ஒப்பாரி - பனித்துளிசங்கர் கவிதைகள் / Panithuli shankar vazhkai Tamil soga kavithai

13

முரண்பாடுகள் நிறைந்த
இந்த வாழ்க்கையில் 
அவ்வப்போது எங்கேனும்
முகம் காட்டும் மரணங்களில்
 இன்னும் நீள்கிறது
இது போன்ற ஒப்பாரிகள் !...

                                   -பனித்துளிசங்கர்
மேலும் வாசிக்க.. >>

நிலவைத் தொடும் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு -Indru oru thagaval Panithuli shankar / Bill Gates

13

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உலகத்தில் தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம்மால் தினமும் அறிந்துகொள்ள இயலுமா என்றக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் நேரத்திற்குள் எத்தனையோ மில்லியன் சம்பவங்கள் நம்மை கடந்துவிடும் என்பது நம்மில் யாரும் மறக்க இயலாது ஒன்று, சரி அதற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றும்.

நாம் தினமும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் உலகத்தில் இதுவரை நிகழ்ந்து முடிந்த அல்லது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் அல்லது இனி நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளில் புதைந்து கிடக்கும் பல வினோத அரிய சுவாரசியமானத் தகவல்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இந்த பதிவின் முயற்சி என்று சொல்லலாம் . சரி இனி நாம் வியப்புகளுடன் கூடிய சுவாரசியமானத் தகவல் உலகத்திற்குள் செல்லலாம் .



பொதுவாக நம்மில் பலர் தினமும் சலித்துக் கொள்வதுண்டு என்னடா இது வாழ்க்கை என்று இது ஒரு ரகம், இதற்கு முக்கியக் காரணம் பணம் என்பார்கள் . இன்னும் சில பிறந்தால் இவன் போல் பிறக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள் இதற்கு காரணம் பணம் என்பார்கள். இப்படி பணத்திற்கு தினமும் பல முகங்களை பொறுத்து நம்மில் ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம் . அப்படிப்பட்ட இந்த பணம் அதிகம் இருக்கும் உலகத்தின் தலை சிறந்த சாதனையாளரைப் பற்றிய பதிவுதான் இது என்று சொல்லலாம் . இந்த மனிதரைப் பற்றி தெரியாதவர்கள் இன்று மிகவும் குறைவு என்று சொல்லலாம் இவரின் முயற்சி இல்லை என்றால் இன்று உலகமே ஒரு வேலை செயலிழந்து போய் இருக்கும். ஆம் நண்பர்களே..! அவர் வேறு யாரும் இல்லை உலகத்தின் உயர்ந்த பணக்காரகளில் பல முறை முதல் இடம் பிடித்து உலகையே இன்று தன்பக்கம் திரும்ப செய்த பில்கேட்ஸ் (Bill Gates microsoft) தான் அவர் . இவரைப் பற்றி சொல்லத் தொடங்கினால் இவரின் சொத்தின் மதிப்பை விட நீளமாக செல்லும் இந்த தகவல்.

ரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நான் வைத்திருக்கும் தலைப்பிற்கு வருவோம். பலர் எல்லோரும் ஆர்வத்துடன் வந்து படிக்க வேண்டும் என்று பதிவிற்கு பொருத்தம் இல்லாத தலைப்புகளை பொருத்தி வாசகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் இந்த பதிவின் தலைப்பு அந்த வகையில் அமையாது என்பதை பதிவின் இறுதியில் உங்களை உணர வைக்கும். சரி இன்னும் பில்கேட்ஸ் பற்றிய சில வியப்பான தகவல்களைப் பார்க்கலாம் .

 நம்மில் பலர் தினமும் ஒரு ரூபாய் என்று சொல்லப்படும் நாணயத்திற்காக தினமும் எப்படியெல்லாமோ உழைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த மனிதரின் சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒரு வேலை தவறி கீழே விழுந்துவிட்டால் அதை குனிந்து எடுப்பதற்குள் பல மில்லியன்கள் இவருக்கு நஷ்ட்டமாகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டும் இல்லைங்க இன்னும் ஒரு தகவல் இருக்கு அது இவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு எவ்வளவோ என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக ஒரு திறவுகோல் என்று சொல்லலாம்.

