ஞாபகத் தூறல் - காதல் கவிதைகள் > Panithuli shankar Tamil New Kadhal Kavithaigal

20


கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஓயாத அடை மழையென
உன் நினைவுகள்..!

சுற்றும் பூமி நிற்கும்போதும்
மறக்காத சுவாசமாய்
உன் ஸ்பரிசம்..!

மழை நின்று போனது
நீயும் நானும்
பிரிந்துசெல்ல மனமின்றி
பிரிந்து சென்றோம்.!.

காலங்கள் கடிவாளங்கள் இல்லாத
குதிரையாய் கால் போகும்
திசை எங்கும் ஓடிப்போனது..!

ஒரே மூச்சில் வாசித்து முடிக்கப்பட்ட
புத்தகத்தின் பக்கங்களாய்
பத்து ஆண்டுகள்
சத்தமின்றி கழிந்து போனது..!
இன்னும் இளமை மாறாமல்
அதே புன்னகையோடு எப்பொழுதும்
தலையசைக்கும் மரங்கள்..!

மண்ணைக் கட்டிக்கொண்டு
இன்னும் நமக்காய்
காத்துக் கிடக்கும் உறவுகளாய்
பார்க்கும் திசை எங்கும்
பச்சை நிறத்தில் புற்கள்..!

இன்னும் பழமை மாறாமல்
அதே பொலிவுடன் அந்த இடம் .
இதோ அதே மழை
அதே ஒற்றைக் குடை
ஆனால் நீ அருகில் இல்லை..!

வெகு நேரம் காத்துக் கிடந்தேன்
நீ வரவில்லை .
அன்று உன்னையும் என்னையும்
ஒன்றாய் நனைத்த
இந்த மழையில் இன்று நான் மட்டும்
தனிமையில் நனைகிறேன்...!

உன் நினைவுகளுடன்
நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு இடங்களிலும்
மழை நின்றபின்னும்
தூறிக்கொண்டிருக்கிறது
உன் ஞாபகங்கள் மட்டும்..!


                            - பனித்துளிசங்கர்
 

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - உலகின் முதல் அஞ்சற்தலை வரலாறு -World first stamp history > Panithuli shankar

11


னைத்து உறவுகளுக்கும் வணக்கம்வலைகளின் எண்ணிக்கை கூடினாலும் மீன்களின் எண்ணிக்கை குறைவதில்லை என்பதுபோல எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் தினமும் புதிதாய் எழுதத் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தினமும்அதிகரிக்கத் தொடங்கிவிட்டது என்பதை நன்றாக அறிய முடிகிறதுஎத்தனை எத்தனை புதியப் பதிவுகள் எத்தனை எத்தனைபுதியப் பதிவர்கள் அனைவரின் பதிவுகளின் தலைப்புகளை அறிந்துகொள்வதிலே பாதி நாட்கள் கழிந்து போகிறதுஇதில்மற்றொருக் கூட்டம் பதிவின் தலைப்புகளை தாறுமாறாக வைத்து வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்கவும்செய்துவிடுகிறார்கள். 
து எப்படியோ கடந்து ஒரு வாரத்தில் நான் உணர்ந்த சில நிகழ்வுகள் இவைதான். சரி..! இனி நாம் இன்றையத் தகவலுக்கு வருவோம்நான்கு பேர் ஒன்றாய் சேர்ந்தாலே நாட்டு நடப்பு என்கிற பெயரில் பக்கத்து தெருவில்தும்மியவன் முதல் எதிர் தெருவில் தடுக்கி விழுந்தவன் வரை ஏதாவது ஒன்றை பேசி அப்பொழுதே அதை மறக்கவும் செய்துவிடுகிறோம் என்பது போலவே கடந்த சில வாரங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது அன்னா ஹசாரே-வின் உண்ணாவிரதமும். இது வரவேற்கத் தகுந்தது என்ற போதிலும் இறுதியில் இதுதாண்டா போலீஸ் என்பது போல இதுதாண்டா அரசியல் என்று சொல்லி விடுவார்கள் என்பது மட்டும் அரசியல் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்.  சரி இனி நமக்கு ஏதாவது ஒன்றை பற்றி இன்று புதிதாய் அறிந்துகொள்வதை விட்டுவிட்டு எதற்கு இந்த தேவை இல்லாத புளிக்கும் விசங்கள் என்று சலித்துக் கொள்ளவேண்டாம். தகவலுக்கு போகலாம். 

