையிலோ, மாலையிலோ ஓர் ஓரமாய் உட்கார்ந்து உன்னிப்பாக பார்த்தால் சலனமே இல்லாத முகங்கள்..! கவலை தோய்ந்த முகங்கள்...! மகழ்ச்சியான முகங்கள்...! பரபரப்பாய் சில முகங்கள்..! இவற்றிற்கு நடுவே காதல் பூத்த முகங்கள் மட்டும் வித்தியாசமாய் தெரியும்..! வெயிலில் வாடி, வேர்வையில் தோய்ந்துவிட்ட போதிலும் கூட... அப்படி ஒரு பிரகாசம்...! காதல் என்னும் ரசாவதத்திற்கே உரிய சிறப்பு அது.!
அது சரி, அதில் கூட பலவகை, வென்றுவிட்ட காதல்களும்..! வெல்லப்போகும் காதல்களும்..! வெல்லுமா..? எனத்தெரியாத காதலுமாய்.. களை கட்டும் பேருந்து...! காதல் பார்வைகளும் பலவிதம் என அங்கு தான் கண்டு கொண்டேன்..! கடைக்கண்ணில் காதல் ரசம் சொட்டும் பார்வைகள்..! முறாய்ப்புப் பார்வைகள்..? செருப்பு வருமா..? சிரிப்பு வருமா..? என்று தெரியாத பார்வைகள்.... பயம் கலந்த பார்வைகள் என பலவகை....

இதெல்லாம் முதற்கட்டம் (ஸ்ஸ்..அப்பாடா இன்னும் இருக்கிறதா..? என திட்டுவது கேட்கிறது.. என்ன செய்ய இருக்கிறதே!)

வையெல்லாம் தாண்டி பச்சை கொடி காட்டி ஜெயித்த காதல் இருக்கிறதே... இருவர் முகத்திலும் காதல் வழிகிறதோ.. இல்லையோ.. அசடுமட்டும் நன்றாக வழியும். ஸ்பீட் ப்ரேக் போட மாட்டர்களா..?  என்று மனதுக்குள் ஏங்கினாலும் விலகியே நிற்பதாய் பாவனை வேறு! இங்கு ஊடல்களும் அவ்வப்போது தோன்றும் குட்டிக் கவிதையாய்...!

அட , யாரவர்கள் ? காதலர்போல் தெரிந்தாலும் எதிர் எதிர் ஓரங்களில் ...கண்கள் மட்டும் கதை பேசியவாறு....

ல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு பருவத்தில் ஒருகாதல் முதன் முதலில் கதவை தட்டி விட்டு போகும் ..சில காதல் தொடர்கதையாய்....பலகாதல் விடுகதையாய் ஆகிவிடும் .ஆனாலும் அந்த உணர்வு மட்டும் அப்படியே பசுமரத்து ஆணியாய் ஆழப் பதிந்துவிடும்.அப்படி என் வாழ்விலும் ஒரு தருணம்...அதை உணர நீங்களும் பதினைந்து வருடம் என்னோடு பின்னோக்கி பயணிக்க வேண்டும்.வருகிறீர்களா?

மக்கு ஏதோ ஒன்று பழக்கப்பட்டு போய்விட்டால் பிரிய மனம் வராது.அது எத்தகைய விடயமாயினும் சரி .அப்படித்தான் எனக்கு அந்த பேருந்தும் ஏனோ பிடித்து போயிற்று.தினமும் அதே பேருந்தில் தான் என் பயணம்.அதில்வரும் முகங்களும் பழக்கபட்டதாய் ஏதோ ஒரு அன்னியோன்யம்.என்னவாயிற்றோ தெரியவில்லை சில நாட்களாக அந்த பேருந்து வருவது நின்றுவிட்டது.அன்றும் காத்திருந்து காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடனும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என்ற கட்டாயத்தினாலும் புன்னகையை தொலைத்துவிட்ட மலராய் அதே வழியில் செல்லும் வேறொரு பேருந்தில் என் பயணம் தொடங்கியது.
ந்த பேருந்து பயணம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாக மாறப்போவது தெரியாது ஒரு விசனத்துடன் பயணித்து கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் அவளை பார்த்தேன். சில்லறை சிதறி விழுந்தாற்போல் அவள் புன்னகை... நெடுநேரம் சிரித்துக்கொண்டும் தோழிகளுடன் கதைபேசிக்கொண்டும் இருந்தாள்.என்னுள் ஏதோ படபடப்பு...அத்தனை கூட்டத்திலும் அவள் அருகில் செல்ல என் குட்டி இதயம் அடம் பிடித்தது.