மக்கு தெரிந்த வரை உலகத்தில் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் என்றால் அதிக பட்சமாக நடிகர்களைப் பற்றிதான் தெரியும் ஆனால் இவரின் ஒரு நிமிட வருமானம் பற்றி தெரிந்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றல் வந்துவிடும் .

பில்கேட்ஸ் (Bill Gates ) ஒரு விநாடியில் 350 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். அதாவது இவரது ஒரு நாளைய சம்பாத்தியம் 25 மில்லியனை தாண்டும் என்கிறார்கள். அதுமட்டும் இல்லைங்க இவரின் ஒரு வருட வருமானம் 10.8 பில்லியனுக்கும் அதிகம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

துவரை நம்மில் இப்பொழுது சொல்லப் போகும் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மைக்கேல் ஜோர்டான். இவர் சற்று அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். ஒருவேளை இவர் குடிப்பதை நிறுத்த நேர்ந்தால் இவருடைய ஆண்டு வருமானம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அப்படிப்பட்ட இந்த வீரர் ஒருவேளை பில்கேட்ஸ் இப்பொழுது இருக்கும் நிலையை எட்டவேண்டும் என்று எண்ணினால் இதே சம்பளத்தில் இன்னும் 230 வருடங்கள் உழைக்கவேண்டும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

த்துடன் மட்டும் நின்று விடவில்லை இந்த மனிதனைப் பற்றிய பிரமிப்புகள் இன்னும் இருக்கிறது. ஒருவேளை பில்கேட்ஸ் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் ஒரு டாலர் அளவில் உருவாக்கினால் அதை வைத்து பூமியில் இருந்து நிலவு வரை பாதை அமைத்து பத்திற்கும் அதிகமானவர்கள் சுதந்திரமாக வந்து போகலாம். அப்படி இந்தப் பாதை அமைப்பது என்றால் இதற்கு 2000 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் ,

ப்பொழுது ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரத்தில் தன்னை உயர்ந்த தரவரிசையில் கொண்டுவர பல விதமான முயற்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வேலை பில்கேட்ஸ் தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கினால் இப்பொழுது இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பணக்கார நாடுகளின் பட்டியலில் பத்து இடங்களுக்குள் பில்கேட்ஸ் வந்துவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ப்படி இன்னும் இவரின் சொத்து மதிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டு இருப்பது போல் அவரின் சொத்தின் மதிப்பை தாண்டும் என்பது உண்மை. சரி உறவுகளே முயற்சி செய்து நம்பிக்கை இழக்காமல் உழைத்தால் நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு பில்கேட்ஸ் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .



                                                 நேசத்துடன் ,
                                            பனித்துளிசங்கர்
மேலும் வாசிக்க.. >>

கண்ணீர் ஊற்றுகள் - பனித்துளிசங்கர் / Panithulishankar Tamil Kavithaigal 27 May 2011

15

றக்கங்கள் பறிக்கப்படும்
ஒவ்வொரு நடு நிசிகளிலும்
உள் வாங்கும் சுவாசத்துடன்
ஒட்டிக் கொ (ல் )ள்கிறது
 ஒரு மரணப் பயம் !

மீதம் இருக்கும் வாழ்க்கை
எதற்கென்றேப் புரியாத
 பூகம்பமாய் இதயம் தாண்டி
வெடிக்கப் பார்க்கிறது !

மை மூமூடித் திறப்பதற்குள்
மீண்டும் ஒரு உறவின்
உயிர் பிரியும் சத்தம்
என் செவிகளை
துளைத்துக் கொண்டிருக்கிறது .!
 
