இமை கூட வேண்டாம் !!!

காதல் ஒரு சூறாவளி
பெண்ணே நீ ஒரு கண்ணி வெடி
கண்ணில் தினம் உன்னால் கண்ணீராடி
என் உயிர் போகும் தருணத்தில்
உன் காதல் சொல் பெண்ணே
என் உயிர் இங்கு போனாலும்
அந்த இறுதி நொடி வரை
என் இறந்த இதயத்திலும்
உன் நினைவுகளை சுமந்துகொண்டிருப்பேன் .
நீரில்லா மீனைப்போல ,நீயின்றி உயிர் துடிக்கிறேன் ,
நீ பார்க்க மறுத்த நீர்க் குமிழியாய்
நிலையற்ற காதல் கொண்டேன் .,
நீரின்றி வாழ்வேன் பெண்ணே !
ஆனால் நீ இன்றி வாழ மாட்டேன் .,
நான் இங்கு போகும் தூரம்
நாள்தோறும் தூறமாகும் .
உன் நினைவுகள் என்னை தீண்டி விட்டாள்
அந்த தூரம் கூட துளியாய் மாறும் .,
உன் விரல் தீண்ட வேண்டாம் என்னை
உன் விழி தீண்டினால் போதும்,
உன் இதழ் தீண்ட வேண்டாம் என்னை
உன் வார்த்தைகள் தீண்டினால் போதும் ,
இன்னும் உன் இருக்கங்கள் வேண்டாம் பெண்ணே .,
இனியவள் நீயே போதும் கண்ணே .,
இனியவள் உன்னை காண இமைக்காமல் காத்திருந்தேன் .
இமை மூடும் நேரத்தில் நீ வந்து சென்று விட்டாய்
அதனால் இமை கூட வேண்டாம் என்று
இறைவனை வேண்டுகிறேன் .

0 மறுமொழிகள் to இமை கூட வேண்டாம் !!! :