அவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் !!!

14

என் அன்புத் தோழி ஜெனிக்கு எனது இந்த கிறுக்கல்கள் சமர்ப்பணம் .!!!


பிரிவு என்ற வார்த்தையின் அர்த்தம்
 உணர்ந்ததில்லை இன்றுவரை .!
அவளின் குரலையும் கேட்டதில்லை
இன்றுவரை  .!
ஆனால் சில நேரங்களில் அவளின் முகவரி அற்ற
எழுத்துக்கள் மட்டுமே அவ்வப்பொழுது என்னை தீண்டும்பொழுதும்  எல்லாம் ஏனோ என் குட்டி இதயம் சிறகுகள் இன்றியும் மகிழ்ச்சியில் பறந்துகொண்டுதான் இருந்தது .அந்த நாள்வரை .......
ஆனால்
இன்று மட்டும் ஏதோ அவளின் குரல் கேட்க ஆசை .!
இருந்தும் என்னை கேட்காமலே அவளின்
தொலைபேசியின் எண்களை எப்படியோ கேட்டு விட்டது.,
எந்தன் முரட்டு ஆசைகள் !
அவளோ முதலில் பயம் என்றாள் ., !
ஆனால், பயப்படாமலே வந்தடைந்தன.,
அவளின் தொலைபேசியின் எண்கள் தொலைவிலிருந்து எண்ணை .!
இப்பொழுதும்கூட நான் அவளை பிரிந்து
பல ஆயிரம் மயில்க்கல் தொலைவில் தான் இருக்கிறேன் .!
அவளின் தொலைந்து தொலைந்து விடாதா
 நினைவுகளுடன் மட்டும் .!
அப்பொழுதெல்லாம் இந்த தூரத்தின் இடைவெளி
என்னையும் ,என் அவளையும் துரத்தியதாக
நினைவில் இல்லை இன்றுவரை .!
ஆனால் ,
இன்று நான்கு நாட்கள் என்னை விட்டு
பிரிந்து ஊருக்கு செல்கிறேன்.,
என்று அவள் இதழ்களில் இருந்து இந்த
வார்த்தைகள் உதிற்வதற்கு முன்னதாகவே ,
என் இதழ்களில் மலர்ந்தது ஏன் ? என்ற கேள்வி .இருந்தும் .
என் இதயத்திற்கு வலிக்காமல் தான் பதில் தந்தாள் ,
அம்மா , தம்பியை பார்க்க என்று
வார்த்தைகள் தீர்ந்ததுபோல் சுருக்கமாக .!
அவளுடன் நான் கணினியில்
எழுத்துக்களால் பேசும்பொழுது கூட,
கலவரம் அற்றுதான் சாந்தமாக இருந்தது
எந்தன் குட்டி இதயம் .!
ஆனால்,
அவளுடன் பேசாத இந்த நாட்களில் அதே குட்டி இதயத்தில்,
கலவரம் மட்டும்தான் சாதனையாகக் காட்சி அளிக்கிறது .!
இரவுகளில் கூட உறங்க மறக்கிறேன் . !
பகல்களில் கூட விழிக்க மறுக்கிறேன் . !
இப்படி வினாவும் அற்று , விடைகளும் அற்ற ,
கேள்விகள் மட்டும்தான் அணிவகுத்து நிற்கின்றன.,
நீ மீண்டும் செல்லமாக அழைக்க போகும் Hi Da செல்லம் என்ற ,
விலை மதிப்பில்லா அந்த சில வார்த்தைகளை நோக்கி .!
எழுதுகோல் இன்றி உதடுகளாலே உன்னை பிரிந்த,
இந்த நான்கு நாட்களில் கிறுக்கிய வார்த்தைகளுக்கும் கூட ,
கண்டிப்பாக வயதாகி இருக்க கூடும் .!
இருந்தும் நான் ஒரு தாயை பிரிந்த,
சிறு குழந்தாயாகத்தான் உந்தன் வருகை நோக்கி,
கறைந்து கொண்டு இருக்கிறேன் .!
நான் பணிபுரியும் இடம் எனக்கு,
எப்பொழுதும் கலவரமாகத் தோன்றும் .
ஆனால்,
உன்னை பிரிந்த இந்த நான்கு நாட்கள் மட்டும்,
தியான மடமாக மாறிப்போன விசித்திறம்தான்,
இன்னும் பதில்கள் அற்ற மர்மமாக என் மனத்தில்.!
உந்தன் பிரிவு என்னை தீண்டாத இந்த நொடிகள் வரை,
உந்தன் குரல் கேட்டு ஆசைகள் ஆற்றுத்தான்,
ஊமையாகவும் , ஊனமாகவும் இருந்தன .,
என் தொலைபேசியும் , எந்தன் விரல்களும் . !
ஆனால்,
உந்தன் பிரிவு என்ற புயல் என்னை தீண்டியதும் .,
நான் பாதுகாத்து வந்த என் ஊமை தொலைபேசியும் ,
எந்தன் ஊனமான விரல்களும் , மின்னல்போல் அல்லவா
உந்தன் தொலைபேசியை தொடர்பு கொள்ள
எண்களை பதிவு செய்தது .!
எந்தன் அழைப்பில் உந்தன் தொலைபேசியில்
வெளிப்பட்ட ஒவ்வொரு மணி ஓசையும் ,
உனக்கு முன்னால் முந்திக்கொண்டு எடு , எடு என்று
எனக்காக பலமுறை கெஞ்சியதாக அல்லவா,
