வணக்கம் வானொலியில் கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் - Vanakkam fm Poet Panithuli shankar Kavithaigal (Tamil radio )

0


ன்பின் உறவுகள் அனைவருக்கும் பனித்துளிசங்கரின் வணக்கள் . நேற்று இரவு ( திங்கட்கிழமை ) வணக்கம் வானொலியில் நினைவோடு நீண்டக் கதை நிகழ்ச்சியில் என்னைப் பற்றிய அறிமுகத்தோடு எனது கவிதைகளையும் , படைப்புகளையும் இரவு பத்து மணி முதல் பணிரெண்டு மணிவரை ஒலிபரப்பு செய்த வணக்கம் வானொலி நண்பர்கள் மற்றும் முக்கிய பங்கு வகித்த நண்பர் Krishna Ranjan அனைவருக்கும் எனது ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! நண்பர்களே அதை நீங்களும் கேட்க விரும்பினால் பின் வரும் லிங்குகளை அழுத்தி கேட்டு மகிழுங்கள் .



1. https://soundcloud.com/krkrishna/nilavodu-neenda-kathai
2. https://soundcloud.com/krkrishna/nee-naan-ninaivukal-panithuli

என்றும் நேசத்துடன்
கவிஞர் பனித்துளிசங்கர்.
துபாய்
http://www.panithulishankar.com/
shankarp71@gmail.com
0097150 4271470
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் - சுவராஸ்யமான தகவல்கள் நாகேஷ் - Panithuli shankar interesting tamil stories

0







''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு?'

''தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும். நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்கவைத்தது. அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். இத்தனைக் கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது. ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான். நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன். கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!
மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar - indru oru thagaval book - ஜெமினி இரட்டையர் - பனித்துளி சங்கர் சினிமா தகவல்கள்

0



னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி . தற்போதைய சூழலில் சினிமா என்பது நம்மில் பலருக்கு எதோ ஒரு சாதாரண முயற்சியாகத் தோன்றலாம் . ஆனால் ஒரு காலத்தில் சினிமா என்பது நமக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு ஒரு அதிசயமாகவே இருந்துவந்தது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை . சரி இன்றையத் தகவலுக்கும் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எல்லாம் .

நீங்கள் அந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, ஜெமினி இரட்டையரை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . பழைய கருப்பு, வெள்ளைப் படங்களை டி. வி. யில் பார்க்கும்போது ஜெமினி ஸ்டுடியோவின் பீப்பி ஊதும், ஜட்டி மட்டுமே அணிந்த இரட்டையர் சின்னத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை .
அந்தச் சின்னத்துக்கான ஐடியா, ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ். எஸ். வாசனுக்கு எங்கிருந்து வந்தது ?
ஜெமினி என்பது நட்சத்திரம் . ஜெமினி என்ற சொல் லத்தீன் மொழியைச் சார்ந்தது . அச்சொல்லுக்கே இரட்டையர் என்பதுதான் பொருள் . கேஸ்டர் மற்றும் போலகஸ் என்ற இரட்டை
நட்சத்திரங்கள் இணைந்ததுதான் ஜெமினி . கேஸ்டரும், போலக்ஸும் இரட்டையர். கிரேக்கப் புராணத்து கதை மாந்தர்கள் . ஒரே தாய் . ஆனால், வேறு வேறு தந்தை என்பதாக வித்தியாசமான கதை உண்டு . அக்காலத்தில் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் நட்சத்திரமாக ஜெமினிதான் இருந்துவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . 

என்றும் நேசத்துடன் 
பனித்துளி சங்கர்.










மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் - தித்திக்கும் நினைவுகள்

2


ன்னை மறந்துவிட்டாய் என்று தெரியும் 
இருந்தும் நிஜமென்று எண்ணி வாழ்கிறேன் 
உன் நினைவுகளோடு மட்டும் !... 


                                              -பனித்துளி சங்கர் .






மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் பனித்துளி சங்கர் - கவியரசர் கண்ணதாசன் 2013

0

மேதைகளின் நகைச்சுவை

விஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.










அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''
 


மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் இன்று ஒரு அறியத் தகவல் - ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு

12

னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி .

பொதுவாக தகவல்கள் என்றாலே நம்மில் பலருக்கு பல புதுமையான கற்பனைகள் நமது எண்ணங்களில் ஓடத் தொடங்கிவிடும் . அத...
ிலும் சினிமா சார்ந்த ஒரு தகவல் என்றால் இன்னும் நமக்கு அதில் பல சுவராஷ்யங்கள் இணைத்து கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகங்கள் இல்லை என்று சொல்லலாம் .


சரி அப்படி என்னதான் இன்றைய சினிமா சார்ந்த இன்று ஒருதகவல் என்று நீங்கள் எல்லாம் கேட்கத் தொடங்கும் முன்பே நான் தொடங்கி விடுகிறேன் .

