சங்கரின் பனித்துளி நினைவுகள் !!!

2
மேலும் வாசிக்க.. >>

என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!

45

ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம்.

வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு?


அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம்.


ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம் எனலாம் .


உலகத்தின் முடிவு 2012 ம் ஆண்டு நிகழ்வதை சித்தரிப்பதே இந்த 2012 திரைப்படம். உலகின் அரசாங்கங்கள் அனைத்தும் தயாராகாத நிலையில் மாயன் கலெண்டர் முடிவடையும் 2012 பல இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக இடம் பெற்று உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே படத்தின் கதை.2010 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் புரட்டோகனிஸ்ட்டும் ஆன சட்னம் பூமியின் மைய வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைக் கண்டு பிடிக்கிறார். படத்தின் கதாநாயகனாக வரும் விஞ்ஞானியும் சட்னத்தின் நெருங்கிய நண்பருமான அட்றியன் ஹெல்ம்ஸ்லி இதை அமெரிக்காவின் அப்போதைய அதிபராக விளங்கும் தோமஸ் வில்சனின் கண்ணோட்டத்திற்கு இச்செய்தியைக் கொண்டு வருகின்றார்.

இதன் பின்னர் கதை 2012ம் வருடத்திற்கு நகருகின்றது. 'யெல்லோவ்ஸ்டோன்' எனப்படும்

உலகின் மிக அபாயகரமான எரிமலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயன்களின் உலக அழிவுப் பிரகடனத்தை அறிவுப்புச் செய்யும் சார்லி ப்ரொஸ்ட்டை சந்திக்க செல்கிறார் அட்றியன். இதேநேரம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.மிகவும் மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முழுவதும் பசுபிக் சமுத்திரத்தில் மூழ்கி விடுகின்றது. இச்சமயத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலுள்ள அட்றியனின் மக்கள் நகரம் அழியும் போது தப்பி செல்லும் காட்சி மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது.

 உலகின் மற்ற பாகங்களான இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டு கடலோரப் பிரதேசங்களில் மிகுந்த
சேதம் ஏற்பட்டு விடுகிறது.
இதேவேளை இத்தாலியின் வத்திக்கான் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அழிந்து விடுவதுடன் பாப்பரசரும் இறந்து விடுகிறார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் மிகப்பெரிய சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும்யெல்லோஸ்டோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சியும் லாஸ் வெகாஸ் நகரம் அதனால் அழிவுறும் காட்சிகள் ரூ 1200 கோடி செலவில் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


இந்த திகிலுக்கு மத்தியில், பூமியில் தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வனர்த்தங்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சீனாவை நோக்கி பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் படத்தின் கதாநாயகன் அட்றியன் ஹெல்ம்ஸ்லி பயணித்து கப்பல்கள் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார் , ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? . என்பதே படத்தின் மீதிக்கதை.மனித இனத்தின் முதல் கலாச்சாரமான மாயன் பூர்வீகக்குடிகள் மனிதர்களின் அழிவை முன்னமே எவ்வாறு கட்டியம் கூறியிருந்தார்கள் என்பதையும் இயற்கை அனர்த்தங்கள்
மனித அழிவை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்பதையும் சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுடன் கண்ணுக்கு விருந்தாகப் படைக்கும் 2012 நிச்சயம் தவற விடக்கூடாத படங்களில் ஒன்று.

உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.

வேற்றுக்கிரக வாசிகள் பூமியைத் தாக்குவதை வெளிப்படுத்தும் 'இண்டிபெண்டென்ஸ் டே', மற்றும் உலக அழிவை சித்தரிக்கும் இன்னொரு படைப்பான 'டே ஆஃப்டர் டுமாரோவ்' ஆகிய பிரசித்தமான படங்களை தந்த டைரக்டர் ரோலண்ட் எம்மெரிச்சின் கைவண்ணத்தில் உருவான 2012 நவம்பர் 13ம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. அசத்தலான கம்யூட்டர் கிராஃபிக்ஸுடன் தயாராகியுள்ள என்ட் ஆப் வேர்ல்ட் 2012 என்ற இந்த ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் 65 மில்லியன் டாலரும் உலகளவில் 225 மில்லியன் டாலரும் வசூலாகி சாதனை படைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னொட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
மேலும் வாசிக்க.. >>

மைக்கேல் ஜாக்சன் !!!

