பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!!

38

னக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .
ன் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்
நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.

“தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது
உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும் .

ன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .

பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .

ல்லோருக்கும் இல்லை என்ற போதும்
எனக்கு மட்டுமான தேவைகளை
நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது
நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .

ந்தோசத்திலும் ஒரு சோகம்
சோகத்ததிலும் ஒரு சந்தோசமென
அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது
நம் இருவருக்கும் இடையிலான
நட்பென்ற உறவு .

தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .

யிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .
உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்

தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள் .

வ்வொரு இரவின் இடைவெளிகளிலும்
உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்
அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,
தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நட்பின் நினைவுகள் .
மீண்டும் நம் நட்பைக்கொண்டாட
எதற்க்கு இந்த வருடம் என்னும்
நீண்ட இடைவெளி..??
வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்
நமது நட்பிற்குள் இந்த வருடத்தை
நிரந்தரமாக.

காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .

நானும் நீயும் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே
நம் இதயங்கள் உள்ளுக்குள்
நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்
இனி வரும் நாட்களில்...



திவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய  ADVANCE நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் .!


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 44- ஜிம்னாஸ்டிக்ஸ் சரித்திரம் !!!

16

னைவருக்கும் வணக்கள் . இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக விளையாட்டுக்களில் மிகவும் தனி திறமைகளுடன் பல சிறந்த புதுமைகளை கொண்டு திகழும் ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டைப் பற்றி அறிந்துகொள்ளப் போகிறோம் விளையாட்டுக்களில் மிகவும் வண்ணமயமான விளையாட்டு என்றால் அது ஜிம்னாஸ்டிக்தான் . சரி இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் இந்த ஜிமான்ஸ்டிக் Gtmnastics விளையாட்டு எப்படி தோன்றியது என்று கேட்டால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை . ஜிமான்ஸ்டிக் Gtmnastics விளையாட்டின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்தில்தான் இந்த பதிவு . சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் . ஆரோக்கியமான உடல்வாகு தான் ஆரோக்கியமான உள்ளங்கள் உருவாக அடித்தளமாகின்றன. சரீர சக்தியை பெற்றுத் தரும் சமவேளையில் மனோ வலிமையையும் ஈட்டத் தக்க ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதில் தீவிரமாகத் திளைத்த கிரேக்க முன்னோர்கள் கண்டு பிடித்த விளையாட்டுக் கலைதான் ஜிம்னாஸ்டிக் Gtmnastic எனும் கலை.

கிரேக்கர்கள் பல சிறந்த விளையாட்டுக்களை இந்த உலகத்திற்கு தந்த பெருமைக்குரியவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது . அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இன்று கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு உருண்டு கொண்டிருக்கும் நமது போட்டியான வாழ்க்கை முறை அன்று மிகவும் தீவிரமாகக் காணப்பட்து. ஒருவரை ஒருவர் வெல்ல மக்களுக்கு அன்று சண்டைப் பயிற்சிகள் தேவைப்பட்டன. இவற்றுள் அடங்கிய செயற்பாடுகள் காலப் போக்கில் ஜிம்னாஸ்டிக் Gtmnastic எனும் கலைக்கு வித்திட்டன. .

லகத்தில் இதுவரை எந்த ஒரு விளையாட்டிலும் இல்லாத வியப்புகள் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டில்தான் தொடங்கியது என்று சொல்லலாம் . ஆம் முதன் முதலில் இந்த விளையாட்டு கிரேக்கில் நிர்வாணத்துடன்தான் தொடங்கியது . உடம்பில் எந்த ஆடைகளும் இன்றி , எந்த ஒரு சலனமும் இன்றி அனைவரும் முழு ஈடுபாடுடன் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாது அன்றைய நிலையில் இந்த விளையாட்டு ஆண்களுக்கு மட்டுமே என்ற நிலையில் இருந்தது .

 பின்பு காலப்போக்கில் பெண்களும் இந்தக் கலையில் ஆர்வம்கொள்ள ஆரம்பித்தனர். அன்று யுத்தம் புரிய வலிமையான இளம் சமுதாயமொன்று தேவைப்பட்டது. வலிமை மிக்க சமுதாயமொன்று உருவாக வேண்டுமானால் வலிமையுள்ள அன்னையர் சமூகமொன்று அவசியம் என்ற நிலைப்பாடு அன்றைய கிரேக்கத்தில் நிலவியது. இதன் அடிப்படையிலேயே பெண்களின் பங்களிப்பு ‘ஜிம்னாஸ்டிக்’ Gtmnastics கலையில் அதிகரிக்க ஆரம்பித்தது.

துவரை நாம் விளையாடி மற்றும் பார்த்து மகிழ்ந்த விளையாட்டுகளில் இல்லாத பல சிறந்த சிறப்புகள் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டிற்கு உண்டு ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டு என்பது பொழுது போக்கிற்காக மாட்டும் இல்லாமல் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் ஒருவருக்கு உயரிய பல பண்புகளையும் ,உணர்வுகளையும் பெற்றுக்கொடுக்கிறது. சிறந்த மனோபாவம் வளரவும் இது உதவி செய்கிறது .

