எகிப்தை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் - இன்று ஒரு தகவல்

0





சூடானில் எகிப்தை விட அதிக பிரமிடுகள் உள்ளன.

பண்டைய எகிப்திய கல்லறைகளில் கழிப்பறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

நான்காவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இடையே எகிப்தில் கிறித்துவமே முக்கிய மதமாக விளங்கியது.

கிளியோபாட்ரா எகிப்தின் கடைசி ராணி, உண்மையில் அவள் கிரேக்க நாட்டை சேர்ந்தவள்.

பிரமிடுகள் வேலை ஆட்களை கொண்டே கட்டப்பட்டது, அடிமைகளை வைத்து அல்ல.

எகிப்திய பிரமிட் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 கேலன் (4 லி) பீர் சம்பளமாக வழங்க பட்டது.
மேலும் வாசிக்க.. >>

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை 2016

0


ரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.







ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??


-படித்ததில் ரசித்தது.



மேலும் வாசிக்க.. >>