என்னிடம் வந்து குறை கூறின !
திடீர் என்று ஒரே அமைதி .!
ஏன் நான் சுவாசிப்பதைக்கூட சில,
வினாடிகள் சிறை பிடித்து அல்லவா வைத்திருந்தேன் .,காரணம்
 முதல் முறையாக என்னவள் இதழ்கள்,
உதிர்க்க போகும் அந்த வார்த்தையை ,
என் செவிகளைத் தவிர வேறு எதுவும்,
தீண்டிவிடக்கூடாது என்ற ஒரு பொறாமைதான் .!
பலமணி நேரம் சுவாசாமின்றி ஒரு குடுவைக்குள்
அடைப்பட்டவன் விடுவிக்கப்பட்டால் எப்படியோ ?
அப்படித்தான் உணர்ந்தேன்., அவள் இதழ்கள் உதிர்த்த
முதல் வார்த்தை என்னை தீண்டிய மறு நொடி .!
எனக்கு உயிர் கொடுத்த அவளின்
 அந்த முதல் வார்த்தை என்ன ? என்றால் .!
நானும் என்ன என்றேன்.?
 மீண்டும் என்ன என்றால் .?
நானும் என்ன என்றேன் .!
இப்படி வினாக்ளே அற்ற கேள்விகள் அவள் இதழ்களிலும் .,
விடைகளே அற்ற வினாக்கள் என் இதழ்களிலும்
சில வினாடிகள் எங்களை ஆக்கிரமிக்கத்தான் செய்தன .!
மீண்டும் திடீர் என்று ஒரே அமைதி .!
திடீர் என்று என்னை சற்று அதிர வைத்தது .
நான் எதிர் பாராத தருணத்தில்
அவள் என் மீது வீசிய மற்றொரு வினா .!
நீ எதற்காக என்னிடம் I Love You என்று சொன்னாய் ?
அதற்கு முன் அவளிடம் பக்கம் பக்கமாக
 பேசிய என் உதடுகள் , அப்பொழுது மட்டும் ஏனோ
வார்த்தைகளே தீர்ந்தது போல்
பதிலை தேட துவங்கியது .!
மீண்டும் திடீர் என்று ஒரே அமைதி .!
என்னை காயப்படுத்த அவள் ஏனோ விரும்பவில்லை .!
எனவேதான் முதல் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்காமலயெ
மெதுவாக மறு வினாவை என் மீது வீசினால் .,
சாப்பிட்டியாடா செல்லம் ? என்று .!
உண்மை இல்லை என்று தெறிந்தும் .,
பொய் சொன்னேன் அவளிடம் .!
ஏன் ? என்று அவள் இதழ்களில் இருந்து
உதிறப்போகும் அந்த வார்த்தைக்காகவே .!
அவளின் மறு வினா ? நான் நினைத்தது போலவே
எனக்கு மகிழ்ச்சியின் முகவரியை தந்துவிட்துத்தான் சென்றது .!
தெரியாது என்றாலும், தெரிந்ததுபோல்
அவளிடம் ஊறுகாய் உன்னாதே என்றும் .!
தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் அவளின்
செல்ல நாய்க் குட்டிக்கு எந்தன் பெயரை வைக்க சொல்லியும் .!
பார்க்காமலே பார்த்தது போல் அவள் வீட்டு
பூச்செடிகளின் செல்லப்பெயர்களை விசாரித்து நானும் .!
புரியாமலே புரிந்தது போல் ரோஜா செடிக்கு Angel
என்று பெயர் வைத்ததாக அவளும் .!
பிடிக்காமலே பிடித்தது போல் குச்சி மிட்டாயும் ,
குருவி ரொட்டியும் வாங்கி வரச் சொல்லி நானும் .!
பிடித்தது போல் பிடிக்காமலே வாங்கி வருவதாக அவளும் .!
இப்படித்தான் அவள் இதழ்கள் உதிர்த்த வினாக்களும் .!
என் இதழ்கள் உதிர்த்த விடைகளும் .!
மகிழ்ச்சியில் மெய்மறந்து தொலைவிலிருந்தே
முத்தமிட்டுக் கொண்டிருந்தன .!
எந்தன் தொலைபேசியின் இணைப்பு
நாங்கள் எதிர்பாராமல் துண்டிக்கப்பட்ட அந்த நொடி வரை !
இதுவரை மட்டும்தான் அவளுக்கு தெறிந்திருக்கக்கூடும் .!
இது போன்ற லட்சக் கணக்கான உளரல்கள்
உன் பிரிவால் என் குட்டி இதயத்தில் ,
எண்ணிக்கைகள் அற்று இன்னும்
மலராமல் மொட்டுகளாகத்தான்
உன் வருகைக்காக ஏக்கங்கலையும் ,
எதிர்பார்ப்புக்களையும் மட்டும்
துணையாகக் கொண்டு வழியெங்கும் காத்திருக்கின்றன.!
என்பது உனக்கு எப்படி தெரியும் ?
                                                              -  மொட்டுக்கள் மீண்டும் மலரும் ................
மேலும் வாசிக்க.. >>