ரி இதுவரை நாம் இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastic விளையாட்டின் சிறப்புகளையும் அதன் தோற்றம் பற்றியும் தெரிந்துகொண்டோம். இப்பொழுது இந்த விளையாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் Gtmnastics என்று எப்படி பெயர் வந்தது என்று தெரிந்துகொள்வோம் .கிரேக்க மொழியில் ஜிம்னோ GYMNO என்ற வார்த்தைக்கு நிர்வாணம் என்று பொருளாம் . இந்த விளையாட்டின் தொடக்கத்தில் இதற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் கேட்ட பொழுது அன்றைய வயதான முதாட்டி ஒருவர் ஜிம்னோ Gtmno என்று கூறியிருக்கிறார் . அதாவது தமிழில் ஜிம்னோ GYMNO என்றால் நிர்வாணம் என்று அர்த்தம் . அது மட்டும் இல்லாது ஜிம்னொஷியம் என்றால் நிர்வாண உடற்பயிற்சிகளுக்கான பள்ளி என்று பெயர் .

தொடக்கத்தில் இந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டை வீரர்கள் உடலில் எந்த அடிகளும் இன்றி நிர்வாணமாக விளையாடியதால் இதற்க்கு இந்த பெயர் வந்ததாம் . அதன் பின்பு கால ஓட்டத்தில் பல மாற்றங்களை இந்த விளையாட்டுக் கண்டது .இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றார்போல இந்த விளையாட்டை விளையாடும் வீரர்கள் தங்கள் உடம்புடன் ஒட்டிய உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள் . என்ன நண்பர்களே இன்றைய ஜிம்னாஸ்டிக்  Gtmnastics விளையாட்டைப் பற்றிய தகவல்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 

மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் கவிதைகள் - சாயம்போன கனவுகள் !!!

21


 வ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,
 
தாய் மடியை நினைவூட்டும் 'மெமரிபோர்ம்' மெத்தையும்
'கூஸ்பெதர்' தலைஅணையும்
இப்போதெல்லாம் என்னை ஏனோ
முள்ளாய் மாறி தினம் தினம்
என்னை வதம் செய்கிறது ,,..
  
தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இது எனது மீள் பதிவு !




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் கவிதைகள் - திரை மூடிய நிர்வாணம் !!!

28

சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது
மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின்
தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம்
நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் !
ழல் செய்து ஊரை ஏமாற்றிய
அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா !

கொலை செய்தவனுக்கு
குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .!

ற்றை திருமணம்
பல கோடிகளில் வீதியெங்கும் .!

துபோல் இன்னும் மாறாமல்
தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பசி என்று சொல்லி அழுகும்
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகை சத்தமும் !..



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 43 - இதயத் துடிப்பை அறியும் சுறா மீன்கள் !!!

12

னைவருக்கும் வணக்கம் இன்று ஒரு தகவலின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . இன்றைய இன்று ஒரு தகவலை தொடங்குமுன் அனைவரிடமும் ஒன்று சொல்லியாக வேண்டும் கடந்த இரண்டு வாரங்களாக சற்று வேலை பளு அதிகமாகிப்போனதால் . நண்பர்கள் பலரின் பதிவுகளை வாசித்து மறுமொழி கொடுக்க இயலாத நிலையில் இருந்தேன் .அதற்காக மிகவும் வருந்துகின்றேன் . எதையும் எதிர்பாராது வழமைபோல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் மதிப்பளித்து தினமும் மறுமொழிகள் மற்றும் ஓட்டுகள் வழங்கி ஊக்குவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் .!

 நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவலில் வழமை போல் இல்லாமல் மிகவும் சிறிய தகவல் ஒன்றை உங்கள் அனைவருக்கும் இன்று தரப்போகிறேன் . நம் எல்லோருக்கும் சுறா மீன்களை நன்றாகத் தெரியும் தெரியாது என்று சொல்பவர்கள் இங்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள் . சரி இப்பொழுது நான் விஷயத்திற்கு வருகிறேன் . மீன்களிலே இந்த சுறா மீன்கள்தான் அனைவரையும் அச்சுறுத்தும் மீன் வகைகளில் முதன்மை வகிக்கின்றன . இந்த மீன்கள் பொதுவாக மனிதர்கள் மற்றும் தினமும் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும்  மீன்களின் இருபிடங்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் திறமை அதிகம் பெற்றிருக்கின்றனவாம் .

 பலருக்கு இந்த சுறா மீன்கள் எப்படி மனிதர்கள் இருக்கும் இடங்கள் மற்றும் மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களை சரியாக அறிந்துகொள்கின்றன என்ற மிகப்பெரிய சந்தேகம் தோன்றலாம் . சொல்கிறேன் உலகத்தில் எந்த ஒரு   மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருக்கிறதாம் . அதுதான் இதயத் துடிப்பை உணரும் சிறப்பு . ஆம் நண்பர்களே இந்த சுறா மீன்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத் துடிப்பை உணர்ந்து எளிதில் அந்த இருப்பிடத்தை அடைந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை தினமும் பிடித்துக் கொள்கின்றனவாம் . என்ன நண்பர்களே இன்றைய குட்டித் தகவல் உங்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் கவிதைகள் - கல்வி கொடு இலவசங்கள் வேண்டாம் !!!

27

றக்க ஆசை
எனக்கு விமானங்கள் வேண்டாம்
சிறகுகள் போதும் .!


