32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் !!!ஜெனிபர் லோபஸை தெரியுமில்லையா உங்களுக்கு? ஜெலோ என்றால் கண்டிப்பாக தெரியும். பிரபல ஹாலிவுட் நடிகை, பாடகி, பாடலாசிரியர், டேன்ஸர், ஆல்பம் தயாரிப்பாளர் என்று பன்முகங்களுக்கு சொந்தக்காரர் ஜெனிபர் லோபஸ்.

உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகமே இவரை மிகுந்த சக்திவாய்ந்த நடிகை என்று பதிவு செய்திருக்கிறது. ஹாலிவுட்டில் அதிகசம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் எப்போதுமே ஜெனிபர் லோபஸ் இருப்பார். இவர் நடித்த 'மான்ஸ்டர் இன் லா', 'மெயிட் இன் மன்ஹாட்டன்', 'ஷல் வீ டேன்ஸ்' திரைப்படங்கள் வசூலில் சக்கைபோடு போட்டது. போர்ப்ஸ் பத்திரிகை உலகின் பணக்கார பெண்களில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறது.


பொதுஇடங்களுக்கு அபாயகரமான ஆடைகளை அணிந்து வந்து ஆடவர்களை அழவைப்பது அம்மணியின் பொழுதுபோக்கு. இவருடைய வசீகர சிரிப்பிலும், கட்டழகிலும் மயங்காதவர்களே ஹாலிவுட்டில் இல்லை. எனவே இவரது காதலர் மற்றும் கணவர் லிஸ்ட் டெலிபோன் டைரக்டரி அளவுக்கு மிகப்பெரியது. லேட்டஸ்ட் காதல் கணவர் பாடகர் மார்க் ஆண்டணி. உலக அழகியான தன்னுடைய முன்னாள் மனைவியை விவாகரத்து செய்து ஜெனிபர் லோபஸை கரம்பிடித்தார் ஆண்டனி.


இந்நிலையில் கடந்த வார அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதாகவும், முதல் குழந்தைக்கு தாயாகப் போவதாகவும் ஜெனிபர் லோபஸின் தாயார் சொன்னதாக ஒரு செய்திவந்தது. இச்செய்தி காட்டுத்தீயாக பரவி அமெரிக்காவில் கையெழுத்துப் பத்திரிகை நடத்துபவர்கள் கூட தலைப்புச் செய்தியாக போடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. இதுவரை இத்தகவலை ஜெனிபர் மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.ஜெலோவுக்கு மிக நெருக்கமான நிருபர் ஒருவர் அவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இதுவரை ஊடகங்களால் நான் 29 முறை கருத்தரிக்கப்பட்டு விட்டேன். இப்போது வந்திருக்கும் தகவலின் படி பார்த்தால் 30வது தடவை" என்று விரக்தியாக தெரிவித்திருக்கிறார். அவர் கருத்தரித்திருக்கிறாரா இல்லையா என்பது சிதம்பர ரகசியம் போல பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜெனிபர் லோபஸுக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது.

1 மறுமொழிகள்:

Balan said...

32 or 30