ருவாறு கூட்டத்தை நெட்டி தள்ளி கோவப்பார்வைகளையும் முணு முணுபுக்களையும் அலட்சியம் செய்தவாறே அவள் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கு அருகில் சென்றேன். இன்னும் ஓயவில்லை அவள் சிரிப்பு. பேரழகி என்று சொல்ல முடிய விட்டாலும் அனைவரையும் கவரக்கூடிய அழகு. அவள் அருகில் ..யாரிவன்? திடுக்கிட்டது மனது. நெருங்கி உட்கார்ந்து இருந்த விதம் ஏதோ உறவொன்றை சொல்லியது. அந்த உறவு அவளுக்கு அண்ணனாக இருக்க வேண்டுமென வேண்டியது என் மனம். குலதெய்வத்தின் உருவம் கூட என் மனக் கண்ணில் வந்து போனது .என் வேண்டுதல்கள் பூரணமாகும் முன்னரே அவளருகில் இருந்த ஒரு பெண் அவள் பெயரை சொல்லி அழைத்து "ஏய்,,என்ன உன் லவர் உன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஏதும் பேசாமலே வருகிறாரே?" என்று கேட்டாள். அந்த ஒரு கேள்வியிலும் அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த வெட்கப் புன்னகையிலும் அப்பொழுதுதான் அவசரமாய் கட்டிக்கொண்டிருந்த அழகிய காதல் கோட்டை அடுக்கி வைத்த சீட்டுக்கட்டாய் நிலைகுலைந்து போயிற்று.
நான் இறங்கும் தரிப்பிடம் வந்தது; ஒரு சிலமணி நேரத்திலேயே உதித்து , மரித்த காதலுடன் கடைசியாய் அவளை ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு இறங்கினேன் அந்த பேருந்தை விட்டு.மறுநாள் வழமை போல் நான் செல்லும் பேருந்து வரத் தொடங்கியது.ஆனாலும் என்னவோ அவள் நினைவு அடிக்கடி எனக்கு ..அந்த செந்தாமரை முகமும் கிண்கிணிச்சிரிப்பும் என் நினைவுகளை அடிக்கடி தீண்டிச் சென்றது.

நாட்கள் உருண்டு வருடங்களாகின. ஆண்டுகள் மூன்று கடந்து சென்றது.
நான் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துகொண்டு இருந்த சமயம். வழமைபோல "நுனிப்புல் மேய்வதுபோல்" அன்றைய திகதி பத்திரிகையை புரட்டி கொண்டு இருந்தேன். அப்போது அதில் ஒரு செய்தியை பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.ஆச்சரியம் மேலிட பூரணமாக அந்த செய்தியை படிக்க தொடங்கினேன் .அது என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா உங்களால்? இல்லை அறிய ஆவலாக உள்ளதா? சொல்கிறேன்.

ன்றைய செய்தித்தாளின் தலைப்பு "கண் பார்வை அற்ற ஒரு மாணவி தான் காதலனின் உதவியுடன் பிளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதலாம் இடத்தில் வந்துள்ளாள்" .புகைப்படத்துடன் வைத்திருந்த அந்த செய்தியில் அந்த புகைப்படத்தில் இருந்தது வேறு யாருமல்ல.. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் பஸ்ஸில் பார்த்த அதே பெண். அந்த புன்னகை மாறாமலே.... அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன் அவள் பார்வை இல்லாத ஒரு பெண் என்று. இப்போது புரிகிறதா..? என் அதிர்ச்சியின் காரணம்?

அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் யாராவது எதார்த்தமாக சிரித்தாலோ..! யாராவது ஒரு பெண்ணின் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்தாலோ..! என்னை அறியாமல் சிறிது நேரம் அவர்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டே  இருப்பதும்ஏதோ இழந்தாவனாய் இறங்கி செல்வதும்  வாடிக்கையாகிவிட்டது.
மேலும், இது போன்று இன்னும் எதனையோ பேருந்தில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுமையுடன் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன் . ஆனால் இன்று ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிலரால் பெருந்துகளில் பயணிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் . அவர்களின் கடந்த கால பேருந்து காதல் நினைவுகள் நிச்சயம் பயணித்துக் கொண்டுதான் இருக்கும் .அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.


 இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 7 - மாவீரன் பகத் சிங் !!!

35

''அடங்க மறு , அத்து மீறு” இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் .இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

 நம்மில் பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால்தான் ஒரு வீரனின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது. நாமே மறந்துவிட்ட ஒன்றைநாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ? நம் முந்தைய தலைமுறைநமக்கு இதை சொல்ல மறந்ததால்தான் நாம்   சூடு,சுரணை ,மானம் ,வெட்கம் எல்லாம் மறந்து வேடிக்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவரது கதை ஆயிரமாயிரம் முறை பேசப்பட்டுவிட்டதுஎன்றாலும், அவரது தியாகத்தை நினைவு கூறும்வகையில் மீண்டும் ஒரு முறை பேசுவோம்.

ந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.
சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்


ளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
வரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

ட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.
வர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!
தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
ரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.

ரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங்.


ன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 6 - கிராமபோன் !!!

37

சைக் கருவிகளில் இன்று அறிவியலின் வளர்ச்சியால் ஆயிரம் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் . ஒரு காலத்தில் இந்த அவசர உலகத்தை அமைதியாக தாலாட்டி உறங்கவைத்தது இந்த கிராமபோன்தான் .இன்றும் பரிணாமம் மாறினாலும் ,எனது இசையால் வசமாக இதயம் எது என்று எத்தனையோ இதயங்களை தனது பரம இரசிகர்களாக மாற்றிப் ஆட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறது ..


ன்று உலகத்தில் இசை இல்லாத நாடு இசையை இரசிக்காத இதயங்கள் என்று யாரும் இருக்க இயலாது . உலகத்தில் அனவரும் எந்த வேறுபாடும் இன்றி இரசிக்கும் ஒரே அதிசயம் இசை என்று சொல்லலாம் . கருவில் இருக்கும் குழந்தைகூட இசையை ரசிக்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன .இத்தனை அதிசயங்களையும் ஒன்றாக நாம் கேட்டு மகிழ்வதற்கு ஒரு காலத்தில் எந்த இசை கருவி பயன்பட்டது என்று கேட்டால் ஆனவரும் சொல்லும் ஒரே பதில் கிராமபோன் .

சை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

அதே நேரம் அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.

டிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.

தந்தி தொழில்நுட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.

வம்பர் 21, 1877 இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் பெப்ரவரி 19, 1878 இல் அவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

டிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி வெள்ளீயத் தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.

ரு முறை 1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது,'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.

மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
மேலும் வாசிக்க.. >>

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

50

லகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு மிகவும் சாதாரணமாக பதில் சொல்லிடுறாங்க காணவில்லை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று . அதே பிரச்சனை காலப்போக்கில் கண்டுபிடிக்காமலே காணமல் போய்விடுகிறது . இப்படியெல்லாம் அவ்வப்பொழுது நடக்கத்தான் செய்கிறது . அதார்க்கு இப்ப என்னவென்ருதானே கேக்குறீங்க விசயம் இருக்கு சொல்கிறேன் . உலகத்தையே தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்க தேனீக்களைக் காணவில்லை என்று பரபரப்புடன் தேடிக்கொண்டு இருக்கிறார்கலாம் .
தேனீக்களைக் காணவில்லையாம் !.
இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .


தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .


தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .


தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.


தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .


இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 5 அலெக்ஸாண்டர் !!!

48

லகத்தை ஆள வேண்டும் என்று ஹிட்லர் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஹிட்லருக்கு  முன்பே உலகத்தை ஆள வேண்டும் என்று நினைத்தவன் தான் அலெக்ஸாண்டர். தன் லட்சியத்தில் 75 சதவீதம் வெற்றியை கண்டவன். ஹிட்லரிடம் இல்லாத அன்பு, போர் வீரர்களை மதித்தல், பெண் ஆசை அற்றவன் மற்றும் பலரின் பாராட்டுகளுக்கு உரியவன் தான் அலெக்ஸாண்டர்.
ரு முறை உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்டவர் அலெக்ஸாண்டர் . பாரசீக நாட்டை வெற்றி கொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார் அவர். படையெடுக்கக் காத்திருந்த வேளையில் கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது . உடன்வந்த அவரின் வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை .

' இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விஷக் காய்ச்சல் போல் தெரிகிறது . பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால் இந்த நோயைக் குணப்படுத்தி விடுவார் ' என்று அவர்கள் சொன்னார்கள் .


' திரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்ய அழைப்பது ?' என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால், அலெக்ஸாண்டர் மட்டும் தயங்கவில்லை. பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்று அவர் நம்பினார் . அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்தபின் ' இந்த விஷக் காய்ச்சலுக்கு உரிய மூலிகைச் சாற்றை நாளை கொண்டுவருகிறேன் ' என்று சொல்லிவிட்டு, புறப்பட்டுச் சென்றார் அவர் .
மறுநாள் அவர் திரும்புவதற்கு முன்னால் ஒற்றர்கள் மூலம் அலெக்ஸாண்டருக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. ' எதிரி நாட்டு வைத்தியர் கொண்டுவரும் மூலிகைச் சாற்றைக் குடிக்காதீர்கள். அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளது ' என்பதுதான் அந்தச் செய்தி.

ந்த வைத்தியர் கொடுத்த மருந்தை குவளையில் பிடித்தபடி ஒற்றர்கள் அனுப்பிய தகவலை வைத்தியரிடம் சொன்னார் அலெக்ஸாண்டர் .


வைத்தியர் முகத்தில் அச்சம் பரவியது. ஆனால், அடுத்த வினாடியே அந்த மூலிகைச் சாற்றை கடகடவென குடித்து விட்டார் அலெக்ஸாண்டர்.


' எப்படி என்னை நம்பி அதைக் குடித்தீர்கள்?' என்று வைத்தியர் கேட்டபோது, அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இது தான்...


' பாரசீக மன்னர் எனக்குப் பகைவராக இருந்தாலும் சூழ்ச்சி செய்து என்னைக் கொல்ல மாட்டார் என நம்பினேன். அரண்மனை வைத்தியரான நீங்களும் தொழில் நேர்மை உள்ளவராக இருப்பீர்கள் என்று நம்பினேன். எனவே விஷம் கலக்கப்பட்டிருக்காது என்று எண்ணி தைரியமாகக் குடித்தேன் ' என்றார்.


' பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர் '
என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான்.


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 4 - அறிவுக்கு விருந்து !!!

67பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது . இன்று அதன் மக்கள் தொகை 53 லட்சம் .
 
Koalas: ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட் முறைதான்)

.
உலகில் உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும். (இங்க பெண்ணாதிக்கம் அதிகம் போலும்

முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.

Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)

நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

ஸ்வீகாரம் ( தத்து ) எடுக்கப்பட்ட குழந்தைக்கு ( ஆண் அல்லது பெண் ) புதிய குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு . சென்னை உயர்நீதி மன்றம் விளக்கம் .

உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

Spitting cobra: இந்தவகை பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான் இருக்கணும்).

இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் -- ஆராய்ச்சி கருத்து .

Hagfish: இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).

Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

Owl: ஆந்தைகளால் எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது. எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்….)

ஆசியா , ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் ( துருக்கி ) தான் போஸ்போரஸ் கால்வாய் நகரின் மத்தியில் ஓடுகிறது .

விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

Kissing bugs: இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம். (அதனால்தான் இந்த பெயரோ?)

உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

Jaeger: இந்த பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள் திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)

திரு . என். டி. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் தலைசிறந்த பொதுக்


கல்வி இயக்குனராக பணியாற்றியபோது அவர் ஒருவரே இயக்குனராக விளங்கினார் . இன்று 12 இயக்குனர்கள் அவர் செய்த பணிகளை நிர்வகிக்கிறார்கள் .

Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

Booby: பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும். (முட்டாபய பறவை..)

நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் ஒரு பூகம்பத்தின் விளைவுகளையும் தாங்கிக் கொண்டு


நிலையாக இருக்கக்கூடிய வல்லமை பெற்றதென ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள் .


இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .

Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

Green Herons: இந்த பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின் மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். (உக்காந்து யோசிப்பாங்களோ?).


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 3- நத்திங் ! நத்திங் !