ழைகளின் பசி தீர்க்க ஆசை
எனக்கு உணவுகள் வேண்டாம்
தானியங்கள் போதும் .!

தினம் விழி மூட மறுக்கும்
இரவுகளின் வறுமை போக்க ஆசை
எனக்கு மாளிகைகள் வேண்டாம்
மர நிழல்போதும் !

னக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை
நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும்
இவை அனைத்தும் எனக்கு
தனித்தனியே வேண்டாம் .
கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள்
கடந்துவிடுவேன் காலங்கள் பல
வென்றுவிடுவேன் தேவைகள் அனைத்தும் .!

ங்கும் எதிலும் இலவசம்
அதனால்தான் முயற்சிகள் இன்னும்
ஊனமாகவே இருக்கிறது
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
வாடகை கால்கள் , வாடகை சுவாசம் ,
வாடகை இரவுகள் , என இந்த இலவசங்களால்
வாழ்வின் ஒவ்வொரு கணங்களும்
உறக்கத்தில் தொலைத்த கனவாகவே கழிந்துவிட்டது .
எஞ்சிய நாட்களிலாவது விழித்துக்கொள்ளுங்கள் .
இல்லையென்றால் கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!....



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 42 - டாப் 10 அதிசயங்கள் !!!

26


னைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நதி, அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் பெரிய கடல் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய மலை என்று இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சொல்லிகொண்டேப் போகலாம். ஆனால் இது போன்ற அனைத்து துறைகளிலும் முதல் பத்து இடத்தில் ( TOP 10 ) இருக்கும் அல்லது இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால், சொல்வது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். இதுபோல் உலகத்தில் மிகவும் பிரபலமான பல துறைகளில் முதல் பத்து இடங்களில் ( TOP 10 ) இருக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வது என்றால் அதில் ஏற்ப்படப் போகும் ஒரு ஆர்வமும் மகிழ்ச்சியும் அளவில்லாத ஒன்றுதான் என்று நம்புகிறேன். வாருங்கள் நாமும் அறிந்துகொள்வோம் பல பிரபலமான துறைகளில் முதல் பத்து ( TOP 10 ) இடங்களை பிடித்திருக்கும் பல தகவல்களை இந்த இன்றைய இன்று ஒரு தகவலின் வாயிலாக அறிந்துகொள்வோம் .




ன்ன  நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக இன்றும் பல தகவல்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.




மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் கவிதைகள் - பிச்சைப் பாத்திரம் !!!

17


!  பிச்சைப் பாத்திரம் !
  ழுது அழுது தீர்ந்துபோனது
கண்ணீர்த்துளி இன்னும்
தீராத வறுமையினால் .
எஞ்சிய நம்பிக்கையில்தான்
இன்னும் கெஞ்சிக்கொண்டே
கையேந்தி கழிகிறது நாட்கள்
பசியின்றி !


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 41- அறிந்துகொள் அட்லஸ் ( ATLAS ) அதிசயம் !!!

20

னைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக அட்லஸ் ATLAS பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம் . பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்கள் . சரி அப்படி என்றால் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால்தான் என்ன இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ? எதற்க்காக இதற்கு இந்த பெயர் வந்தது என்று கேட்டால் இந்த அனைத்துக் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடும் . இந்த அட்லஸ் ( ATLAS ) பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்தின் விளைவுதான் இந்த பதிவு. சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் .

முதலில் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். நிலவியல் வரை படங்களின் தொகுப்பிற்குத்தான் அட்லஸ் என்று பெயர் . இதை உலக வரை படம் என்று அனைவருக்கும் தெரிந்த வகையிலும் சொல்லலாம் . இங்கு இரண்டு விஷயங்களை தெளிவாக சொல்லியாகவேண்டும் ஒன்று நிலவியல் என்றால் என்ன ? மற்றொன்று வரைபடம் என்றால் என்ன ? .

ரி இப்பொழுது முதலில் நிலவியல் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். நிலவியல் என்பது பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியில், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. இந்த நிலவியல் என்ற ஒரே வார்த்தையில் பல வேறுபட்ட பிரிவுகளும் இருக்கின்றன அது இப்பொழுது நமக்குத் தேவை இல்லை.
டுத்ததாக வரைபடம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம் வரைபடம் என்பது ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் , பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு பார்வைக்குரிய அடையாள பிரதியாகும். வரைபடங்களுள் பல, முப்பரிமாண பரப்பின், நிலையான புவியியற்பிழையற்ற இருபரிமாண பிரதிகளாகவும், இன்னும் சில, சக்திவாய்ந்த ஊடுதலைக் கொண்ட முப்பரிமாண பிரதிகளாகவும் உள்ளன. இப்பொழுது அனைவருக்கும் நிலவியல் வரைபடம் என்பது பற்றி தெளிவாக புரிந்திருக்கக் கூடும் இவை அனைத்தையும் பற்றிய விரிவான வரைபடங்களின் தொகுப்பிற்குதான் அட்லஸ் என்று பெயர் .