''நாம் உண்ணவே உணவு இல்லை நமக்கு ஒரு குழந்தை தேவையா என்று என்னும் அளவிற்கு மிகவும் மனம் வருந்தி ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா?''

''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.

பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர் .

அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம்.
இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான்.

தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.

அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.

அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் 'லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி’ ஆனது.

ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

இன்று காமெடி, சண்டை படங்களுக்கு இன்றுவரை நிகரில்லாத ஹீரோவாக மற்றும் ஆசியாவின் மிகபெரும் ஸ்டாராக இருக்கும் அந்த 'கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!''

அதுமட்டும் இல்லை நண்பர்களே தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ ஆம் ஜாக்கிசான்: தி மியூசிக்கல்` என்ற பெயரில் மியூசிக் ஆல்பமாக தயாரிக்க இருக்கிறார் ஜாக்கிசான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .

என்ன நண்பர்களே இன்றையத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லவும் .


என்றும் நேசத்துடன்
பனித்துளி சங்கர் .

இயன்றவரை நாம் அறிந்ததை பிறரையும் அறிய செய்வோம்..........
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் - நினைவுகள் ஆயிரம் சார்லி சாப்ளின் - Charlie chaplin Real Life

11




ன்னை அழவைத்த 
இந்த உலகத்தை சிரிக்க வைக்கவே 
நான் இந்த சினிமா 
உலகத்தை தேர்ந்தெடுத்தேன்--------

                                             - சார்லி சாப்ளின்.




மேலும் வாசிக்க.. >>

மயக்கம் என்ன >Mayakkam enna Watch movie Songs - Naan Sonnadhum Mazhlai - Panithuli shankar songs collection

12




பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
படம்: மயக்கம் என்ன
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: செல்வராகவன் 


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.





மேலும் வாசிக்க.. >>

காதல் அந்த நாள் ஞாபகம் - Panithuli shankar Kadhal Kavithaigal - காதல் கவிதைகள்

31


ரு சிறைபட்ட பறவை ஒன்றின் 
சுதந்திரத் தாகமாய் 
உன் உடன் சில நிமிடங்கள் மட்டுமே 
பறக்கத் துடிக்கிறேன் . 
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில் 
நீ இன்றி நான் வாழ்வதும் 
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்
வீழ்வதும் ஒன்றே !

புகைப்படத்திற்கு நன்றி - www.shreezphotoz.com

               -  பனித்துளி சங்கர் 



மேலும் வாசிக்க.. >>

தமிழ் சினிமா ஒரு பார்வை (1981) - பாக்யராஜ் சினிமா முதல் படி..! (Tamil Cinima Director Bakkiyaraj first movie)

8

னைத்து நேசங்களுக்கும்  பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இன்று நாம் இன்று ஒரு தகவலில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த துறை என்று சொல்லலாம். அப்படியென்றால் என்று நீங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பே நான் பதிலை சொல்லிவிடுகிறேன் சினிமாத் துறை. உலகத்தில் மிகவும் பிரபலமான சினிமா துறை சார்ந்தவர்கள் பற்றி நமக்கு அதிக ஆர்வம இல்லையென்றாலும் நமது உள்ளூர் சினிமாக் காரர்களின் கடந்த காலங்கள் பற்றி அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. சரி இனி நாம் மேட்டருக்கு வருவோம் . 

ந்த தகவல் நான் பிறப்பதற்கு முன்பே வெளிவந்த ஒன்று என்பது மற்றொரு சுவராஸ்யம். சரி. இது ஒரு பக்கம் இருக்கட்டும். பிறப்பதற்கு முன்பு என்றால் ஆம்..!! (1981) ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்றில் வெளிவந்த ஒரு பிரபல நாளிதழில் வெளியான சினிமாப் பற்றியத் தகவல். அப்படி இந்த தகவலில் நம்மை சற்று ரசிக்கவும் சற்று கண்கள் கலங்கவும் வைக்கப்போகும் இந்த சினிமா கலைஞன் யார்..??!!.

ரு காலத்தில் கண்ணாடியை மாட்டி சற்று அமுக்கிவிட்டாலே போதும் உடனே அனைவரும் இவரின் பெயரை சொல்லி விடுவார்கள். ”ங்...... அதாவது பார்த்தீங்கன்னா.. இது கொஞ்சம் விவகாரமான விஷயம்தான். ஆனால்  இல்வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான விஷயம் என்று நாகரீகமாகவும், நகைச்சுவையாகவும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடையச் செய்தவர். துவண்டு போய் இருந்த முருங்கைக்காய் விற்பனையை தன்னுடைய ”முந்தானை முடிச்சு” படம் மூலம் தூக்கி நிறுத்திய பெருமை இவரை சாரும் என்றால் அது மிகையாகாது. சரி இனியும் புதிர் வேண்டாம்.
‎''ஹீரோ ஆகணும்னா பார்க்க லட்சணமா அழகா இருக்கணும்..!''

