தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !
********
அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !
********
முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !
*********
புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !
*********
ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !
*********
பழமாக வில்லை
காயானது தேங்காய் !
*********
புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !
******
மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !
********
குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!
மேலும் வாசிக்க.. >>