சொல்லி அழ இயலாத மரணங்கள்.,
விம்மி விம்மி வெளிவரும்
கண்ணீர்த் துளிகள் .,
விரும்பி ஏற்காத உடல் சுகம் .,
தூண்டிலில் மாட்டிய மீனாய்
துன்புறுத்தலின் உச்சத்தில்
மீண்டும் மீள்கிறது
கற்பையும் , உறவையும்
ஒன்றாய்  இழந்த கணங்கள் !....

                              -பனித்துளிசங்கர்
மேலும் வாசிக்க.. >>

காசு கொடு கல்வி - பனித்துளிசங்கர் கவிதைகள் -Education poems for children 25 June 2011

11

 ங்கள் கைகளில் சுமைகளைத் தந்து
தொழிலாளியாக மாற்றத் துடிக்கும்
இந்த சமுதாயம் .
எங்களுக்கு கல்வி தந்து
அறிவாளிகளாக மாற்ற மறுப்பதேன் .!?

கல்வி என்பது
பணம் உள்ளவர்களுக்காகவும்,
பதவி உள்ளவர்களுக்காகவும் மட்டும்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளதோ.. !?

உங்களின் சுயநலங்களில்
எங்களின் எதிர்காலம்
அடகு வைக்கப்பட்டிருக்கிறது .

எங்களின் கல்வியைத்தான்
உங்களால் தடை செய்ய முடியுமேத் தவிர
எங்களின் சுய சிந்தனைகளை அல்ல !

எங்களின் உணவுகளும் ,
உடமைகளும்தான் உங்களின் கைகளிலே
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறதேத் தவிர
எங்களின் உணர்வுகள் அல்ல .!

எங்களின் வளர்ச்சிகளில்தான்
உங்களால் கடிவாளங்களை
பொறுத்தமுடியுமேத் தவிர
எங்களின் முயற்சிகளில் அல்ல !

பிறந்தோம் இறந்தோம்
என்பதுதான் உங்களின் பழமொழி
நாங்கள் இறந்தும் மீண்டும் பிறப்போம்
என்பது எங்களின் புதுமொழி !

நாங்கள் கனவு காண்பதற்காக
பிறந்தவர்கள் அல்ல .
இந்த உலகை கட்டியாளப் பிறந்தவர்கள் !

காசு இல்லாதவன்
கல்வி கற்கக் கூடாது என்று
எவன் சொன்னது !?


சிந்தும் வியர்வை முந்தும்
சிதறும் புன்னகை பிந்தும்
இந்த பூமிப் பந்தும் ஒரு நாள்
எங்கள் வளர்ச்சி கண்டு சுற்றாமல் நிற்கும் .!

இன்று எங்களின் பிஞ்சுக் கைகளில்
நீங்கள் சுமை நிரப்பலாம் .
நாளை இந்த தேசத்தை
உயர்த்தி பிடிக்கபோவது
இன்று நீங்கள் தர மறுக்கும்
எங்களின் கல்விதான் என்பதை
மறக்காதீர்கள் !!....
             
                                        - பனித்துளிசங்கர்


மேலும் வாசிக்க.. >>

காதல் ரோஜா - Panithuli shankar kadhal kavithaigal - ஒரு காதல் கவிதை

12


ங்கோ உயிர் பெற்றோம் !
 எங்கோ வளர்க்கப்பட்டோம்  !
எப்பொழுதோ  புன்னகைத்தோம் !
எப்படியோ பறிக்கப்பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய்
 இறந்து கிடக்கிறோம் !
 பிரிந்து பிறந்த நம்மை
 இங்கு ஒன்றாய் இணைத்ததுக்
 காதல் !


                              -    ❤ பனித்துளி சங்கர் ❤





மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு வருது: சில நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu

27

னைத்து உறவுகளுக்கும் வணக்கம் . உங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக நாட்கள் கடந்துபோனது .அதனால் அந்த குறையை நிறை செய்யும் ஒரு முயற்சியாக இந்த நகைச்சுவை , ஜோக்ஸ்,லொள்ளு ,மொக்கை, நையாண்டி  மற்றும் கடி ,காமெடி சிரிப்புகள் இவை அனைத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் . விலை கொடுத்து வாங்க இயலாத   பல விசயங்களில் இந்த சிரிப்பும் ஒன்றாகிப் போனது . அதனால் நேரம் கிடைக்கும் வேளைகளில் துன்பம் மறந்து படித்தும் ,சிரித்தும் மகிழுங்கள் .