7


" Gone too soon " ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , வீடியோவும் , எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துச் சொன்னது .


மைக்கேல் ஜாக்ஸ்னின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கரையுடன் எழுதப்பட்டவையே . பலப் பாடல்களை அவரே எழுதினார் . நிறவெறி , யுத்த வெறிக்கான எதிர்ப்பு , உலக அமைதிக்கான கோரிக்கைகள் , கறுப்பின மக்களின் துயர்கள் , காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது .


உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் ( சுமார் 39 நிறுவனங்கள் ) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது .


உலக இசை சரித்திரத்தில் மைக்கேல் ஜாக்ஸனைப் பொல் மக்களிடையே பிரபலமானவர் வேறு யாரும் இல்லை . பீட்டில்ஸ் இசைக்குழு ( ' நாங்கள் ஏசுநாதரை விடப் புகழ் பெற்றவர்கள் ' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர்கள் ) , எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களும் கோடிக்கணக்கான வெறி கொண்ட ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் யாருமே தங்கள் வாழ்நாளில் ஜாக்ஸன் அலவுக்கு 750 மில்லியன் இசைத் தொகுதிகளை விற்றதில்லை .


' இசை என்பது கேட்பதற்கு மட்டும் இல்லை , பார்ப்பதற்கும்தான் ' என்கிற மோடவுன் வீடியோ கலாச்சாரத்தை உருவாக்கியவர் ஜாக்ஸன் .


கிறிஸ்டல் கையுறைகள் , தங்கம் மின்னும் உடைகள் , ' மூன்வாக் ' என்று சொல்லப்பட்ட பிரத்யேக அலை நடை கொண்ட நடனம் , வெளிறிய நிறம் , கருகிய தலைமுடி , வசீகரப் புன்னகை , கூலிங்கிளாஸ் , தொப்பி , சைக்கடலிக் வண்ணவிளக்குகள் புகைந்த பிரும்மாண்ட செட் இவைகளுடன் அவர் மேடைகளிலும் , வீடியோக்களிலும் காண்பித்த பொழுதுபோக்கு இசை , நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பைத்தியமாகவே ஆக்கின .


தன் 45 வருட இசைத் தொழிலில் 2500 கோடி ரூபாய் டாலர்கள் சம்பாதித்த பாப் இசையின் அரசன் ஐம்பது வயதில் அகால மரணமடைந்தது ஏன் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் தாங்க முடியாத கேள்வி .


ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவம் துயரத்துடன் கழிந்தது . இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் . தந்தை ஒரு மில் தொழிலாளி . அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது . தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார் . ஒரு காலைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி மைக்கேலை அலற அலற அடிப்பார் .


ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் ஷோவில் அவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார் . சின்ன வயதில் அப்பா கொடுமைப்படுத்தியதைப் பற்றிச் சொன்னபோது வாய்விட்டு அழுதார் . விட்டிலிகோ என்கிற தோல் நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார் . ஒரு விபத்தின்போது உடைந்த மூக்கு நுனி அடுத்தடுத்த ஆபரேஷன்களில் இன்னும் மோசமானதாக அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . ஆனால் , சிறுவர்களை முறைகேடாகப் பயன்படுத்டியதே இல்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார் .


' ஐ வில் பீ தேர் ' என்பது அவருடைய மற்றொரு ஹிட் பாடல் . அது உண்மைதான் . ஜாக்ஸன் எப்போதும் இருப்பார் , தன்னுடைய அழியாத பாடல்களின் மூலம் .


* முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?


அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன . அவரது ' த்ரில்லர் ' தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு . தன் 50 வயதிலேயே , அவரே ஒரு பாடலில் சொல்லிக் கொள்வது போல , ' மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார் !'.


http://wwwrasigancom.blogspot.com/
மேலும் வாசிக்க.. >>

ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர்கள் குளிர் காய்வதற்காக தீக்கிரை !!!

2

கொலம்பியாவை நடுங்கச் செய்த கடத்தல் கும்பல் தலைவன், பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக காட்டில் தங்கியிருந்தபோது தனது மகள் குளிர் காய்வதற்காக ரூ.17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுக்களை எரித்தது தெரிய வந்துள்ளது.கொலம்பியாவைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபர்.1980களில் ஆரம்பித்த அட்டகாசம் 1993 வரை நீடித்தது.