முட்டாள்கள் !!!!

1உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள்மேலும் வாசிக்க.. >>

மெட்டிச் சத்தம் !!!

2
உன் கொலுசு சத்தம்

கேட்டு
பிறந்த என்
கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம்
கேட்டு இறந்தன.

மேலும் வாசிக்க.. >>

கேள்விக்குறியாய் ??????????

6


முற்றுப் புள்ளி

எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவுகள் மட்டும் ????????????


 
மேலும் வாசிக்க.. >>

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

3


உன்னை ஒருமுறையாவது


தொட்டுப் பார்க்க
முடியவில்லையே
என்ற
சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்! !!!!!!!!
மேலும் வாசிக்க.. >>

தனிமையை !!!!

3


தனிமையை


உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள்

எப்போதும் எனை

தலைகோதியும்

தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

மேலும் வாசிக்க.. >>

போராட்டம் -- பயங்கரவாதம் !!!!

0


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார் . அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது . இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன் , விழாவுக்கு அவரையும் அழைத்தார் .

 ஆனால் , ரன்பீர்சிங்கோ , ' ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது . அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம் ! என்றார் . யோணன் சிங் அந்த விருதைப் புறக்கணித்தார் .

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது ! போராட்டத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும் என்ன விதியாசம் என்பதை , உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும் .
மேலும் வாசிக்க.. >>

அகிம்சை -- வீரம் ??

0

" அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?"


" கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்...


' ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் என் இதயத்தில் மட்டுமல்ல , உதடுகளிலும் குடியிருக்க வேண்டும்' . தான் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்று யூகிக்தும் , அதைப் புன்னகையோடு எதிர்கொள்ள விரும்பியதற்குப் பெயர் என்ன?"
மேலும் வாசிக்க.. >>

கொடிக்கு மரியாதை !

4சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித் தட்டில் வைத்து வெளியே எடுத்து வந்து , கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் ஏற்றி நாட்டுக்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செய்வார்கள் . இதுவே வேறு எந்தக் கோயிலிலும் இப்படிச் செய்வது கிடையாது .
மேலும் வாசிக்க.. >>

எழில் கோபுரம் மனோரா !!!

0


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம்.


வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் . உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் . பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .


தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது .


மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன . முதல் 2 வாயில்கள் சிறிய அளவில் உள்ள கதவுகளைக் கொண்டது . இரண்டாம் முகப்பு வாயில் அகழிப் பாதையை தாண்டியுள்ளது . இரண்டாம் வாயில் தூண்களும் கல்லால் கட்டப்பட்டவை . இக்கோட்டையில் பழ்ங்கால் மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன . இவ்வாயில் தூண்களின் ஒருபுறம் ஆங்கில கம்பெனியரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் , இக்கோட்டை ஆங்கிலேயரின் அதிகாரத்தில் இருந்துள்ளது என தெரிய வருகிறது .