MAN : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.


ன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (students ) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions papers ) கொடுக்குறாங்க..." "எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்(answer papers ) கொடுக்குறாங்க..." "என்ன கொடும சார் இது?...."


மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.

கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

 

Girl:-ஒரு அழகான கவிதை சொல்லுடா ..
Boy :-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
Girl:-அப்புறம் ?
Boy:-உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
 

 
ஒரு story
ஒரு பட்டம் பூச்சி பறக்குது .
எதுக்கு ?
அது இஷ்டம் பறக்குது, நீ போய் வேலைச பரு
உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா !?

 
 
Love பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு .
என்ன தெரியுமா
ரெண்டுலயும் limitta தாண்டினா
'VOMIT' ல தன் முடியும் !
"Care full மச்சி "




பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..............

 
திகமா “Makeup” போடுற பொன்னும் ..
ரொம்ப நல tea கடைல தொங்கற
“BANNUM” நல்ல இருந்தத
சரித்திரமே இல்லை .


a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS படிக்குது .குரங்கு message படிக்குதுது அய்யய்யோ சத்தியமா நான் உங்களை சொல்லவே இல்லைங்க  !


இன்றைய நகைச்சுவை சினிமா - Tamil comedy jokes clip





மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar - தாய்மண் - கவிதைகள் - Thaiman Kavithaigal 20 May 2011

6



Tamil kavithaigal /தமிழ் கவிதைகள்

ரணம்தான் மனிதனின் இறுதிநிலை
நீங்கள் அறிந்தது .
இறந்த பின்பும் வரலாறு ஒரு மனிதனின்
தொடர்நிலை நாங்கள் அறிந்தது
நாங்கள் எதற்காக இன்னும் போராடி
உயிர்விட்டுகொண்டிருக்கிறோம் !???

ந்த உலகில் சுவாசிக்கும் ஒவ்வொரு உயிருக்கும்
மொத்த உலகமும் தா(யும்)ய் மண்ணும்தான் என்று
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

 
                                                                     -❤பனித்துளிசங்கர்❤



மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar கவிதை - எதிர்பாராத முத்தம் - Mutham kavithai

5





திர் பார்க்காத
 குழந்தையின் முத்தம்
மீண்டும் தெறிக்கிறது
அந்த சத்தத்தில்
ஒரு சொர்க்கம் !
                   - பனித்துளி சங்கர்

மேலும் வாசிக்க.. >>

தெரியுமா உங்களுக்கு சூடான அரியத் தகவல்கள் ஆயிரம் - பனித்துளிசங்கர் Radio Hallo 89.5 FM ( UAE )

13



னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சரி நண்பர்களே இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம் . முதலில் அமீரகத்தில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் சில புதுமையானத் தகவல்களை பற்றி நாம் அறிந்துகொள்ளலாம் .

எப்பொழுதும் இல்லாத வகையில் முதன் முறையாக இப்பொழுது அமீரகத்தில் 24 மணி நேர தமிழ் வானொலி சேவையை ரேடியோ ஹல்லோ FM  ( Radio Hallo 89.5 FM ( UAE )  ) என்ற குழுவினர் தொடங்கி இருக்கிறார்கள் .

மீரகத்தில் என்னதான் வெயிலின் கொடுமை அதிகம் இருந்தாலும் இந்த Radio Hallo 89.5 FM  DUBAI வானொலி அதுதாங்க ரேடியோ  வருகையினால் இப்பொழுது ஒவ்வொருவரின் களைப்பிலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலிலும் அமீரகத்தில் ஒரு அடைமழை இந்த Radio Hallo 89.5 FM ( UAE ) வானொலி என்பது உண்மை ,. இதுவரை அறியாதவர்கள் இப்பொழுதேக் கேட்டு மகிழுங்கள்
.