'கிழக்கே போகும் ரயில்' வளர ஆரம்பித்தபோது, பாக்யராஜை தனக்கு வசனம் எழுத உதவியாக வைத்துக்கொண்டதோடு, உதவி டைரக்டராகவும் பிரமோஷன் கொடுத்தார் பாரதிராஜா. அந்தப் படத்திற்கு ஒரு பாட்டையும் எழுதி, இரண்டு சீன்களில் நடிக்கவும் செய்தார் பாக்யராஜ்.
தான் சினிமாவில் சேர்ந்துவிட்ட செய்தியைத் தெரிவித்து தன் அம்மாவிடம் ஆசி பெற வந்தார் பாக்யராஜ். 'கிழக்கே போகும் ரயில்' படத்தைப் பார்த்துவிட்டு, ''நீ இரண்டு மூணு சீன்தானே வரே! ஏன் ஹீரோவா நடிக்கல?'' என்று அம்மா கேட்டார். ''ஹீரோவாகணும்னா நல்லா லட்சணமா, பார்க்க அழகா இருக்கணும்மா!'' என்று இவர் பதில் சொன்னார். உடனே, ''நீ நல்லாத் தாண்டா இருக்கே. நீ வேணா பாரு, நீ ஹீரோவா வரத்தான் போறே!'' என்று ஆசீர்வதித்தார் அம்மா.
'புதிய வார்ப்புகள்' படத்திற்கு ஹீரோ தேடிக்கொண்டிருந்தார் பாரதிராஜா. ஒருநாள், ஸ்டில் போட்டோகிராபர் லட்சுமிகாந்தன், ''உங்களுக்குக் கண்ணாடி போட்டு ஒரு ஸ்டில் எடுக்கச் சொல்லியிருக்கார் டைரக்டர்'' என்று சொன்னபோது, ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று முதலில் நினைத்தார் பாக்யராஜ். ஆனால், தான்தான் 'புதிய வார்ப்புகள்' படத்தின் ஹீரோ என்பதை அறிந்தவுடன் அவருக்கு இன்ப அதிர்ச்சி!
''என் அம்மாவுக்கு 'உன் ஆசை நிறைவேறிவிட்டது'ன்னு உடனே லெட்டர் போட்டேன். ஆனால், படம் வெளிவரும்போது அதைப் பார்த்துச் சந்தோஷப்பட என் அம்மா உயிரோடு இல்லை'' என்று கண் கலங்கினார் பாக்யராஜ்.
 
ன்ன நண்பர்களே..!! இன்றைய சினிமாப் பற்றியத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். இன்னும் அதிகம் அறிந்துகொள்வோம் .
நேசத்துடன்
பனித்துளி சங்கர்.
*  *  *  *  *  *  *
மேலும் வாசிக்க.. >>

Tamil SMS Kadi Jokes - சினி கூத்து கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil Kadi Jokes -SMS Jokes-Tamil Mokkai

18

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஒட்சிசனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.

"நகைச்சுவை" சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் 'ஒழுங்காக இயங்கு' என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
மெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
* * * * *

MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
* * * * *
தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு.
காதுல பஞ்சு வச்சுக்க...!!
ஏண்டா வைக்கலே'ன்னா?
நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க
வேண்டியது ஆகிடும்!
* * * * *
னக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''எஸ்

* * * * *
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* * * * *
சரி நண்பர்களே..!! இந்த இறுதியான மொக்கை சிந்தனைப் பற்றி  யோசித்துக்கொண்டே இருங்க அடுத்த நகைச்சுவை பதிவில் சந்திக்கிறேன்.
                                          
                                          நேசத்துடன்,
                                      பனித்துளி சங்கர்.                                                                       
* * * * *
மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

18





னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

ஒப்பாரி - பனித்துளிசங்கர் கவிதைகள் / Panithuli shankar vazhkai Tamil soga kavithai

13

முரண்பாடுகள் நிறைந்த
இந்த வாழ்க்கையில் 
அவ்வப்போது எங்கேனும்
முகம் காட்டும் மரணங்களில்
 இன்னும் நீள்கிறது
இது போன்ற ஒப்பாரிகள் !...

                                   -பனித்துளிசங்கர்
மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு வருது: சில நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu

27

னைத்து உறவுகளுக்கும் வணக்கம் . உங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக நாட்கள் கடந்துபோனது .அதனால் அந்த குறையை நிறை செய்யும் ஒரு முயற்சியாக இந்த நகைச்சுவை , ஜோக்ஸ்,லொள்ளு ,மொக்கை, நையாண்டி  மற்றும் கடி ,காமெடி சிரிப்புகள் இவை அனைத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் . விலை கொடுத்து வாங்க இயலாத   பல விசயங்களில் இந்த சிரிப்பும் ஒன்றாகிப் போனது . அதனால் நேரம் கிடைக்கும் வேளைகளில் துன்பம் மறந்து படித்தும் ,சிரித்தும் மகிழுங்கள் .