ரு காலத்தில் அஞ்சல்காரர்களும் அஞ்சல் அலுவலகங்களும்தான் பலருக்கு தெய்வங்களாக தெரிந்தது அந்த அளவிற்கு தொலை தூரத்தில் இருக்கும், மகனோ அல்லது கணவனோ அப்பாவோ, அம்மாவோ என்று உறவுகளின் உணர்வுகளை சுமந்துவரும் கடிதங்கள் ஒவ்வொருவரின் கண்களுக்கும் காட்சி தர உதவிய துறைகளில் இதுதான் என்று அனைவரும் அறிந்ததே. இன்றும் கடிதங்களின் வரவுகள் குறைந்துபோனாலும் அந்தக் கடிதங்களுக்கு இருக்கும் ஒரு குறைந்து போகாத சுவராஸ்யம் எந்த இணைய வளர்ச்சியிலும் இல்லை என்று சொல்லலாம். சரி இந்த கடிதங்களுக்கும் இந்த அஞ்சல் துறைக்கும் எண்ணத் தொடர்பு இந்த தகவலுடன்..!? இந்த தகவல் கடிதங்கள் பற்றியது இல்லை கடிதத்தின் மேல் ஒட்டப்படும் தபால் ஸ்டாம்புகள் பற்றியதுதான் .

ரு நாட்டின் , மாநிலத்தின் கலாசாரத்தை , வரலாற்றை , மக்களின் பழக்கவழக்கங்களை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் சரித்திர ஆதாரங்களாக தபால் தலைகள்  (POST STAMPS)  திகழ்கின்றன . அரசியல் தலைவர்கள் , நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் உட்பட அனைத்து நாடுகளின் தபால் தலைகளும் ஒவ்வொரு வரலாற்றை சொல்கிறது , நினைவுபடுத்துகிறது
 உலகத்தில் தோன்றிய மற்ற கண்டுபிடுப்புகளை விட இந்த தபால் தலை அறிமுகம் பல விவாதங்களுக்குப் பின்பே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் நம்புவீர்களா !? ஆம் முதன் முதலில் 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' (James Chalmers} என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும் என்னும் அறிக்கையில் வெளியிட்டார் . சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் முதபால் அலுவலகம், முதன் முதலில் 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உலகின் தல் உறைகளையும் வெளியிட்டது.

மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டபென்னி பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற மிகக் கடுமையான சட்டம் ஒன்றை உருவாக்கினார்கள் . இந்த சட்டம் பல ஆண்டுகள் வரை யாராலும் எதிர்க்கப் படாமல் இருந்துவந்தது . அதன் பின் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் தலையீட்டால் இந்த சட்டம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது என்றால் பார்த்துகொள்ளுங்கள் துவரை உலகில் உருவாக்கப் பட்ட தபால் தலைகளில் மிகவும் பிரபலமான தபால் தலைகள் இவைகள் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் 
பென்னி பிளாக்
 மொரீஷியஸ் நீல பென்னி
 The "Treskilling" Yellow
 தலைகீழ் ஜென்னி
 பிரிட்டிஷ் கயானா 1 சென்ட் சாந்து
 Perot provisional
 Hawaii Missionaries
 Basel Dove
 Uganda Cowries
 Vineta provisional
 கருப்பு ஹொண்டூராஸ் (Black Honduras)
 Scinde Dawk
 சென் லூயிஸ் கரடிகள் (St. Louis Bears)