 @@@@@@@@@@@@


                                             
லக நாடுகளில் இதுவரை எந்த நாடும் எட்டாத சாதனையை இப்பொழுது அமீரகத்தில் இருக்கும் எமிரட்ஸ் விமான சேவை ( Emirates airlines ) குறுக்கிக் காலத்தில் எட்டி இருக்கிறது .
 ஆம் நண்பர்களே உலகத்தில் தலை சிறந்த விமான சேவையில் மூன்றாவது இடத்தை இப்பொழுது இவர்கள் ( Emirates airlines )  எட்டி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாது இதுவரை இந்த ( Emirates airlines ) விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியன் பயணிகள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .



@@@@@@@@@@@@



ரி அமீரகத்தில் ( UAE )  வேலை செய்வதால் அமீரகத்தைப் பற்றி மட்டுமே தகவல்கள் சொன்னால் எப்படி என்ற உங்களின் கேள்வி எனக்கு நன்றாகக் கேட்கிறது . சரி வாருங்கள் எல்லோரும் கடலுக்குப் போகலாம் . ஆஹா அந்தக் கடல் இல்லைங்க யாரும் பயப்படவேண்டும் . கடல் பற்றிய ஒரு தகவளுக்குப் போகலாம் என்று அழைத்தேன் . ஆமாங்க பொதுவா நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் கடல் என்றாலே ஒரு அதிசயம்தான் . பின்ன இருக்காத உலகத்தில் மூன்று பங்கு அவங்க ஆட்சி தானே . அதிலும் இந்த அன்டார்ட்டிகா கடல் இருக்கிறதே இது ரொம்ப பயங்கரமானக் கடலுங்க !
அப்படி என்ன பயங்கரம் என்று தானே கேட்க வருரிங்க !?. சரி சொல்கிறேன் . நாம் வசிக்கும் இடங்களில் அதுதாங்க வீட்டில் ஒரு பத்து நிமிடம் மின்சாரம் இல்லாம இருட்டா இருந்தாவே பாதிபேருக்கு பேதியாகிவிடுகிறது . ஆனால் இந்த அண்டார்டிகா கடலில் நான்கு மாதங்கள் முழுவதும் ஒரே இருட்டாகத்தான் இருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை இந்த அண்டார்டிகா பகுதியில் படிந்துள்ள பனிக்கட்டிகள் மொத்தமும் உருகத் தொடங்கினால் .உலகில் 60 ஆண்டுகள்  பெய்யும் மழைக்கு சமம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . என்ன மக்களே அந்த பக்கமா இனி போறவுங்க எல்லாம் பார்த்து சூதானமாக இருங்க !


@@@@@@@@@@@@



ட என்ன இது !? இந்தியாவில் பிறந்துவிட்டு அமீரகம் ( UAE ) , கடல் என்று தகவல் சொல்றேனே என்று உங்க உள்ளத்தில் ஒரு மூலையில சிறு கேள்வி தோன்றும் . அதனால எதுக்கு வம்பு இந்தியாப் பற்றிய ஒரு தகவலும் சொல்லிவிட்டா போகுது . சரி வாங்க இந்தியாவுக்கு போகலாம் .பொதுவாக நாம் எதை படித்தாலும் சரி எழுதினாலும் சரி அதில் ஏதாவது ஒரு பின் குறிப்போ அல்லது டிஸ்கியோ இப்படி ஏதாவது ஒன்றை சொல்லுவது வழக்கம் . அது மாதிரி ஒரு காலத்தில் மட்டும் இல்லைங்க இப்பக கூட இந்த ''பின்'' என்ற தொடங்கும் வார்த்தைகளுக்கு சற்று ஆதரவு அதிகம்தாங்க . என்ன குழப்புகிறேனோ !?

