தலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !!!


கார் விபத்தொன்றில் முள்ளந்தண்டிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் முழுமையாகக் குணப்படுத்திய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.


கிறிஸ் ஸ்டீவார்ட் (14 வயது) என்ற இந்த சிறுவன், கனிஷ்ட பிரிவினருக்கான கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட வேளை இடம்பெற்ற விபத்தில் அவரது தலைப் பகுதியும் முள்ளந்தண்டும் உடலின் உட்புறமாக துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில் மருத்துவர்கள் துரிதமாக செயற்பட்டு கிறிஸ் ஸ்டீவார்ட்டை உயிர் பிழைக்க வைத்தது மட்டுமல்லாமல், அவரை முழுமையாகக் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.


இவ்வாறு முள்ளந்தண்டும் தலைப்பகுதியும் துண்டிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பது வழமையாகும். உலகில் இத்தகைய பாதிப்பில் உயிர் பிழைத்த அறுவரில் ஒருவராகவும், அப்பாதிப்பிலிருந்து முற்று முழுதாக குணமடைந்த முதலாமவராகவும் கிறிஸ் ஸ்டீவார்ட் விளங்குகிறார்.

0 மறுமொழிகள் to தலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !!! :