ரி இப்பொழுது இந்த அட்லஸ் என்ற பெயர் எப்படி இந்த உலக வரைபடம் மற்றும் நிலவியல் வரைபடங்களின் தொகுப்பிற்கு வந்தது என்று பார்க்கலாம் . மிகவும் பழமை வாய்ந்த கிரேக்கப் புராணத்தின் அட்லசு என்பவன் கிரேக்க புராணங்களில் கூறப்படும் ஓர் அசுரன் (Atlas Titans).

ரு முறை அரக்கர்களுக்கு இடையிலான போரில் அட்லஸ் ( ATLAS ) கலந்து கொண்டு எதிரிகளுக்கு சாதகமாக செயல் பட்டதால் கோபம் கொண்ட கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான ஜீயஸ் விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி அட்லசிற்கு தண்டனையை வழங்கினாராம் . பின்னாளில் அதே அட்லசை கிரேக்கர்கள் அனைவரும் சொர்க்கத்தை தாங்கி நிற்கும் கடவுளாகவும் வணங்கினார்களாம் . அது மட்டும் இல்லாது அந்த காலக் கட்டத்தில் இருந்த மன்னன் ஒருவன் சிறந்த கணித வல்லுனராகத் திகழ்ந்ததாகவும் அவனின் பெயரும் அட்லஸ் என்றும் கிரேக்கப் புராணங்களில் குறித்து வைத்திருக்கிறார்கள் .

லக வரைப்படத்தை உருவாக்கிய டச்சு நாட்டுக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீரன் உலகை தாங்கிப் பிடிதிருப்பதுபோல் பல ஓவியங்களை வரைந்திருகிறார்கள் பின்னாளில் அந்த வீரனுக்கு அட்லஸ் என்றும் பெயரிட்டு அழைத்து வந்திருகிறார்கள் . பின்னாளில் அனைவரும் இந்த அட்லசை டச்சு வணிகர்ளுடன் இணைத்து பேசி இருக்கிறார்கள் . டச்சு நாட்டவர்களும் இவற்றை உண்மையாக்கும் பொருட்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக மையக் கட்டடத்தில் அட்லசு உலகைத் தாங்கி நிற்பது போன்ற சிலை ஒன்றையும் அமைத்து இருக்கிறார்கள் . அந்தக் காலக் கட்டத்தில்தான் உலக வரை படமும் வரைந்து முடிக்கப் பட்டு பெயர் சூட்டுவதற்க்காக தயார் நிலையில் இருந்திருகிறது . இதை அறிந்த டச்சுக் காரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உலக வரைபடத்திற்கு அட்லஸ் ( ATLAS ) என்றே பெயர் சூட்டினார்களாம்.

காலப்போக்கில் இதே அட்லஸ் என்ற சொல் ஒருபொருட் பன்மொழியாக ஒரே காரணத்தால் பல பொருட்களையும் குறிக்கப் பயன்பட்டது. அட்லசு எனும் சொல் குறிக்கும் பொருட்களாவன : உலக வரைபடம், World Map உலகைத் தாங்கி நிற்கும் டைட்டன், மனித உடலின் முதல் முதுகெலும்பு. போன்ற பலவற்றைக் குறிப்பது போன்று மாற்றம் பெற்றது .

த்துடன் நின்றுவிடாமல் இந்த அட்லஸ் ( ATLAS Experiment ) , World Atlas அறிவியலின் பல வளர்சிக்கு பின்பும் அனைவரும் வியக்கும் ஒன்றிற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது .நம் உடலில் கபாலத்தைத் தாங்கி நிற்பது முதுகெலும்பு. மனித உடலில் மொத்தம் உள்ள 33 முதுகெலும்புகளில் முதலாவது முதுகெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது எலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது.அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும் அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே இன்றும் மருத்துவத் துறைகளில் புகழ் பெற்று விளங்குகிறது . என்ன நண்பர்களே அட்லஸ் ( ATLAS ) என்ற ஒரு சிறிய வார்த்தை எவளவு துறைகளில் கொடிகட்டி பறக்கிறது என்பதை இந்த தகவலின் வாயிலாக நீங்களும் அறிந்துகொண்டிருபீர்கள் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் - வெட்கம் !!!

17

னவுகள் மெல்ல துயில் கொள்ளும்
இரவுகளில் எல்லாம்
வெளிச்சமாய் தெரிகிறது
உன் நினைவுகள் .
நான் உன்னிடம் பேச முயற்சிக்கும்
ஒவ்வொரு முறையும் .
உன் வெட்கம் மட்டுமே எனக்கு
முற்றுப்புள்ளி எட்டாத
பதிலாக தொடர்கிறது இன்று வரை !...
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 40 - ஜிப்ரான் கவிதைகள் அறிமுகம் !!!

13

னைவருக்கும் வணக்கம், இந்த நூற்றாண்டில் நாம் ஒவ்வொருவரும் படிக்கும் காலங்களில் உலகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைகளிலும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஏதோ ஒரு பாடல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். காட்டப்படும் அந்த பாடலோ அல்லது சிந்தனையோ மிகவும் ஒரு சிறந்த கருத்தை சொல்லும் ஒன்றாகத்தான் இருக்கும் . அந்த வகையில் நாம் அனைவருக்கும் அறிமுகமான இரண்டு வரிகள்

''நாடு உனக்கென்ன செய்தது என்று கேட்காதே.
நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்.''