மனோராவின் மையத்தில் கட்டப்பட்ட உப்பரிகை என்ற நிலை மாடம் அருங்கோண வடிவத்தில் கட்டப்பட்ட 9 அடுக்குகளை கொண்டது .


சுமார் 75 அடி உயரமுள்ள மேல் மாடி திறந்த வெளியாக காட்சியளிக்கிறது . மராட்டியரின் ஆட்சிக் காலத்தில் மனோரா சிறப்புற்று துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது .


மனோரா என்னும் நினைவுச் சின்னம் தமிழகத்தின் தொழில்நுட்பம் , ஆங்கிலேயரின் கலை வடிவம் ஆகிய இரண்டும் இணைந்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் .


பெயர் பெற்ற மனோராவை அரசு தஞ்சை மாவட்டத்தில் ஒரு சுற்றுலா தலமாக ஆக்கியுள்ளது .


இப்பகுதியில் கலங்கரைவிளக்கம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர் . இந்த பிரச்சனைக்குத்தீர்வு காண மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதன்பேரில் , மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள மனோரா அருகில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டு வருகிறது . இந்த கலங்கரைவிளக்கம் மனோராவின் உயரமான 75 அடியைவிட இரு மடங்கு அதிகம் உள்ளதால் , 20 மைல் தூரம் வரை கலங்கரைவிளக்கம் தெரியும் . மேலும் இது ' சிலி பாம் டெக்னாலஜி ' முறையில் கட்டப்பட்டு வருகிறது .
மேலும் வாசிக்க.. >>

எரிமலை பார்வைகள் !!!

12


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .யார் இவர்கள் ? ?? எதற்காக  இவன் வெறும் புகைப்படங்களை மட்டும் . பதிவு செய்திருக்கிறானே என்று யாரும் வருந்த வேண்டாம் . இந்த சோகமான புகைப்படங்களிலிருந்து வெளிப்படும் எரிமலை எழுத்துக்கள் ,. நாளை எனது எழுத்தாணியில் இருந்து ஏவுகனை வார்த்தைகளாக உங்கள் இதயங்களை துளைக்க விரைவில் .........................???????????????????

மேலும் வாசிக்க.. >>

பிழை !!!

1பெண்ணே !
நீ எழுதிய பிழை உள்ள
கடிதங்கள் கூட பிழை
இல்லா உன்னைப்போல்
அழகாகத்தான்
உள்ளது.
மேலும் வாசிக்க.. >>

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!

3


நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,?

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ?
நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ?
உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .?
நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ?
உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ?
உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன் ?
நீ புருவம் சுலித்ததால் ஏனோ அவற்றை திறந்து விடுகிறேன் ?


மேலும் வாசிக்க.. >>

ஞாபகம் !!!

2


இரவு என்றதும் பகல் ஞாபகம்

சூரியன் என்றதும் சந்திரன் ஞாபகம்
கவிதை என்றது காதல் ஞாபகம்
இதழ்கள் என்றதும் முத்தங்கள் ஞாபகம்
திருமணம் என்றதும் சொர்க்கம் ஞாபகம்
குழந்தை என்றதும் புன்னகை ஞாபகம்
பசி என்றதும் உணவு ஞாபகம்
ஏழை என்றதும் பணம் ஞாபகம்
வீணை என்றதும் இசை ஞாபகம்
கோழை என்றதும் வீரம் ஞாபகம்
துன்பம் என்றதும் கடவுள் ஞாபகம்
பிறப்பு என்றதும் இறப்பு ஞாபகம்
ஆனால் எனக்கு எப்பொழுதும்
 தாயே உந்தன் ஞாபகம் !!!
மேலும் வாசிக்க.. >>

அவள் நினைவுகளுடன் சில உளரல்கள் !!!

1

அடி பெண்ணே !

நீ உன் இமை கதவுகளை
ஒருமுறை மூடித் திறக்கும்
அந்த ஒரு சில நொடிகளில்
நான் என்முகத்தை ஓராயிரமுறை
துடைத்துக் கொள்கிறேன் .,


வள்ளுவன் உன் இதழ்களை
பார்த்தபின்புதான் திருக்குறளை
இரண்டு வரியில் எழுத தொடங்கினானோ ?
என்ற தீராத கேள்விக் கனைகளும்
அவ்வப்பொழுது என்னை
தீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .


நீ ஒவ்வொரு முறை
என்னை கடந்து செல்லும்பொழுதும்
உன் இதழ்கள் ஊமையாகி போனாலும் ,
உந்தன் பார்வைகள்
சத்தம் போட்டு என்னை நலம்
விசாரித்து விட்டுத்தான் செல்கின்றன .

நீ உன் தோழிகளுடன் பேசும்பொழுது
உன் ஈர இதழ்களில் இருந்து
தெறிக்கும் எச்சில் துளிகள் கூட
எனக்கு பன்னீர் துளிகள்
தெளிக்கப் பாடுவதாகத்தான் உணர்கிறேன் .

நீ என்னுடன் அளந்து பேசும்
அந்த ஒரு சில வார்த்தைகள் கூட
உன்னிடம் அடம் பிடித்துதான்
என்னிடம் வந்து சேர்கின்றன .


நான் உன்னை நேசிப்பதை
மறந்து விடுவேனோ என்ற
கவலை உனக்கு வேண்டாம் .
நான் நேசித்தால்தானே
உன்னை மறப்பாதற்கு .,
உன்னை சுவாசித்துக்கொண்டு
அல்லவா இருக்கிறேன் .,

நான் உண்மையில் மேடை
பேச்சாளன்தான் ஆனால்
நீ அரிதாய் எப்பொழுதாவது உதிர்க்கும்
வார்த்தைகளை கேட்ட மறு நொடியே
ஊமை பேச்சாளனாகிறேன்., ஏன் என்ற
வினாவிற்கு இன்னும் விடை
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் உன் விழிகளில் .

இப்படி உறக்கத்தில் கூட உளறுக்கின்றேன் .,
உலகத்தில் இதுவரை யாரும்
அறியாத வார்த்தைகள் , புரியாத மொழிகளில்
அழியாத உன் நினைவுகளால் !!!!!!!!!!!
மேலும் வாசிக்க.. >>

இமை கூட வேண்டாம் !!!

0

காதல் ஒரு சூறாவளி
பெண்ணே நீ ஒரு கண்ணி வெடி
கண்ணில் தினம் உன்னால் கண்ணீராடி
என் உயிர் போகும் தருணத்தில்
உன் காதல் சொல் பெண்ணே
என் உயிர் இங்கு போனாலும்
அந்த இறுதி நொடி வரை
என் இறந்த இதயத்திலும்
உன் நினைவுகளை சுமந்துகொண்டிருப்பேன் .
நீரில்லா மீனைப்போல ,நீயின்றி உயிர் துடிக்கிறேன் ,
நீ பார்க்க மறுத்த நீர்க் குமிழியாய்
நிலையற்ற காதல் கொண்டேன் .,
நீரின்றி வாழ்வேன் பெண்ணே !
ஆனால் நீ இன்றி வாழ மாட்டேன் .,
நான் இங்கு போகும் தூரம்
நாள்தோறும் தூறமாகும் .
உன் நினைவுகள் என்னை தீண்டி விட்டாள்
அந்த தூரம் கூட துளியாய் மாறும் .,
உன் விரல் தீண்ட வேண்டாம் என்னை
உன் விழி தீண்டினால் போதும்,
உன் இதழ் தீண்ட வேண்டாம் என்னை
உன் வார்த்தைகள் தீண்டினால் போதும் ,
இன்னும் உன் இருக்கங்கள் வேண்டாம் பெண்ணே .,
இனியவள் நீயே போதும் கண்ணே .,
இனியவள் உன்னை காண இமைக்காமல் காத்திருந்தேன் .
இமை மூடும் நேரத்தில் நீ வந்து சென்று விட்டாய்
அதனால் இமை கூட வேண்டாம் என்று
இறைவனை வேண்டுகிறேன் .
மேலும் வாசிக்க.. >>

தாயே !!!!

2

என்ன பிழை செய்தோம் ,?

பணம் என்ற காகிதத்தால் தினம் ,

மனம் நொந்து வாழ்கிறோம் !

கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,

மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .

நம்மை அறியாமல்

வழிந்தோடும் கண்ணீர்  துளிகளை

துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,

அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்

ஏனோ துடைக்க மறக்கிறோம் .?

வாழ்வதாய் எண்ணி

வாழ்க்கையின் முகவரியை

தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,

பணத்தின் முகவரி

கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,

நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?

பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????
மேலும் வாசிக்க.. >>

சங்கீதம் !!!

