மனம் கொத்தி மழைத்துளிகள் - (Panithulishankar - raindrops - kavithaigal)

8

மழை பற்றி கவிதை கேட்கின்றாய்....
உன் அன்பைப் பற்றி எழுதுகிறேன்...!
நின்று போகாத மழைக் காலம்
என் வாழ்வில் நீதான்.... 

அடிவானம் சிவந்து, 
மின்னலாய் வெட்கம் சிதறி,
புன்னகையுடன் என்னை 
தினம் தினம் நனைக்கும்
அடை மழை நீதான்....!. 

உன் நினைவுகள் சுமந்து 
நீளும் என் பயணங்கள் முழுவதும்
என் உடன் நீளும் வானம் நீதான்.....!
மழையில் நனையாமல், 
ஒற்றைக் குடை பிடித்து,
ஓரமாய் தெருவோரம் நீ செல்கையில்
என் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தே
முழுவதும் நனைகிறேன்... 
உன் காதல் மழையில்..... 

நான் அருகில் இல்லாத நேரத்தில்
வார்த்தைகளை அடைமழையாய் 
கொட்டித் தீர்க்கும் உன் உதடுகள்...
என்னை பார்க்கும் மறு நொடி 
மழை நின்றபின் மரக்கிளை துளியாய் 
சிறிது சிறிதாகவே தூரல்போடுவது ஏனோ....!?
அழுகின்ற போது அணைத்துப் பேசினாய்....
சிரிக்கின்ற போது மகிழ்ச்சி கூட்டினாய்.....
இதயம் சிறைபடும் நேரத்தில்
கனமின்றி பறக்கும் சிறகாய் 
இந்த உள்ளம் மாற்றினாய்.....
மொத்தத்தில் தொலைதூர 
உனது வருகையும்,
மழை தந்து செல்லும்
மண் வாசமும் ஒன்றுதான் என் வாழ்வினில்.....
இப்பொழுதெல்லாம் சிறு குழந்தையின்
விளையாட்டு பொம்மைப் போலவே
மாறிப்போனது உனது நினைவுகளும்.....
சிறிது நேரம் இல்லையென்றால்
அழுது அடம்பிடித்து 
தேடத் துவங்கிவிடுகிறேன் 
மீண்டும் உன் ஞாபகங்களில் 
நனைந்துபோக..............

- நேசமுடன்
பனித்துளி சங்கர்.-
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

ஒருகல் ஒருகண்ணாடி - வீடியோ - (Orukal Orukannadi video songs)

3

ஒருகல் ஒருகண்ணாடி - வீடியோ பாடல் பகிர்வுக்காக

* * *
கழுகு - வீடியோ பாடல்
* * *
பனித்துளி சங்கர் பகிர்ந்திடுமு் ஒருகல் ஒருகண்ணாடி - வீடியோ பாடல் 
* * * * *
-நேசமுடன் 
பனித்துளி சங்கர்-
மேலும் வாசிக்க.. >>

தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்..!! (Panithulishankar - Kavithaigal)

7

உன்னை தொடர்புகொள்ளும்
ஒவ்வொரு முறையும்
துண்டிக்கப் படுகிறேன்.!
நீ இன்றி நீளும் ஒவ்வொரு இரவுகளிலும்
உன் நினைவுகளால் தண்டிக்கப் படுகிறேன் .!
என் இதயத் துடிப்பின் ஓசையைவிட
உன்னைப் பற்றிய ஞாபகங்களின் ஓசைகள்
சற்று அதிகமாகவே கேட்கிறது
என் தனிமையான உலகத்தில் .!
நிழலோடு வாழ்ந்து நிஜத்தோடு வீழ்ந்து
மறந்தும் மறக்காமல் கடந்து போகிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை 
தினம் தினம் போலியாய் .!
ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை சத்தமிடும்
கடிகாரத்தின் ஓசையில் 
மீண்டும் துயில் கொண்டுவிடுகிறது
சற்றுமுன்வரை நான் மறந்து போனதாய் நினைத்த
உன் ஞாபகங்கள் !...

-நேசமுடன்
பனித்துளி சங்கர்-
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal)

12


உன் இதயம் சுட்டவளை
இமைக்குமுன் மறந்துவிடு !
ஆனால் உன் இதயம் தொட்ட வளை
இறக்கும் வரை மறக்காதே ! 
* * * * * * *

நினைவுகள்...!!

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!

நீ துன்பத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
* * * * * * * 
- நேசமுடன் 
பனித்துளி சங்கர் -
மேலும் வாசிக்க.. >>