ன்று இருக்கும்.நம்மில் பலர் தபால்களில் ஸ்டாம்புகளை (அஞ்சல் வில்லை) ஓட்டும்பொழுது நாக்கில் வைத்து எச்சிலைத் தடவித்தான் ஒட்டி இருக்கிறோம். ஏன் நானும் எத்தனையோ முறை இதேபோல்தான் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் இந்த தகவலை அறிந்த பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்ன இந்த ஸ்டாம்பில் இருக்கிறது என்று பலருக்கு எண்ணத் தோன்றலாம் சொல்கிறேன். சிலர் தபால் ஸ்டாம்புகளை (POST STAMPS) நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே, இது ஆசாரக் குற்றம். பழைய பூட்ஸ்கள், செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவி இருக்கிறார்களாம், இன்று வரை ஸ்டாம்புகளின் பின் புறத்தில்  இந்த முறைதான் கையாளப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி எந்தப் பொருளையும் வாங்கி நாக்கில் வைப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது என்றே நினைக்கிறேன். 
ரி நண்பர்களே..!! இன்றையத் தகவலும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு புதியத் தகவலுடன் விரைவில் சந்திக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
                                                             
                                                                 நேசத்துடன் 

                                                            பனித்துளி சங்கர்மேலும் வாசிக்க.. >>

காதல் துளிர் - முடிவில்லா காதல் கவிதை விழா - Panithuli shankar Tamil SMS kadhal kavithaigal 2011

15

"உலகத்தில் விரும்பப்படாதவர்கள்
அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !
வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர
ஆசைகள் எப்போதும் வளர்பிறைதான் .
வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது இந்த அழியாத காதல் "

                                            - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

தமிழ் சினிமா ஒரு பார்வை (1981) - பாக்யராஜ் சினிமா முதல் படி..! (Tamil Cinima Director Bakkiyaraj first movie)

8

னைத்து நேசங்களுக்கும்  பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இன்று நாம் இன்று ஒரு தகவலில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த துறை என்று சொல்லலாம். அப்படியென்றால் என்று நீங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பே நான் பதிலை சொல்லிவிடுகிறேன் சினிமாத் துறை. உலகத்தில் மிகவும் பிரபலமான சினிமா துறை சார்ந்தவர்கள் பற்றி நமக்கு அதிக ஆர்வம இல்லையென்றாலும் நமது உள்ளூர் சினிமாக் காரர்களின் கடந்த காலங்கள் பற்றி அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. சரி இனி நாம் மேட்டருக்கு வருவோம் . 

ந்த தகவல் நான் பிறப்பதற்கு முன்பே வெளிவந்த ஒன்று என்பது மற்றொரு சுவராஸ்யம். சரி. இது ஒரு பக்கம் இருக்கட்டும். பிறப்பதற்கு முன்பு என்றால் ஆம்..!! (1981) ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்றில் வெளிவந்த ஒரு பிரபல நாளிதழில் வெளியான சினிமாப் பற்றியத் தகவல். அப்படி இந்த தகவலில் நம்மை சற்று ரசிக்கவும் சற்று கண்கள் கலங்கவும் வைக்கப்போகும் இந்த சினிமா கலைஞன் யார்..??!!.

ரு காலத்தில் கண்ணாடியை மாட்டி சற்று அமுக்கிவிட்டாலே போதும் உடனே அனைவரும் இவரின் பெயரை சொல்லி விடுவார்கள். ”ங்...... அதாவது பார்த்தீங்கன்னா.. இது கொஞ்சம் விவகாரமான விஷயம்தான். ஆனால்  இல்வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான விஷயம் என்று நாகரீகமாகவும், நகைச்சுவையாகவும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடையச் செய்தவர். துவண்டு போய் இருந்த முருங்கைக்காய் விற்பனையை தன்னுடைய ”முந்தானை முடிச்சு” படம் மூலம் தூக்கி நிறுத்திய பெருமை இவரை சாரும் என்றால் அது மிகையாகாது. சரி இனியும் புதிர் வேண்டாம்.
‎''ஹீரோ ஆகணும்னா பார்க்க லட்சணமா அழகா இருக்கணும்..!''