0
காதல் கவிதைகள் , நட்பு கவிதைகள் , சங்கரின் கவிதைகள் , ஹைக்கூ கவிதைகள் , பனித்துளி கவிதைகள் , பனித்துளி நினைவுகள் , தமிழ் கவிதை , அன்னை கவிதைகள் , தாய் கவிதை , சங்கர் , கவிதைகள் , கனவுகள் , முத்தம் , ஈரம் , சிந்தனைக் கவிதைகள் , மொக்கை , கிறுக்கல்கள் , சங்கரின் கிறுக்கல் , பனித்துளி , நினைவுகள் ,

அரசியல் , அறிவியல் , சங்கீதம் , சமூகம் , சிலப்பதிகாரம் , தலைவர்கள் , நியாயக் களஞ்சியம் , ராகம் , ஆன்மிகம் , இராமாயணம், இலக்கியம் , உயிரியல் , பொது , மாதம் , விமர்சனம் , கணிதம் , கண்டங்கள் , கவிதை , பழமொழி , மதம், மருத்துவம் , மஹாபாரதம் ,


பொது , அரசியல் , சமூகம் , கல்வி , அறிவியல் , தமிழ் , கணிதம் , நடப்பு , கலை , பண்பாடு , தொழில் ,இந்தியா , புரட்சி , இசை , நடனம் , நாடகம் , அழகு , அறிவு , வளர்ச்சி , பசுமை , வேளாண்மை , விலங்குகள் , பறவைகள் , நெசவு , குடும்பம் , சுற்று சூழல் , மருத்துவம் , சுகாதாரம் , தமிழ் கவிதைகள் , ஹைக்கூ கவிதைகள் , மரபு கவிதைகள் , நட்பு கவிதைகள் , புது கவிதைகள் , காதல் கவிதைகள் , இலக்கணம் , இலக்கியம் , இயல் , மாநிலம் , மாவட்டம் , கிராமம் , ஊராட்சி , வட்டம் , கடவுள் , மனிதன் , குழந்தைகள் , செல்வம் , மாணவர்கள் , அதிசயம் , போட்டிகள் , நாடுகள் , உலகம் , ஆன்மீகம் , தீவிரவாதம் , தீண்டாமை , ஊழல் , வரதட்சணை , திருமணம் , சொர்க்கம் , பள்ளிகள் , சோகம் , இறப்பு , நோய் , கல்லூரி , கனவுகள் , ஆசைகள் , ஆடை , உயிர் , வானம் , பூமி , வாழ்க்கை , வசந்தம் , கடன் , பணம் , தென்றல் , சுனாமி , கடல் , மலை , தண்ணீர் , காற்று , இயற்கை . சிரிப்பு , நகைச்சுவை , மகிழ்ச்சி, மன்னர்கள் , புலவர்கள் , புனிதம், ஓழைசுவடிகள் , ராணி , ராஜா , அந்தப்புரம் , அரண்மனை , கேள்வி,


உறவுகள் , சூனியம் , ஜோக்ஸ் , நிகழ்ச்சி , நல்வரவு , செலவுகள் , புன்னகை ,
மேலும் வாசிக்க.. >>

முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள் !!!

7

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.


*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.


*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

 
மேலும் வாசிக்க.. >>

ஓசி !!!

0


wஆபீஸ் தபால்களை அனுப்பும் உறை ( கவர் ) மீது சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டி ' இந்திய அரசுப் பணிக்கு மட்டும் ' ( On I . G . S . Only ) என்ற எழுத்துக்களை முத்திரை குத்தும் வழக்கம் இப்போது உள்ளது .


சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் 1865 - ல்தான் நடைமுறைக்கு வந்தது . அதற்கு முன்பு , கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சி நடைபெற்றபோது , ஆங்கிலேயர்கள் தங்கள் ஆபீஸ் தபால் உறை மீது


' கம்பெனி சேவைக்கு மட்டும் ' ( On Company Service Only ) என்பதைச் சுருக்கி O . C . S . என்கிற மூன்று ஆங்கில எழுத்துக்களை முத்திரை குத்தினார்கள் . இந்த கவர்களின் மேல் ஸ்டாம்ப் ஒட்டத் தேவை இல்லை . இது இலவச சேவை ! இதை ' ஓசி சர்வீஸ் ' ( O. C . S .) என்று சொல்லத் தொடங்கினார்கள் .


