வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு !!!

எம்.ஆர். ராதாவைப் பற்றிய விவரம்

மக்கள் திலகம் அவர்களிடம் உள்ள மனித நேயமும் வள்ளல் குணமும் இவை இரண்டையும் புத்தக வடிவில் எழுதுவது என்றால் ஒரு புத்தகம் போதாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பலபாகங்களாக எழுத வேண்டும். மக்கள் திகலம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1967, 12ம் தேதி அன்று 2.30 மணிக்கு பிற்பகல் "எம்.ஜி.ஆர் தோட்டம்" ராமாபுரம் மக்கள் திலகம் அவர்கள் வீட்டில் அவரை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று நேரம் கேட்டு வந்த, நடிகர் எம்.ஆர். ராதா அவர்களுடன் ஒரு படதயாரிப்பாளருடன் வந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும் போது சற்று விவாதம் ஏற்பட்டு கோபம் கொண்ட, எம்.ஆர். ராதா தீடீர் என்று துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார். இது இந்த விஷயத்தின் சுருக்கம். துப்பாக்கி சூடு காது ஓரம் கழுத்தில் தர்மம் தலையை காத்தது போல் அந்த துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்த குண்டு சக்தி இழந்து பாதியுடன் நின்றுவிட்டது. உடனே தானும் சுட்டுக் கொண்டார் எம்.ஆர். ராதா. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். துப்பாக்கி குண்டோ டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் திலகம் அவர்கள். அதிர்ஷ்ட வசமாக கழுத்தில் இருந்த குண்டை அகற்றி நல்ல முறையில் வைத்தியம் செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். உணர்வு தெளிந்தவுடனேயே மக்கள் திலகம் அவர்கள். அண்ணன் ராதா அவர்களின் நிலைமை என்னாயிற்று என்று தன் படுக்கை அருக்கில் உள்ளவர்களிடம் கேட்டார்.

அது சமயம் அங்கு அவருக்கு துணைக்கு இருந்த அவர்கள் எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதை கேட்ட மக்கள் திலகம் அதிர்ச்சி அடைந்து போய் அங்கு உள்ள முக்கியஸ்தர்களையும், டாக்டர்களையும் அழைத்து ராதா அண்ணன் அவர்களுக்கு நல்ல முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுகொண்டார். அந்த சமயம் தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஒரு பிரபல சினிமா நடிகராகவும், தி.மு.க. வில் கட்சியில் ஒரு உறுப்பினராக சென்றார். அவர் வைத்தியம் முடிந்து வீட்டிற்கு வரும்போது பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக வருகிறார். அதே நேரத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்றார். ஜெயிலிலிருந்து விடுதலை ஆகி வரும்போது மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சராக ஆகிவிட்டார். இந்த காலகட்டத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகங்களிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ராதா அவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. வேதனையால் வெந்து கொண்டு இருக்கும் ராதா அவர்கள், அவர் குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரிடம் மக்கள் திலகம் அவர்களிடம் உதவிகேட்டு அனுப்புகிறார். உதவி என்றால் பணம் அல்ல மீண்டும் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கும்படி பட முதலாளிகளிடம் சொன்னால் போதும் இந்த தகவலை அவருக்கு வேண்டியர் மக்கள் திலகத்திடம் நேரில் சந்தித்து சொல்கிறார்.

இதை கேட்ட மக்கள் திலகம் வந்தவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவரிடம் பேச தொடங்கினார். அய்யா ராதா அண்ணே ஒரு பெரிய கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த பிறகு விடுதலையாகி வந்து உள்ள செய்தி இந்தியா முழுவதும் நன்கு தெரிந்த விஷயமே, அவர் கொலை குற்றவாளி. நான், மேலும் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் நான் எப்படி உதவி செய்ய முடியும், உதவி செய்யலாமா? இதை மற்ற அரசியல்வாதிகளும், பொது மக்களும் நான் ராதா அண்ணனுக்கு உதவி செய்தால் என்ன நினைப்பார்கள். நான் அவருக்கு மேற்கொண்டு எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை என்று சொல்லி அண்ணனுக்கு என் மீது வருத்தம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடுங்கள் என்றார்.1 மறுமொழிகள்:

M.Mani said...

மன்னிக்கவும். மிகத்தாமதமாக பின்னுாட்டம். காரணம் இப்போதுதான் இந்தப்பதிவைப்பார்த்தேன். திரு ராதா விடுதலையானவுடன் எம்.ஜி.ஆரிடம் உதவிகேட்டுவந்ததாக எழுதியுள்ளீர்கள். ஆதாரம் எதுவும் தரவில்லை. ஆனால் ராதா விடுதலையான உடன் நான் எதற்காகச்சுட்டேன் தெரயுமா? எங்களுக்குள் பொம்பிளை விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. அதனால் சுட்டேன் என்று கூறி நான்தான் சுட்டேன என்று ஒரு படம் எடுப்பதாக 1974ல் விளம்பரமும் செய்தார். ஆனால் அந்தப்படப்பிடிப்பு ஆரம்பமே ஆகவில்லை. திராவிடத்தலைவர்கள் (90 விழுக்காடு) தனி நபர் ஒழுக்கம் குறைந்தவர்கள்.