- Home
- Archive For October 2013
பனித்துளி சங்கர்: இன்று ஒரு தகவல் : மாம்பழம் உருவான சுவையான வரலாறு: Panithuli shankar Indru oru thagavalMango history
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
10/11/2013 12:17:00 PM
குறிச்சொல் Indru oru thagaval, Mango history, PANITHULI SHANKAR, Pothu arivu, Thagaval Kalanchiyam, தகவல் களஞ்சியம், பொது அறிவு, மாம்பழம் வரலாறு
குறிச்சொல் Indru oru thagaval, Mango history, PANITHULI SHANKAR, Pothu arivu, Thagaval Kalanchiyam, தகவல் களஞ்சியம், பொது அறிவு, மாம்பழம் வரலாறு
மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!
இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!
ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.
பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.
இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.
மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.
எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!.
அமீரகத்தில் மரம் நாடும் விழா - கவிஞர் பனித்துளி சங்கர் மரங்களின் சிறப்பு சிறப்புரை - Panithuli shankar Tree planting ceremony at united arab emirates
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
10/10/2013 03:51:00 PM
குறிச்சொல் அமீரகம், கவிதை.மரங்கள் கட்டுரை.மரம் சிறப்பு, பாடலாசிரியர் பனித்துளி சங்கர்
குறிச்சொல் அமீரகம், கவிதை.மரங்கள் கட்டுரை.மரம் சிறப்பு, பாடலாசிரியர் பனித்துளி சங்கர்
வணக்கம் வானொலியில் கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் - Vanakkam fm Poet Panithuli shankar Kavithaigal (Tamil radio )
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
10/10/2013 03:37:00 PM
குறிச்சொல் 89.5 FM, Hello FM, Online radio, PANITHULI SHANKAR, Radio mirchi, Suryan Fm, Tamil Kaithaigal, Vanakkam FM, சினிமா, பனித்துளிசங்கர், ர்
குறிச்சொல் 89.5 FM, Hello FM, Online radio, PANITHULI SHANKAR, Radio mirchi, Suryan Fm, Tamil Kaithaigal, Vanakkam FM, சினிமா, பனித்துளிசங்கர், ர்
1. https://soundcloud.com/krkrishna/nilavodu-neenda-kathai
2. https://soundcloud.com/krkrishna/nee-naan-ninaivukal-panithuli
என்றும் நேசத்துடன்
கவிஞர் பனித்துளிசங்கர்.
துபாய்
http://www.panithulishankar.com/
shankarp71@gmail.com
0097150 4271470
Panithuli shankar இன்று ஒரு தகவல் - ஆய கலைகள் அறுபத்து நான்கு - பனித்துளிசங்கர் Indru oru thagval
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
10/09/2013 06:31:00 PM
குறிச்சொல் Indru oru thagval, PANITHULI SHANKAR, ஆய கலைகள் 64, இலக்கியம், இன்று ஒரு தகவல், துணுக்குகள், புராணம்
குறிச்சொல் Indru oru thagval, PANITHULI SHANKAR, ஆய கலைகள் 64, இலக்கியம், இன்று ஒரு தகவல், துணுக்குகள், புராணம்
ஆய கலைகள் அறுபத்து நான்கு (64 ) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
...
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)v
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
Panithuli shankar குட்டி நகைச்சுவைக் கதைகள் - பனித்துளிசங்கர் - மனித கடவுள் ஜோக்ஸ்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
10/09/2013 06:20:00 PM
குறிச்சொல் God and man jokes, Nagaichuvai, PANITHULI SHANKAR, Tamil comedy, Tamil Jokes, Tamil Sirippu, Tamil thaththuvam, கதைகள், நகைச்சுவை
குறிச்சொல் God and man jokes, Nagaichuvai, PANITHULI SHANKAR, Tamil comedy, Tamil Jokes, Tamil Sirippu, Tamil thaththuvam, கதைகள், நகைச்சுவை
Subscribe to:
Posts (Atom)