இந்த வரிகளை நம்மில் தெரியாதவர்கள் அதிகம் இருக்க இயலாது அந்த அளவிற்கு சிந்தனை விதைகளை உலகத்தில் உள்ள அனைவரின் இதயத்திலும் விதைத்து சென்றது என்று கூட சொல்லலாம் இந்த இரண்டே வரிகள். சரி இந்த இரண்டு வரிக்கும் இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் கேட்க நினைப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது சொல்கிறேன்.

ந்த இரண்டு வரிகள் இன்னும் அமெரிக்க சுவர்களில் கதவிலக்கத்தைபோல் எங்கு பார்த்தாலும் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த வரிகளின் சிந்தனை எந்த அளவிற்கு உலகத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கக் கூடுமென்று .! சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த வரிகளை எழுதியது யார் என்று நம்மிடம் கேட்டால் நம்மில் பலருக்குப் பதில் தெரியாது. இதுவரை உலகத்தில் பலருக்கு இந்த வரிகளை சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடிதான் எழுதினார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுநாள் வரை நம்மில் பலரும் அப்படிதான். ஆனால் இந்த வரிகளை உண்மையாகவே எழுதியது ஜான்கென்னடி இல்லை. அவர் இருந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது புதிய எல்லைகள் என்ற கட்டுரையில் ஜிப்ரான் என்ற ஒரு புரட்சிக் கவிஞன் எழுதிய வரிகள்தானாம் இவை. இன்னும் எத்தனை பேருக்கு இதைப் பற்றி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இத்துடன் மட்டும் இல்லை அவரின் வரிகளை வாசிக்கும் ஒவ்வொரு உள்ளத்தி லும் நெருப்பாய் சில உணர்ச்சிகள் எழுவது உண்மைதான்.

'' கோழையாய்
அஞ்சி வாழ்வதைவிட
கொடுமைக்கெதிராய்
வாளேந்தி
மடிவதே மேல் !

ழ்கிணற்றுக்குள்
அடங்கிவாழும்
தவளையை விட -
தீப்பிழம்போடு
போராடி மடியும்
விட்டிலே
சிறந்ததல்லவா ? ''

ந்த புரட்சிக் கவிஞனை படிக்கும் பொழுதெல்லாம் இரண்டு நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது

ன்று கவிதையை ! ன்னொன்று வாழ்க்கையை !

ன்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் கவிதைகள் - கானல் நீர் தமிழன் !!!

16

கானல் நீர் !!!
திரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 39 - அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!!

18

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

ரு காலத்தில் சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் . அதைப் பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த நாட்டவரிடம் எதற்க்காக ஒவ்வொரு குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள் என்றுக் கேட்க அதற்கு பதில் தந்த அந்த நாட்டவர் .

குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம் என்றும் !

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும் பதில் அளித்தாராம் . இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .

மிழில் ஒரு பல மொழி சொல்வார்கள் வாத்தியார் புள்ள மக்கு , போலிஷ் புள்ள திருடன் என்று அதுபோல் உலகத்தில் அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்திய உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால் நடுங்கிவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . இவர்தான் இப்படியென்றால் இவரையும் மிஞ்சியவர் ஒருவர் இருந்தார் . இன்றும் அனைவர்க்கும் பெரும் சவாலாக விளங்கும் கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி கொண்டவராம் .

லகத்தில் இப்பொழுதெல்லாம் இயற்கையாக இறப்பவர்களைவிட செயற்கையாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் அதிலும் விபத்துகளினால்  கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .

நாம் என்னதான் செம்மொழி தமிழ் மொழி என்று மாநாடும் போட்டு பேசினாலும் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினான்காவது இடத்தில்தான் இருக்கிறதாம் .

ம் எல்லோருக்கும் பல பல்கலைக் கழகங்கள் பற்றி தெரியும் . ஆனால் எப்பொழுது தொடங்கப் பெற்றது என்றுக் கேட்டால் யாருக்கும் தெரியாது .அதிலும் உலகத்தில் பழமைவாய்ந்த பல்கலைக் கழகம் எது என்றுக் கேட்டால் அவளவுதான் . இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் இருக்கிறது . இந்தப் பல்கலைக் கழகத்தை 859-லே தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ம் அனைவர்க்கும் குவைத் என்ற ஒரு நாட்டை நன்றாகத் தெரியும் . அங்கும் நமது இந்தியர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் . குவைத் என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களில் யாரிடமாவதுக் கேட்டால் பலருக்கு பதில் தெரியாது . இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள் குவைத் என்றால் அரபி மொழியில் சின்னக் கோட்டை என்று அர்த்தமாம் .

ன்ன நண்பர்களே இன்றையத் தகவல்கள் அனைத்தும் உங்களை மகிழ்வித்திருகும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் கவிதைகள் - ஊமை விழிகள் !!!

22

வாழும் நாட்களில் வாழாமல்
வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு
இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன
பொழுதுகளின் விளிம்பில் நின்று
குவிந்து கிடக்கும் பிணங்களில்
தனது உறவுகளின் அடையாளங்களை
ஆவேசமாய் தடவித் தடவி தேடும்
ஒரு பார்வையற்ற பெண்.
நெருப்பைக் குடித்து
தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும்
இவளின் இந்த தனிமை .