நாளாவட்டத்தில் O . C . என்ற இரண்டு எழுத்துக்களும் ' ஓசி ' என்ற தமிழ்ச் சொல்லாகி , நிலைத்துவிட்டது .
மேலும் வாசிக்க.. >>

தமிழ் ஜோக்ஸ் !!!

0

திடீர் பணக்காரர்மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?


கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!


ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...


சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?


ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..


மேனேஜர்: இந்த ஆபிசுக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?


வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?


மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

மேலும் வாசிக்க.. >>

காலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )

2

  புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.


மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.


தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.


பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.


ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.


பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.


அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.


"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.


தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
மேலும் வாசிக்க.. >>

தமிழ் நகைச்சுவை !!!

0

பைத்தியம்ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?


வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே "பைத்தியமா" இருக்கார்னு.


மரியாதை


அவன் நம்ம வீட்டு வேலைக்காரன் அவனுக்கு மரியாதை தராதே காமாட்சி..


சரிடா...


பாத்திரம்ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?


என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.தற்கொலை
படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்...


யார்..வில்லனா? கதாநாயகனா?..


தயாரிப்பாளர்..


மேலும் வாசிக்க.. >>

அறிஞர் !!!

1


அறிஞர் .


அண்ணாதுரை அறிஞர் .எண்ணாத் துறைநாடிஎண்ணிப் பிற்காலம்ஏற்பச் செய்தான்அண்ணாத் துரை ' அறிஞன் 'சொற்பெருக்கில் நற்றொடர்கள்ஆய்ந்தே டுத்துப்பண்ணாத் துறைஎன்ன ?வீழ்ந்தபுகழ் மீட்டான்பார்ப்பனத் தீநண்ணாமற் செய்தான்திராவிடர்க்கு வாழ்வளித்தான்நன்றே நன்றே !( அண்ணா அவர்கட்கு ' அறிஞர் ' பட்டம் கொடுத்தவர் ' கல்கி ' என்று சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . அண்ணாவை அவர் ' தென்னாட்டு பெர்னாட்ஷா ' என்றுதான் பாராட்டினார்.
முதன் முதலில் ' அறிஞர் ' எனக் குறிப்பிட்டுப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே யாவார் . அவருடைய கவிதைதான் மேலே உள்ளது .
மேலும் வாசிக்க.. >>

பிக்பென் !!!!

2

                                                                   பிக்பென்

வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை. லண்டன் நகரின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை 1834 -ல் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது . இதில்தான் இங்கிலாந்து பாராளுமன்றம் இயங்கிவந்தது . எனவே , பழைய அரண்மனை இருந்த அதே இடத்தில் , புதுப் பொலிவுடன் மீண்டும் ஒரு அரண்மனையைக் கட்ட இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்தது .


இதற்காக சார்லஸ் பாரி என்ற கட்டடக் கலைஞரை இங்கிலாந்து அரசு நியமித்தது . அதற்காக அகஸ்டஸ் புகின் உதவியை நாடினார் சார்லஸ் பாரி .


புதிதாக கட்டப்படும் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் மிகப் பெரிய அளவில் , பிரமாண்டமான ஒரு மணிக்கூண்டு கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது . இதன்படி 315 அடி உயரத்தில் , நான்கு. திசைகளில் இருந்து பார்த்தால் தெரியுமாறு பிரமாண்ட மணிக்கூண்டு கட்டப்பட்டது .


அரசு கேட்டுக் கொண்டதற்காக மிக பிரமாண்டமான வெண்கல மணியை தயாரித்தது ஜான் வார்னர் கம்பெனி . 16 ஆயிரத்து 300 கிலோவில் மிகப் பெரிய மணி உருவாக்கப்பட்டு , 16 குதிரைகள் கட்டிய பிரமாண்ட சாரட் வண்டியில் அது இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது . ஆனால் , அதிக எடை காரணமாக , சாரட் முறிந்ததால் , மணி கீழே விழுந்து சேதம் அடைந்தது . இதையடுத்து , மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு , 1854 -ம் ஆண்டு லண்டன் டவருக்குள் கொண்டு வரப்பட்டது . மணியை கட்டுவதற்காக 5 டன் எடை கொண்ட கடிகார அறை கட்டப்பட்டது . இதில் காற்று புகாத அறையில் கடிகாரத்துடன் மணி இணைக்கப்பட்டு , ஒலி அளவு சோதிக்கப்பட்டது . ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் மிகச் சிறிய அளவில் மணி ஒலிக்குமாறு முதலில் பரிசோதிக்கப்பட்டது . பின்னர் , 1858 ஏப்ரல் 10 -ம் தேதி லண்டன் டவர் கடிகாரத்துடன் , பிரமாண்டமான மணி இணைக்கப்பட்டு , இயக்கத்திற்குத் தயாரானது .