29

வானமும் நிலவும் போல, நகமும் சதையும் போல என்றும் 1930 பாணியில் உதாரணம் சொல்வதைவிட "டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், ஆர்.கே.லட்சுமணும் போல' என்று சொன்னால்தான் இன்றைக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு முறை  கணிதம், தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை லட்சுமணன் சென்று சந்தித்தபோது, மணிக்கணக்கில் பேசினார். அவர், ""எந்த ஒரு கருத்தையும் எடுத்து சொல்வதற்குச் சிறுகதைதான் தகுந்த உத்தி'' என்று ரஸ்ஸல், நிறைய உதாரணங்களைச் சொல்லி விளக்கினார். விடைபெறும்போது, ""இந்தியர்களான நீங்கள் கண்டுபிடித்தது நத்திங்! நத்திங்!'' என்றார். லட்சுமணுக்கு முகம் சிவந்து போயிற்று. ""இல்லை சார், அப்படிச் சொல்லி விடமுடியாது. உதாரணமாக செஸ் ஆட்டம்...'' என்று லட்சுமணன் தட்டுத் தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற முயன்ற போது, கண்களில் குறும்பு கொப்பளிக்க, ""இந்தியர்கள் கண்டுபிடித்தது நத்திங்! அதாவது நத்திங் என்ற கோட்பாட்டையும் அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும் நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். கணிதத்தின் மாபெரும் கண்டுபிடிப்பல்லவா அது!'' என்றாராம் அந்தப் பொல்லாத மனிதர்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 2 - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் !!!

13

பல்கலைக்கழகங்களில் பழமையானதும் , உலகப் புகழ் பெற்றதும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் .

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்சுபோர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாயந்ததாகும்.

இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர்.இது தேம்ஸ் நதியும் , ஷெர்வெல் ஆறும் சங்கமமாகும் இடத்தின் கரையில் நதிக்கும் ஆறுக்கும் இடையில் அமைந்திருக்கிறது . ஆற்றில் இறங்கி கரையேறும் இடத்தை துறை என்பர் . இதற்கு ஆங்கிலத்தில் போர்டு என்று பெயர் .இந்தத் துறையில் எருமைகள் வந்து , நீராடி , நீர் அருந்தி செல்வதால் அந்தக் குறிப்பிட்ட நதிக்கரையை ஆக்ஸ்போர்ட் என்று அழைத்தனர் . அந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததால் அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர் .
  இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டாப் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

இப் பல்கலைக்கழகமானது 42 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2008 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 28,660[1] மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 18,495[1] மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 9,145[1] மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .


மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - டைனோசர் இனம் அழிவு !!!

23

 பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் இனம் அழிந்து ஆறரை கோடி ஆண்டுகள் ஆகின்றன, என பல்வேறு நாட்டு அறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.
பூமியில் ஏராளமான உயிரினங்கள் உலாவி கொண்டிருக்க, இந்த ராட்சத இனம் எப்படி அழிந்தது என்பது, புரியாத புதிராக இருந்து வருகிறது. வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக சிலரும், எரிமலை சீற்றத்தில் சிக்கி இந்த இனம் அழிந்து விட்டதாக சிலரும் கூறி வருகின்றனர்.
இதுவரை கிடைத்த டைனோசரின் எலும்புகள் உள்ளிட்ட பாகங்களை கொண்டு, அதன் அழிவு குறித்து உலகம் முழுவதும் உள்ள 41 விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடந்த 20 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டது. பல கோடி ஆண்டுகளாக பூமியில் உலாவி வந்த இந்த மிருக இனம், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் மீது மோதிய விண்கல்லால், முற்றிலும் அழிந்து விட்டதாக இந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாடு அமைந்துள்ள பகுதியில் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட விண்கல், அணுகுண்டை விட வேகமாக பூமியின் மீது வந்து மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியால் பூமியில் பூகம்பமும், சுனாமியும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
விண்கல் மோதிய வேகத்தால் அணுகுண்டை விட பலமடங்கு சக்தி வாய்ந்த அதிர்வு ஏற்பட்டு பூமியில் ஏற்பட்ட கந்தக புழுதியால் உலகமே இருண்டு போய் விட்டது. பல இடங்களில் காட்டு தீ பரவியது. பூமியின் சுற்றுச்சூழலில் அதிரடிமாற்றம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓடி ஒளியக்கூட இடம் இல்லாத காரணத்தால் டைனோசர் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய் விட்டன என, இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் வாசிக்க.. >>

பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

4

பெண்களின்  14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில்

 அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு >>>>
மேலும் வாசிக்க.. >>

மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

30

அனைவரும் அறிந்தது என்றாலும் இதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன் . ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் மகளிர் தினம் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் மகளிர் உரிமைகள் மட்டும் மறக்காமல் மறுக்கப்படுகின்றன .
 உலக அரங்கில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு சாதனைகளையும் அதனால் அடையும் நன்மைகளையும் மட்டும் எண்ணத்தில் கொண்டு தலை நிமிர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் அதே பெண்கள் தங்களின் உரிமைக்காக போராடும்பொழுது மட்டும் தலை குனிந்துக்கொள்வது எதற்கென்றுதான் தெரியவில்லை .
 உலக மகளிர் தினம் தோற்றம் , இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இது. கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு இங்கே சளைத்தவரில்லை பெண்கள். 2003 கணக்குப்படி அந்த 50 கோடி பெண்களில் பாதிப்பேர் படித்தவர்கள். 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் பெண்ணின் பெருமைக்கு சான்று.

ஒட்டுமொத்தமாக மட்டுமல்ல, ஆறு கோடியை தாண்டிய தமிழகத்தின் ஜனத்தொகையிலும் பெண்களுக்கு பாதியிடம். அதிலே படித்தவர்கள் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரம். இப்படி வளர்ச்சிப் பட்டியலில் போதிய இடம் பிடித்துவிட்ட பெண்களுக்கு இன்னுமா பிரச்னை?

இந்த கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்களே பொருத்தமான பதில்.

* ஒவ்வொரு 3 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது.

* ஒவ்வொரு 9 நிமிடங்களில் ஒரு பெண், கணவனாலோ அல்லது அவனது உறவினராலோ கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

* ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள்.

* ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை அரங்கேறுகிறது.

* ஒவ்வொரு 29 நிமிடங்களில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது.

* ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.

எனவே ஒரு பக்கம் வளர்ச்சி; மறுபக்கம் அதிர்ச்சி என்ற நிலையிலேதான் இன்றைய இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது. கருவிலே தொடங்கிய கொடுமை, கல்யாணம் ஆன பின்னும் விடாமல் விரட்டுவதால் தான் பெண்களை பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்தது. இந்த சட்டம் வந்த பிறகும் குற்றம் குறையவில்லை. 2006 நவம்பர் முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் தான் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கே வருகிறது. 2008 மே நிலவரப்படி 712 புகார்கள். அதில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.
 கருவிலே ஆணா, பெண்ணா என அறியும் முறை, குழந்தை திருமணம், கட்டாயக் கல்யாணம், கவுரவக் கொலை, வரதட்ணை பலி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி வகைப்படுத்துகிறது பிரக்ஞா என்ற ஒரு அமைப்பு.
பெண் சிசுக் கொலை, கருவிலே கண்டுபிடித்து அழிப்பு என பெண் குழந்தைகள் ஒழிப்பிற்கு பல வழிமுறைகள். கள்ளிப்பால் கொலைகளை ஒழித்தால், அடுத்ததாக கருவில் இனம் கண்டுபிடிக்கும் கருவிகள் வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்பு கூட பெண்ணை கொல்லும் கருவிகளாகத்தான் உருமாறின. இந்த வகையில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி தராமல் இருக்குமா?

சற்று பினோக்கி செல்வோம் ,

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.
 மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.
 தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
 1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

இன்று பெண்களின் நிலை
 பெண்கள் விஷயத்திலான பாகுபாடு குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பள்ளி, உணவு, உடை, மருத்துவம் போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு தரும் முக்கியத்துவம் பெண் குழந்தைக்கு இல்லை. வளர்ந்து விட்ட பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லை. அவளது உணர்வு, உள்ளம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் பேசப்படுகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை என்கிறபோது, ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’ என்ற அறிவுரை மட்டுமே தாய் வீட்டில் இருந்து கிடைக்கிறது. ‘கணவன் சாப்பாடு போடலியா? அட்ஜஸ்ட் பண்ணு, அடிக்கிறானா? அட்ஜஸ்ட் பண்ணு’... இப்படியே அமுக்கப்படுவதால், ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதெல்லாம் தலைவிதி அல்ல; அவளை பாதிக்கிற வன்முறை என்பதை என்றைக்கு உணரத் தொடங்குகிறாளோ அன்றைக்கு பெண்ணினத்திற்கு முழு விடியல் பிறக்கும் என்கிறார்.

47% பெண்களுக்கு கட்டாய கல்யாணம்

18 வயதுக்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வதை குழந்தைத் திருமணம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இதை மீறி சட்டப்படி சிறுவர்களாக உள்ளவர்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப கவுரவத்துக்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், வியாபார லாபங்களுக்காகவும் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன.