னைத்தும் இருந்தும்
எப்பொழுதும் குறை குடமாய் தளும்பி குதிக்கும்
எதோ ஒன்றின் மேலான
சொல்ல முடியாத சோகம் சுமந்த
அதே நாட்கள்
எதுவுமற்ற இன்றைய வெறுமையிலும்
இவளுடன் தொடர்கிறது .......

ரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.

குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும்
ஓலைகளின் யதார்த்த உரசலில் தெறிக்கும் சத்தத்தில்.
மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்துக்கொள்கிறது
தான் பார்வையற்றவள் என்பதையும் மறந்து
இவளின் எஞ்சிய உறவுகளின்
மரண பயம்....!!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.




மேலும் வாசிக்க.. >>

சிரி சிரி சிரிசிரி சிரி ஜோக்ஸ் !!!

27


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி  சிரிசிரி சிரி.
 னைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் என்னதான் பணம் , பதவி , உறவுகள் என்று எல்லாம் நம்மிடம் இருந்தாலும் விலைகொடுத்து வாங்க இயலாத பல விஷயங்கள் இருக்கின்றன . அதில் ஒன்றுதான் மகிழ்ச்சி . நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஒரு நிமிடத்தில் கோபப்பட வைத்துவிடலாம் . ஆனால் அதே நபரை அந்த ஒரு நிமிடத்திற்குள் நாம் மீண்டும் சிரிக்க வைப்பது என்பது இயலாத ஒன்று .அதுதான் கோபத்திற்கும் சந்தோசத்திற்கும் இடையில் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் . இன்னும் நம்மில் பலர் இருக்கிறார்கள் ஒரு நாள் முழுவதும் நகைச்சுவை படம் பார்ப்பார்கள் ஆனால் ஒரு முறை கூட சிரிக்க மாட்டார்கள் . அதே நபர் ஒன்றும் இருக்காது யாரேனும் அவருக்கு வேண்டாத ஒருவர் போகிற வழியில் எதிர் பாராமல் கீழே விழுந்திருப்பார் அதை பார்த்து இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள் . இப்படி ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் தினம்தோறும் நம் இதழ்களில் புன்னகை என்ற மலர்களை உதிர்துகொண்டுதான் இருக்கின்றோம் . அதுபோல் எனக்கும் சில நகைச்சுவை துணுக்குகள் ஒரு மடலின் வாயிலாக கிடைக்கப் பெற்றேன் . இதோ உங்களின் இதழ்களிலும் புன்னைகை மலர்களை நட்டுவைக்க அந்த நகைசுவை துணுக்குகள் .

னைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
ணவன்:  அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

 
ல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

ன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.


மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?


தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!


ப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
கன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

னி இங்கு  எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

சுவாசம் தேடும் இதயம் !!!

20

ன் முகம் நான் பார்த்ததில்லை
உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை
எழுத்துக்களினூடே உன் அறிமுகம்
ஒலி அலைகளில் உன் தரிசனம்
உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய்
நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் .
ன் செல்லச்சண்டைகளை
மழலைகுறும்பாய் எண்ணி
மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும்
என் மனம்.
ன் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம்
தேடுகிறேன் உன் மூச்சை
காற்றிற்கு வேலி இல்லை அல்லவா
அதனால் நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
 சுவாசம் இருந்தும்
சுவாசிக்க மறந்த இதயமாய் ! .........


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது புதிய ஆராய்ச்சி முடிவுகள் !!!

25

னைவருக்கும் வணக்கம் . நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான் , இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான் , தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான் . பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான் . ஆயிரம் தலை முறை வாழ சொத்துக்களும் பணமும் இருந்தும், ஐந்து மணி நேரம் நிம்மதியான உறக்கம் இல்லாமல் தினம் குளிருட்டப்பட்ட அறைக்குள் போலியாய் இரவுகளை நகர்த்துபவனும் இதே மனிதன்தான் .


ல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற வெறுமையில் வாழ்பவர்கள் சிலர் . எதுவும் இல்லாமல் நம்பிக்கை ஒன்று போதும் என்ற பெருமையில் வாழ்பவர்கள் பலர் . இப்படி இன்பம், துன்பம், ஆக்கம், அழிவு, வளர்ச்சி, கலை, கட்டுப்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் உருவாக்கியவன் இந்த மனிதன்தான். ஆனால் இவ்வளவு அற்புதங்களை தினமும் நிகழ்த்தி இன்னும் நாம் கற்பனையில் கூட எண்ண இயலாத பல அதிசியங்களை நிகழ்த்த தினமும் அறிவியல் என்ற அதிவேகக் குதிரைகளை ஆவேசமாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த மனிதர்களின் இனம் எப்பொழுது இந்த பூமியில் தோன்றியது யாருக்கேனும் தெரியுமா ? என்றுக் கேட்கத் தொடங்கினால் பல ஆயிரம் கற்பனைகளையும், கதைகளையும் பதில்களாக கண்களை மூடிக்கொண்டு வீசும் பலர் நம்மில் இருக்கிறோம் . அப்படி என்றால் இந்த பூமியில் மனித இனம் எப்படி தோன்றியது என்பது முழுமையாக இதுவரை அறியப்படாவிட்டாலும் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் ஓரளவிற்கு தகுந்த ஆதாரங்களுடன் மனிதனின் உண்மையான் முதல் தோற்றத்தைப் பற்றி நிருபிக்கப் பட்டிருக்கிறது. இந்த பூமியில் மனிதன் முதலில் எப்படி தோன்றினான் இது ஒரு முடிவற்றக் விவாதம் இது ஒரு பக்கம் இருக்கட்டும் . இப்பொழுதும் நாம் இந்த தகவலின் வாயிலாக இந்த மனித இனம் எப்பொழுது தோன்றியது என்பது பற்றி. சில தினங்களுக்கு முன்பு வெளியான மிகப் புதுமையான ஒரு ஆராய்ச்சியின் முடிவுகளின் விவரங்களை சற்று நாமும் தெரிந்துகொள்ளலாம் .