'கிழக்கே போகும் ரயில்' வளர ஆரம்பித்தபோது, பாக்யராஜை தனக்கு வசனம் எழுத உதவியாக வைத்துக்கொண்டதோடு, உதவி டைரக்டராகவும் பிரமோஷன் கொடுத்தார் பாரதிராஜா. அந்தப் படத்திற்கு ஒரு பாட்டையும் எழுதி, இரண்டு சீன்களில் நடிக்கவும் செய்தார் பாக்யராஜ்.
தான் சினிமாவில் சேர்ந்துவிட்ட செய்தியைத் தெரிவித்து தன் அம்மாவிடம் ஆசி பெற வந்தார் பாக்யராஜ். 'கிழக்கே போகும் ரயில்' படத்தைப் பார்த்துவிட்டு, ''நீ இரண்டு மூணு சீன்தானே வரே! ஏன் ஹீரோவா நடிக்கல?'' என்று அம்மா கேட்டார். ''ஹீரோவாகணும்னா நல்லா லட்சணமா, பார்க்க அழகா இருக்கணும்மா!'' என்று இவர் பதில் சொன்னார். உடனே, ''நீ நல்லாத் தாண்டா இருக்கே. நீ வேணா பாரு, நீ ஹீரோவா வரத்தான் போறே!'' என்று ஆசீர்வதித்தார் அம்மா.
'புதிய வார்ப்புகள்' படத்திற்கு ஹீரோ தேடிக்கொண்டிருந்தார் பாரதிராஜா. ஒருநாள், ஸ்டில் போட்டோகிராபர் லட்சுமிகாந்தன், ''உங்களுக்குக் கண்ணாடி போட்டு ஒரு ஸ்டில் எடுக்கச் சொல்லியிருக்கார் டைரக்டர்'' என்று சொன்னபோது, ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று முதலில் நினைத்தார் பாக்யராஜ். ஆனால், தான்தான் 'புதிய வார்ப்புகள்' படத்தின் ஹீரோ என்பதை அறிந்தவுடன் அவருக்கு இன்ப அதிர்ச்சி!
''என் அம்மாவுக்கு 'உன் ஆசை நிறைவேறிவிட்டது'ன்னு உடனே லெட்டர் போட்டேன். ஆனால், படம் வெளிவரும்போது அதைப் பார்த்துச் சந்தோஷப்பட என் அம்மா உயிரோடு இல்லை'' என்று கண் கலங்கினார் பாக்யராஜ்.
 
ன்ன நண்பர்களே..!! இன்றைய சினிமாப் பற்றியத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். இன்னும் அதிகம் அறிந்துகொள்வோம் .
நேசத்துடன்
பனித்துளி சங்கர்.
*  *  *  *  *  *  *
மேலும் வாசிக்க.. >>

இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar

52

ரண்டுக் குடைக்குள்
ஒற்றை முத்தம் !..
இதயம் இரண்டில்
ஒன்றாய் யுத்தம் !..
இதழ்கள் இரண்டில்
புதிதாய் சத்தம் !.
இன்னும் நீளும்
இந்த காதல் பித்தம் !....

                        - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

எல்லாம் ஒரு விளம்பரம்தான் - நகைச்சுவைத் தகவல்கள் - Advertisement Technical

14

னைத்து உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். மீண்டும் உங்கள் அனைவரையும் இன்று ஒரு புதிய தகவலின் வாயிலாகவும், நான் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. அனைவருக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் என்று சொல்லி முதலில் தொடங்குவது உண்டு. பல நண்பர்கள் கூட இதைப் பற்றி அதிகமாகக் கேட்டும் இருக்கிறார்கள். இதற்காக மிகப்பெரிய காரணம் ஒன்றும் சொல்ல இயலாவிட்டாலும் இப்பொழுது உள்ள நவீனத்துவத்தில் இது போன்று மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக எதற்காக கேட்கவேண்டும் என்று எண்ணலாம். நாளை என்பதன் மீது இருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மட்டுமே இன்றையப் பொழுதை மிகவும் யதார்த்தமாகக் கடந்துக் கொண்டிருக்கிறோம்.