உலக அளவில் தெற்காசியப் பகுதியில்தான் அதிக அளவில் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியில் 20&24 வயதுள்ள பெண்களில் 49 சதவீதம் பேருக்கு அவர்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்தியாவில் இது 47 சதவீதம், அதுவும் கிராமப் பகுதிகளில் 56 சதவீதம்.

உலக அளவிலான கட்டாயத் திருமணங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. அதில் 10 சதவீத மணமகன்களுக்கு வயது ரொம்ப கம்மி.

இந்திய அளவில் 2005ல் 122 கட்டாயத் திருமணங்கள். 2006ல் 99, 2007ல் 96 பதிவாகியுள்ளன.

வரதட்சணை பலி உ.பி.யில் அதிகம்

புதிதாக திருமணமான பெண்களின் மரணங்களுக்கு, பெரும்பாலும் வரதட்சணை தான் காரணம். 97ம் ஆண்டில் 6,006 ஆக இருந்த வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை, 2007ல் 8,093 ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை குறித்த வழக்குகள் 97ம் ஆண்டில் 36,592. இது 2007ல் 75,930 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிக அளவாக, உத்தரப்பிரதேசத்தில் 25.7 சதவீதம் வரதட்சணை மரணங்கள் நடப்பதாகவும், அதையடுத்து பீகாரில் 14.5 சதவீதம் நிகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணம் - கவுரவக் கொலை

தனிப்பட்ட விருப்பத்தின்படி நண்பரையோ காதலரையோ கணவரையோ ஒரு பெண் தேடிக்கொள்ளும்போதும், குடும்பத்தினர் திணிக்கும் மாப்பிள்ளையை ஏற்க மறுக்கும்போதும், பெண்கள் மீது குடும்பத்தினர் தாக்குதலை நடத்துகிறார்கள். அது மரணத்தில் முடியும் எனத் தெரிந்தே நடத்தப்படுகிறது. வெறும் வறட்டு கவுரவத்துக்காக நிகழும் மரணங்கள்.

குடும்ப கவுரவத்தை மீறி, சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் இந்த Ôகவுரவக் கொலை’க்கு இலக்கு ஆகியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் நாட்டின் 10 சதவீத Ôகவுரவ கொலைÕகள் நிகழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் 60 சம்பவங்கள் நடந்துள்ளன.

பாலியல் பலாத்காரம் 733% அதிகரிப்பு

பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் குற்றம். பதிவான விவரங்களின்படி 1971ம் ஆண்டிலிருந்து 733 சதவீதம் அதிகரித்துள்ளது. 1997ல் 15,330 வழக்குகள். 2007ல் 20737 ஆக அதிகரித்தது. இதில் மத்திய பிரதேசத்திற்கு முதலிடம்.

இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளில் 92.5 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருக்கின்றனர். கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோரில் 9.5 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள். பாதிக்கப்பட்ட மற்றவர்களில் 15&18 வயதினர் 15.2 சதவீதம் பேர். இரண்டில் மூன்று பங்கினர் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றம் 2003 2004 2005 2006 2007
பாலியல் பலாத்காரம் 15847 18233 18359 19348 20737
கடத்தல் 13296 15578 15750 17414 20416
விபச்சாரத்திற்கு கடத்தல் 5510 5748 5908 4541 3568
வரதட்சணை பலி 6208 7026 6787 7618 8093
சித்ரவதை செய்தல் 50703 58121 58319 63128 75930
பாலியல் தொந்தரவு 32939 34567 34175 36617 38794
பாலியல் வன்முறை 12325 10001 9984 9966 10950
வரதட்சணை கொடுமை 2684 3592 3204 4504 5623
மொத்தம் 139512 152866 152486 166136 184051

தமிழகத்தில்...

குற்றம் 2007 2008 2009
பாலியல் பலாத்காரம் 523 573 596
வரதட்சணை பலி 208 207 194
பாலியல் தொல்லை 1558 1705 1242
பாலியல் வன்முறை 875 974 501
சித்ரவதை செய்தல் 1976 1648 1460
கடத்தல் 1097 1155 1133
வரதட்சணை கொடுமை 368 262 207

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை விவரம்:

2003 4952
2004 4833
 2005 5064
2006 3789
2007 6605
2008 6524
2009 5333

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார் .

 அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
மேலும் வாசிக்க.. >>