சில வருடங்களாக பல நாடுகளில் இந்த மனித இனம் எப்பொழுது தோன்றியது என்பது பற்றி பல கேள்விகளும் , சர்ச்சைகளும் நிகழ்ந்து வருகிறது. அந்த கேள்விக்கு பதில் தேடும் வகையில் பல நூறு ஆராய்சிகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது . இந்த போட்டியில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு அறிந்துகொள்ளும் ஆர்வத்தின் முதல் இடத்தில் இருக்கும் நாடு இங்கிலாந்து . ஆம் இந்த நாட்டில்தான் மனிதன் எப்பொழுது தோன்றினான் என்பது பற்றி அறிந்துகொள்ள பழக குழுக்களை சில வருடங்களுக்கு முன்பு அந்த நாட்டின் அரசு தயார் செய்து பல புதிய ஆராய்சிகளை தொடங்கியது . அந்தக் குழுக்களும் பல புதுவிதமான முறைகளில் இது பற்றிய ஆராய்சிகளை இதனை வருடங்களாக செய்து இப்பொழுது சில தினங்களுக்கு முன்பு பல திடிக்கிடும் உண்மைகளை வெளியிட்டு இருக்கிறார்களாம் .

ந்த மனித இனம் பற்றிய ஆராய்ச்சியில் இறுதி முடிவை இதே இங்கிலாந்துதான் இரண்டாயிரத்து ஐந்தாம் வருடம் உலகிற்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முடிவில் இப்பொழுது இருக்கும் இந்த மனித இனம் பூமியில் 700000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தெரிவித்து இருந்தது . அதே குழு இப்பொழுது பல புதுவிதமான ஆராய்ச்சியின் முடிவில் இந்த மனித இனம் 950000 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு இருகின்றார்கலாம் . அதுவும் இந்த மனித இனம் வேறு எங்கும் இல்லாமல் முதன் முதலில் இங்கிலாந்தில்தான் தோன்றி இருக்கக்கூடும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.
டந்த பத்து வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள நோர்போல்க் கடற்கரையில் இந்த மனித இனம் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியை செய்து வரும் இந்த குழுக்கள். கடல் பகுதியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் தோண்டி இந்த ஆராய்ச்சியை ஒரு புதுவிதமான முறையில் தொடங்கி இருக்கிறார்கள். அப்பொழுது அந்த தோண்டப்பட்டக் கடல் பகுதிகளில் மனிதர்கள் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் கிடைத்திருகிறது என்றும். அதுமட்டும் அல்லாது . இன்று நாம் பயன்படுத்தும் கருவிகளைவிட மிகக் கூர்மையான மிகவும் வினோதமான கற்களால் ஆன 78 வெட்டுக்கருவி ஆயுதங்ககளும் கிடைத்ததாம். அதை ஆராய்ந்த தொல்பொருள் வல்லுனர்கள் இந்த கருவிகளும் தடயங்களும் 840,000 அல்லது 950,000 வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டவை என்று உறுதி செய்து இருகிறார்கலாம் .

து மட்டும் இல்லாது . இன்று இருக்கும் யானைகளைப் போல் பல மடங்கு பெரியதாக கருதப்படும் மாமுத் யானைகளும் , செம்மான்களும் 950,000 வருடங்களுக்கு முன்பே பூமியில் தோன்றி வாழ்ந்ததற்கான தடையங்களும் கிடைத்து இருப்பதாக அறிக்கையின் முடிவுகள் தெரிவித்து இருக்கிறார்களாம். இந்தக் குழுவின் கருத்தின்படி இந்த ஆராய்ச்சி தொடர்ந்தால் இன்னும் மனிதன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கை முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை . என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்

டிஸ்கி. றந்த மனிதனிதனின் நேற்றைய வாழ்க்கையும் , இறக்கபோகும் மனிதனின் நாளைய வாழ்க்கையையும் ஆராய்ச்சி செய்யும் இது போன்ற குழுக்கள் இன்று தினமும் வறுமையிலும், சோகத்திலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தினம் நொந்து நொந்து செத்துகொண்டிருக்கும் இந்த நிகழ்காலத்தில் வாழும் மக்களின் மனநிலைப் பற்றி எப்பொழுதுதான் ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை !??????
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் கவிதைகள்- மணலுடன் இந்த மனநிலை !!!

30

  
மணல் திருட்டு


வீடு கட்ட என்று சொல்லி
குவிக்கப் பட்டிருக்கும்
இந்த மணல் குவியல்களை
பார்க்கும்பொழுதெல்லாம் எந்த
ஆற்றின் அஸ்தியோ என்று
எண்ணிக் கனத்துப்போய்விடுகிறது
உள்ளம் .!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!!

