தமிழ் ஜோக்ஸ் !!!

திடீர் பணக்காரர்மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?


கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!


ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...


சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?


ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..


மேனேஜர்: இந்த ஆபிசுக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?


வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?


மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

0 மறுமொழிகள் to தமிழ் ஜோக்ஸ் !!! :