MAN : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.


ன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (students ) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions papers ) கொடுக்குறாங்க..." "எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்(answer papers ) கொடுக்குறாங்க..." "என்ன கொடும சார் இது?...."


மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.

கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

 

Girl:-ஒரு அழகான கவிதை சொல்லுடா ..
Boy :-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
Girl:-அப்புறம் ?
Boy:-உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
 

 
ஒரு story
ஒரு பட்டம் பூச்சி பறக்குது .
எதுக்கு ?
அது இஷ்டம் பறக்குது, நீ போய் வேலைச பரு
உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா !?

 
 
Love பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு .
என்ன தெரியுமா
ரெண்டுலயும் limitta தாண்டினா
'VOMIT' ல தன் முடியும் !
"Care full மச்சி "




பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..............

 
திகமா “Makeup” போடுற பொன்னும் ..
ரொம்ப நல tea கடைல தொங்கற
“BANNUM” நல்ல இருந்தத
சரித்திரமே இல்லை .


a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS படிக்குது .குரங்கு message படிக்குதுது அய்யய்யோ சத்தியமா நான் உங்களை சொல்லவே இல்லைங்க  !


இன்றைய நகைச்சுவை சினிமா - Tamil comedy jokes clip





மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar கவிதை - எதிர்பாராத முத்தம் - Mutham kavithai

5





திர் பார்க்காத
 குழந்தையின் முத்தம்
மீண்டும் தெறிக்கிறது
அந்த சத்தத்தில்
ஒரு சொர்க்கம் !
                   - பனித்துளி சங்கர்

மேலும் வாசிக்க.. >>

Tamil kavithai - முதல் பார்வை - பனித்துளிசங்கர் கவிதைகள் 14 May 2011

7


குடைக்குள்ளும் நனைகிறது
 தேகம்
ஆடைகளில் இன்னும்
 உதிராமல் அவனின்
முதல் பார்வை !.

                                                                   
                                                            -  ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

காத்திரு காதல் -Tamil love small kavithaigal - பனித்துளி சங்கர் காதல் குட்டிக் கவிதைகள்

17

                                                 

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது .!
ஆனால் உன் பார்வைகள் பதிந்த
 நான் மட்டும்தான் இன்னும்
 உனக்காகக் காத்துக்கிடக்கிறேன் !

                              
                                             -❤ பனித்துளி சங்கர் ❤



 
மேலும் வாசிக்க.. >>

உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS

17


யார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
 புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !


உனக்கு முன் பிறந்தேன் நான்
 எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
 ஒன்றாய் பிறந்தது காதல் ! 

                                
                                              ❤ பனித்துளி சங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011

14


சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
 பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
 படைத்து அனுப்பினானோ இவளை !? 
சற்றுமுன் பார்த்த முகம்
 யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
 புன்னகை வீசி சென்றாள்.,
 குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது   !???


                               ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

சிரியுங்கள் சிந்தியுங்கள் - பகிர்தல்- பனித்துளி சங்கர் 03 May 2011

14


ன்பு நண்பர்களுக்கு வணக்கம் . பதிவுகள் எழுதுவதற்கு நேரம் இல்லாமையால் இந்த பகிர்தல் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் . பொதுவாக இந்த உலகில் நல்ல விசயங்களைத் தவிர .மற்ற அநாகரிக நிகழ்வுகள்  மற்றும் பயனற்ற பல காட்சிகள் என அனைத்தும் மக்களை விரைவாக சென்று அடைந்துவிடுகிறது என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு உண்மை .அதனால்தான் என்னவோ இன்னும் மக்களின் மத்தியில்  சிந்தனை , சிரிப்பு என்ற இரண்டு பொக்கிஷமான விஷயங்கள் இவர்களுக்குள்ளும் இருக்கிறதா !? என்று என்னும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது ஊடகங்கள் . இங்கு நான் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ  கோப்புகள் பலமையானதே என்ற போதிலும் . இதில் இருக்கும் சிந்தனையையும் , சிரிப்பையும் அறிந்திராத பல இதயங்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு இதுபோன்ற காட்சிகள் சென்றடையவேண்டும் என்பதன் நோக்கமே இந்த பகிர்தல் . சரி நண்பர்களே . இனி நீங்கள் பின் வரும் கோப்புகளை பார்த்து சிரித்தும் , சிந்தித்தும் மகிழுங்கள் . நாளை சந்திப்போம் .




                                                                                     



மேலும் வாசிக்க.. >>