ரு வேலை நாளை என்பது மட்டுமே நமக்குள் இறுதியாகிப்போனால் இன்றையப்பொழுதும் நமக்கு நரகம்தான். அதனால்தான் தினமும் விடியும் ஒவ்வொரு நாட்களையும் ஒரு புதுமையுடன் ஏற்று உங்களை சந்திப்பதில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. இந்த வார்த்தைகளை நமது தாய் தந்தையுடனும் ஒப்பிடலாம். ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் உறவுகளின் அழைப்பிதல் ஒரு போதும் மாறப்போவதில்லை. சரி இந்த சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று நாம் தகவலுக்கு வருவோம். கடந்த குட்டித் தகவல் என்றப் பதிவில் விளம்பரங்கள் பற்றிய ஒரு சுவாராஸ்யமானத் தகவல் ஒன்றைத் தந்திருந்தேன். இந்தப் பதிவும் விளம்பரங்கள் பற்றியதுதான். 

ன்று விளம்பரங்கள் இல்லாத தொழிலோ அல்லது சினிமாவோ அல்லது அரசியலோ என இப்படி இன்னும் பல நூறு அல்லது பல்லாயிரம் என்று பலத் துறைகளைப் பற்றி சொல்லிகொண்டேப் போகலாம் அந்த அளவிற்கு விளம்பரங்கள் இல்லாமல் வளர்ச்சி அடைந்த எந்த தொழிலும் இல்லை என்று சொல்லலாம். பூகம்பமும், சுனாமியும் ஏற்படுவதை கூட இப்பொழுது விளம்பரமாக சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள் அந்த அளவிற்கு தினந்தோறும் வியாபார யுத்திகள் நிமிடத்திற்கு ஒரு மாற்றத்தைக் கண்டு கொண்டிருக்கிறது .

விளம்பரங்கள் என்று சொன்னவுடன் நான் மறக்க இயலாத ஒரு நிகழ்வு இப்பொழுது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. பொதுவாக இப்பொழுது வெளியிடப்படும் விளம்பரங்களின் கருத்து என்னவென்றே பலருக்கு புரிவதில்லை அந்த அளவிற்கு சம்மந்தமே இல்லாத பல புனைவுகளை விளம்பரங்களில் ஏற்படுத்தி மக்களை குழப்பிய வண்ணம் இருக்கிறார்கள். நானும் குழம்பிய ஒரு விளம்பரம் உண்டு. அந்தக் காலக்கட்டத்தில் கொசுக்களின் பிரச்சினை மிகவும் தலை தூக்கி இருந்தது. இப்ப மட்டுமென்ன தலைகுனிந்தா இருக்குனெல்லாம் கேட்கப்படாது. ஒகெ ஹி..ஹி..ஹி..) தினமும் ஒரு புதிய கொசு விரட்டிகளை அறிமுகம் செய்த காலம். நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ப்பொழுது ஆல் அவுட் என்ற பெயரில் ஒரு கொசுவர்த்தியின் விளம்பரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது . இதற்கு முக்கியக் காரணம் அவர்களின் விளம்பரத் தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். இதை பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் தெரியாதவர்களுக்கு இந்த ஆல் அவுட் கொசு விரட்டியின் விளம்பர சுருக்கம்.

ந்த கொசு விரட்டியை வாங்கி மின்சாரத்தில் பொருத்தியவுடன் இரவில் வரும் கொசுக்களை தவளை போன்ற ஒன்று திடீர் என்று தோன்றி எம்பி எம்பி கொசுக்களை பிடித்து கொல்வதுபோல விளம்பரம் செய்திருந்தார்கள். நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்த ஆர்வத்தில் மூன்று ஆல் அவுட் கொசு விரட்டிகளை வாங்கி சென்று வீட்டில் பொருத்திவிட்டு விடியும் வரை இன்னும் தவளை குதிக்கவில்லை குதிக்கவில்லை என்று காத்திருந்து ஏமாந்து போய் விடிந்ததும் கோபத்தில், அதனை வாங்கிய கடைக்காரரிடமே இதில் தவளை தாவவில்லை என்று சொல்லிக் காசு கேட்டு சண்டை போட்ட ஞாபகம் இன்றும் மறந்துபோகாத ஒன்று. 