2-ம் உலக போரின்போது 1941-ல் ஜெர்மன் குண்டு வீச்சில் இந்த கடிகார கோபுரத்தின் 2 பக்கங்கள் சேதம் அடைந்தன . கடந்த 1976-ல் கடும் பனிப்பொழிவு காரணமாக , கடிகாரத்தின் முட்கள் சரிவர இயங்கவில்லை . இன்று வரை லண்டன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது . உலகின் மிகப் பெரிய மணியோசை கடிகாரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் வாசிக்க.. >>

திப்பு சுல்தான் !!!

0


மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தார் . அவர் பிறந்த வருடம் குறித்து இரு வேறு தகவல்கள் கூறப்படுகிறது . எனினும் , மைசூர் மன்னர் ஹைதர் அலி , அவரது 2 - வது மனைவி வாதிமா என்ற பெற்றோருக்கு 1750ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி திப்பு சுல்தான் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தன் தந்தை மரணத்துக்குப் பின்னர் 1782 ம் ஆண்டு மைசூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் .


திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில்தான் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டது . லால் பாக் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி ஹைதர் அலி காலத்தில் தொடங்கியது . ஆனால் , அதை நிறைவு செய்யும் முன்பு அவர் இறந்து விட்டார் . இதையடுத்து லால் பாக் பூங்காவை திப்பு சுல்தான் கட்டி முடித்தார் .


திப்பு சுல்தான் கண்டு பிடித்த போர் ஆயுதமான ராக்கெட்தான் உலகின் முதல் போர் ராக்கெட் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார் . போர் வீரர் மட்டுமின்றி சிறந்த கவிஞர் என்றும் போற்றப்பட்டார் .


ஹைதர் அலி மன்னராக இருந்த போது ஆங்கிலேயர்கள் மைசூர் மீது படையெடுத்தனர் . அப்போது , போரில் தந்தைக்கு உதவியாக திகழ்ந்து திப்பு சுல்தான் வெற்றி தேடித்தந்தார் .


ஆனால் , திப்பு சுல்தான் ஆட்சியில் மீண்டும் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர் . 3 வது மற்றும் 4 வது போரில் ஆங்கிலேயர் மற்றும் அதன் கூடுப்படைகளிடம் தோல்வியை திப்பு சுலதான் தழுவினார் . மைசூரின் ஆட்சி தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 1799 ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் .

மேலும் வாசிக்க.. >>

அஞ்ச வேண்டாம் சிங்கத்திற்கு !!!

0

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.


அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.


பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.


பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.


மேலும் வாசிக்க.. >>

தேவரின் பண்பு !!!!

1தென்னகத்து நேதாஜி என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . தேவர் ஐயா , தேவர் பெருமான் என அழைக்கப்பட்டவர் . அவர் பெண்களை பெரிதும் மதிப்பவர் . பெண்ணை , பெண்மையை போற்றும் குணம் கொண்டவர் .


1955 ல் அவர் பர்மா சென்றிருந்தார் .அவருக்கு புத்தமதம் சார்பில் வரவேற்பு அளித்தனர் . அழைப்பை ஏற்று சென்றார் .அவர் அங்கு வந்த போது புத்தமதப் பெண்டிர் வரிசையாக மண்டியிட்டு அமர்ந்து தங்கள் கூந்தலை விரித்து தரையில் பரப்பினர் . அதன் மீது நடந்து சென்று இருக்கையில் அமர வேண்டும் என்றனர் . மிகச் சிறந்தவர்கள் என கருதுபவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு.


இந்த வரவேற்பு முறையில் தேவருக்கு உடன்பாடில்லை . அந்த ஏற்பாட்டை பார்த்ததும் பதறி விட்டார் . " நான் வணங்கும் தாய் போன்று பராசக்தியின் வடிவானவர்கள் பெண்கள் . அவர்கள் தலைமுடி மீது நான் கால் வைக்க மாட்டேன் " என கரங்கூப்பி மறுத்து விட்டார் . இதைக் கேட்டு புத்தமத துறவிகள் , பெண்கள் யாவரும் வியந்து , மகிழ்ந்தனர் .
மேலும் வாசிக்க.. >>