இவர் தனது கும்பலுடன் இணைந்து ஆயிரக்கணக்கானோரை கொலை செய்து கொள்ளையடித்து, போதைவஸ்து வியாபாரம் நடத்தி, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கிடைத்த பணத்தில் அடுக்குமாடி விடுதிகள், விமானங்கள், தனியார் வனவிலங்கு பூங்கா நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை இவரை 1989ஆம் ஆண்டின் 7ஆவது மிகப் பெரிய உலக பணக்காரர் என்று அறிவித்தது.


இவரது தொல்லைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் கொலம்பிய பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.


பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டையின்போது சில நாட்கள் காடுகளில் பதுங்கியபோது மகளின் குளிரைப் போக்க ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுகளை இரவு முழுவதும் எஸ்கோபர் எரித்தது இப்போது தெரியவந்துள்ளது.
http://wwwrasigancom.blogspot.com/


மேலும் வாசிக்க.. >>

தி ' மம்மீ ' ஸ். !!!!

2

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் .

இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் பார்க்கும்போது , இவை எகிப்தின் 26 வது வம்சம் ஆண்ட காலம் தொடர்பாக இருக்கலாம் . அதுமட்டுமல்லாது ஒரு கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட மம்மிகள் இருக்கின்றன . இந்த மம்மிகள் அனைத்தும் முழுவதுமாக உருக்குலைந்துள்ளன என்றும் , ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கும்மேற்பட்ட உடல் கூறுகள் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
http://wwwrasigancom.blogspot.com/
மேலும் வாசிக்க.. >>

உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது !!!

0


சமீபதில் , அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில் , பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண் , மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார் .இவர்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண் . அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது . இனி , அந்த மொழி பேசும் இனக் குழு உலகில் இல்லை . பல்கலைக்கழகங்களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன . ஆனால் , அதைப் பேசத் தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை !
மேலும் வாசிக்க.. >>

ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு !!! ...

9

பாஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .


 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் இடம் 2-வது தளத்தில் அமைந்துள்ளது .

 ஆஸ்கர் விருது வழங்கும் இந்த அரங்கம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது . தியேட்டருக்கு மட்டும் ஆன செலவு 96 கோடி டாலர் . முழு அரங்கம் கட்டி முடிக்க 600 கோடி செலவு ஆயிற்று .

3400 இருக்கைகள் கொண்டது . A யில் ஆரம்பித்து Q வரை இருக்கைகள் உள்ளன . முதல் 4 வரிசை இருக்கைகள் வாத்தியக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


 M இருக்கைவரை நடிகர் , நடிகைகளுக்கு மட்டும் . அதன் பின் வரிசைகள் மற்றவர்களுக்கு .

விழா நடக்கும் போது எந்த ஒரு இருக்கையும் காலியாக இருக்கக் கூடாது . இதற்காக 120 இளம்பெண்கள் சீருடை அணிந்து தயாராக இருக்கிறார்கள் . இருக்கைகள் காலியானால் உடனுக்குடன் சென்று இவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .

இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்கும் . வெள்ளி , சனிக்கிழமைகளில் கலைஞர்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் .


இந்த ஸ்டுடியோவில்தான் எம்மி விருதுகள் , விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன . வருகின்ற 2010 -ம் ஆண்டிலிருந்து ஆஸ்கர் விருது வழங்கும் விழா மட்டுமே இங்கு நடைபெறுமாம் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓஇந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .......... ட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
மேலும் வாசிக்க.. >>

மோனோலிஸா யார் ?

9


லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ் பெற்ற ஓவியம் ' மோனோலிஸா '
இணையற்ற அழகும் , செல்வமும் ஒருங்கே பெற்ற ' லிஸா கொர்டினி ' என்ற பெண்ணின் உருவம்தான் மோனோலிஸா . அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா .

தனது 21 -வது வயதில் , டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா மாடலாக உட்கார்ந்தாள் . ஆனால் , டாவின்ஸி வரைந்து முடிக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டன .அந்தப் படம் வரைய ஆரம்பிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது . இப்போது புரிகிறதா , மோனோலிஸாவின் கறுப்பு உடைக்கும் , அவளது முகத்தில் நிழலாடும் சோகத்துக்கும் காரணம் ?
மேலும் வாசிக்க.. >>