ரி நண்பர்களே..! சொல்ல வந்த தகவல் மறந்து போனது சரி இனித் தகவலுக்கு வருவோம் . விளம்பரம் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருந்தாலும் நம்மில் பலருக்குத் தெரியாத பல புதிய விஷயங்கள் உண்டு. நம்மில் எத்தனை பேருக்கு விளம்பர உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ஸ்லோகன் பற்றி தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ”தொட விரும்பும் சருமம்” ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .

விளம்பரம் பற்றிய இன்றையத் தகவலும் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் விரைவில் சந்திக்கிறேன்.

நேசத்துடன்
பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

New காதல் கவிதைகள் - நிலா காதல் - Panithuli shankar kadhal kavithaigal in tamil

24


தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..!
நடு நிசியில்,
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
”நீ” இல்லாத
”என்னை” போலவே..!!

                                    - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

விண்வெளி மனிதர்கள் - வியப்பான ஒரு சுவராஸ்யம் - இன்று ஒரு தகவல் - Panithuli shankar -Wonders of Space - Moon travel

19

னைவருக்கும் வணக்கம். இப்பொழுதெல்லாம் பூமியில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளை விட விண்ணில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் தான் அதிகம் அந்த அளவிற்கு மதுரை டூ தேனி என்பது போல மண்ணுலகம் டூ விண்ணுலகம் என்ற அளவில் மிகவும் சாதாரணமாக பயணிக்கத் தொடங்கிவிட்டனர். சரி அப்படி இந்த நிலவுக்கு சென்று வர எவ்வளவுதான் டிக்கெட் கேட்பார்கள் என்று யாருக்கேனும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் சற்று உங்களின் இதயங்களை பாதுகாப்பாகப் பார்த்துகொள்ளுங்கள். அந்த அளவிற்கு மிகபெரியத் தொகை சும்மா 35 மில்லியன் டாலர். அதிலும் ஆயிரம் விதிமுறைகள் இவற்றில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே அங்கு செல்ல முடியுமாம்.
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதன், யூரி ககாரின் என்பவராவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, ரஷ்யா ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் I -யினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியைச் சுற்றிச் செலுத்தப்பட்ட   விண்கலமொன்றில் இவரைச் சுமந்து சென்ற கலமும், 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷ்யாவினாலேயே அனுப்பப்பட்டது.


ஷ்ய விண்வெளி ஓடம் மூலம் 2007ம் ஆண்டு ஏப்ரலில் ஒருமுறை விண்வெளியை எட்டிப் பார்த்துவிட்டவர்தான் சிமோன்யி. அதற்காக அவர் 25 மில்லியன் டாலர்கள் செலவு செய்தார். இப்போது விண்வெளிக்குச் செல்ல 35 மில்லியன் டாலர் என்று முடிவு செய்திருக்கிறார்கள் .

ரிங்க இதெல்லாம் எதற்கு நமக்கு இப்படி  35 மில்லியன் டாலர் கட்டி நிலவு போறாங்களே அவங்க அங்க சாப்பிட என்ன என்ன கொடுப்பாங்க என்று மட்டும் உங்களுக்கு தெரிந்தது நம்மில் யாருமே விண்ணுக்கு செல்ல கனவில் கூட நினைக்க மாட்டோம். அட பொய்யில்லைங்க உண்மைதான் விதவிதமான உணவுகள் கிடைத்தாலும், விண்வெளி வீரர்கள் பாவம்தான்... விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அவர்களால் உணவின் வாசத்தை நுகரமுடியாது; ருசியையும் முழு அளவில் உணரமுடியாது. பசியைத் தீர்க்க ஏதாவது விழுங்கியாக வேண்டுமே என்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
ங்கே இப்ப சொல்லுங்க விண்வெளிக்குப் போக ஆசைப்படுற எல்லோரும் கை தூக்குங்க பார்க்கலாம். என்னப்பா ஒருத்தரைக் கூட காணவில்லை.

டிஸ்கி : என்னதான் இருந்தாலும் பூமியைவிட்டு வேற்றுகிரகத்திற்கு சென்று விழுங்குவதிலும் ஒரு சுகம்தான் போல நம்ம பணக்கார பயணிகளுக்கு..!

                                         - நேசத்துடன்
                                        பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>