31

னைவருக்கும் வணக்கம் . தினம்தோறும் நாம் ஒவ்வொருவரும் பல ஆயிரக் கணக்கான வார்த்தைகளை நம் இதழ்களில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம் . அதில் கோபத்துடன் பல வார்த்தைகள் , மகிழ்ச்சியுடன் பல வார்த்தைகள் , காதலில் பல வார்த்தைகள் , காமத்தில் பல வார்த்தைகள் என இப்படி அடுக்கிகொண்டேப்போகலாம் . எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் பல வார்த்தைகளில் பல வினோதங்கள் மறைந்து இருக்கிறதுஅதை பற்றி ஆராயத் தொடங்கினால் இது போன்று இன்னும் எத்தனையோ ஆயிரம் பதிவுகளை அதற்காக செலவிட நேரிடலாம் !. சரி அப்படி என்றால் எதற்காக இந்த பதிவு என்ற உங்களின் வினாவிற்கான விடை இதோ தொடங்குகிறது .

நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் பல காரணங்களும் , கதைகளும் இருக்கின்றது . அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது பாலின்ட்ரோம் ( Palindrome ) .சரி இந்த பாலின்ட்ரோம் ( Palindrome ) என்றால் என்ன அர்த்தம் முதலில் அதைப் பாப்போம் . எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ ( Palindrome ) என்பதாம் .
மிழை விட ஆங்கிலத்தில்தான் இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம்கள் அதிகமாக பயன்படுத்தி பலர் உரையாடி இருக்கிறார்கள் . இதைவிட இதில் இன்னும் என்ன சிறப்பு என்றால் . தமிழில் நாம் இதுபோன்ற வார்த்தைகளை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதரணமாக வேறு எந்த வார்த்தைகளின் கலப்புமின்றி இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து கவிதையே எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. இதோ அந்த கவிதையின் வரிகள் சில உங்களுக்காக But no repaid diaper on tub!  இந்த கவிதை உலகத்தில் அதிகமான ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ப்படிதான் ஒரு முறை பிரிட்டனில் கார் பந்தய வீரர் ஒருவரிடம் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து பேட்டி எடுக்க சென்றிருந்தார்கலாம் .அப்பொழுது அவரிடம் பல கேள்விகளை வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக வீசி இருக்கிறார்கள் நம் பத்திரிக்கையாளர்கள் . அதற்கு அவர் பதில் அளித்து முடிக்கும் வரை எந்த மாற்று வார்த்தைகளும் பயன் படுத்தாமல் அணைத்து பதில்களையும் பாலின்ட்ரோம் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் அளித்திருக்கிறார் . அதைப் பார்த்து அணைத்து பத்திரிக்கையாளர்களும் வியந்து போனார்களாம் .

தோ அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளும் , பதில்களும் .!

அந்த வீரரின் பெயர் ராட்காட் . இவர் பிரிட்டனில் பிறந்தவர் . இவரின் பிறப்பிலே ஒரு வினோதம்தான் . ஆம் இவரின் பிறந்த தேதியே 9 / 3 /39 - ( Palindrome ) பாலின்ட்ரோம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சரி இனி அவரிடம் கேட்டகப்பட்டக் கேள்விகளுக்கு வருவோம் .
ங்களுக்கு எந்த கார் பிடிக்கும் என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Race Car  என்று பதில் அளித்து இருக்கிறார் .  
டுத்தக் கேள்வி ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரணக் கார் வாங்க நேர்ந்தால் எந்த வகையானக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்களாம் அதற்கு அவர் என்று ' A Toyota ' என்று பதில் அளித்து இருக்கிறார் . 
டுத்தக் கேள்வி நீங்கள் சினிமா பார்க்க விரும்பினால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்பிர்களா ?. இல்லை வீட்டில் இருந்து டீவியில் சினிமா பார்ப்பீர்களா ? .என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Same nice Cinemas என்று பதில் அளித்து இருக்கிறார்.

து மட்டும் இல்லை இது வரை எந்த மாநிலத்தின் மொழியின் பெயரில் இல்லாத சிறப்பு மலையாளத்திற்கு ( MALAYALAM ) இருக்கிறதாம் . எப்படிஎன்றால் ஆங்கிலத்தில் MALAYALAM  என்பதே ஒரு ( Palindrome ) பாலின்ட்ரோம் அடிப்படையில்தான் வைத்திருக்கிறார்கள். சந்தேகம் என்றால் வாசித்துப்பாருங்கள்.
மிழில் அதிகமானவர்களுக்கு தெரிந்த ஒரே பாலின்ட்ரோம் ( Palindrome ) வார்த்தை விகடகவி என்பதுதான் . நானும் முயற்சித்து சில வார்த்தைகளை தமிழில் இணைத்திருக்கிறேன் . இன்னும் இதுபோன்று பல வார்த்தைகளை உருவாக்கலாம் ஆனால் பல வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும் .

மிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள் !


ங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த ( PALIMDROME ) வார்த்தைகள் !


துபோன்ற உங்களுக்குத் தெரிந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை தெரியப்படுத்தலாம் . இன்னும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் .
 

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>