ரி நேராக மேட்டருக்குள் போகலாம் அட நம்ம இந்தியாவில் பயன்படுத்தப் படும் பின் கோடுகள் பற்றிதாங்க இந்த தகவல் அப்படி பின் கோடுகளில் என்னதான்  இருக்கிறது என்று கேட்டுவிடாதிங்க . ஒரு பெரிய மேட்டர் பின் கோட்டிற்குள்ள ( Pin Code ) இருக்கு . ஆம் நண்பர்களே மொத்த இந்தியாவிலேயே பின் கோட்டில் ( Pin Code ) அதிக எங்களை கொண்ட ஒரு நகரம் நம்ம சென்னைதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அனைத்து நகரங்களின் பின்கொடுகளையும் தருவதற்கு இப்பொழுது நேரமின்மை அதனால் ஒருசில பிரபலமான நகரங்களின் பின் கொடுகளைமட்டும் தருகிறேன் மற்றதை நீங்களே தேடிப் பார்த்துகொள்ளுங்கள் .

சென்னை ( 600001 --- 600098 )
பம்பாய் ( 400001 --- 400093 ) .
கல்கத்தா ( 700001 --- 700070 ) .
டெல்லி ( 110001 --- 110062 ) .

ப்பவே பல பேர் எண்ணத் தொடங்கி இருப்பிங்களே !? சரி நண்பர்களே அப்படியே எண்ணிக்கொண்டே இருங்கள் . நாளை ஒரு கவிதையுடன் உங்களை சந்திக்கிறேன்.

நேசத்துடன் உங்களின்
❤ பனித்துளி சங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

''1500 Followers '' ''11 லட்சம் ஹிட்ஸுகள்'' -''பதிவர்கள்'' ''வாசகர்களுக்கு நன்றி'' - பனித்துளிசங்கர்

36


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளிசங்கரின் வணக்கங்கள்.இன்று இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை என்று சொல்லலாம் .

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வலைத்தளம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்தவன் நான் .பொழுது போக்கிற்காகவும் , செய்திகள் படிப்பதர்க்காகவும் மட்டுமே இணையத்தை பயன்படுத்தி வந்த எனக்கு ஒவ்வொரு தனி மனிதனும் தனது எண்ணங்களை பதிவு செய்வதற்கு இணையத்தில் ஒரு தனி இடம் இருப்பதை அறிந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிகளை சொல்லித் தீர்க்க இன்னும் பல நூறு பதிவுகள் வேண்டும் .

 முதலில் எனக்கு எழுதவேண்டும் என்று எண்ணத் தூண்டிய ஒரு நண்பரின் வார்த்தைகளுக்கு ஆயிரம் நன்றிகள் . ஆம் நண்பர்களே வலைத்தளம் பற்றி தெரியாமல் ஒருமுறை வலைத்தளம் பற்றி நன்கு அறிந்த நண்பரிடம் உரையாடிகொண்டிருந்தேன் .அப்பொழுது அவர் வலைத்தளம் பற்றி எனக்கு அளித்த கருத்துக்கள்தான் இன்றும் நான் எழுதிகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம் . அப்படி அவர் என்ன சொன்னார் என்று அறிந்துகொள்வதற்கு உங்களின் ஆர்வத்தை அதிகரிக்க விருப்பம் இல்லை நேராக மேட்டருக்கு வருகிறேன் . இப்பொழுது இருக்கும் இந்த போட்டியான பதிவுலகில் நீங்கள் எல்லாம் பதிவுகள் எழுதி ஒன்றும் செய்ய இயலாது வேண்டும் என்றால் பிரபலமானப் பதிவர்களின் வலைத்தளங்களுக்கு சென்று மொக்கையாக மறுமொழிகள் போடுங்கள் போதும் என்று கூறினார் . அன்று அவர் சொன்ன ''முடியாது'' என்ற வார்த்தைதான் இன்றும் எனது செவிகளில் ஒலித்துகொண்டிருக்கிறது .

வலை உலகத்திற்கு புதிதாய் எழுத வரும் அனைத்து உறவுகளையும் அன்புடன் வரவேற்று ஊக்குவிப்போம் .

ன்ன தவம் செய்துவிட்டேன் நான் !?  எத்தனை அறிமுகங்கள் ,எத்தனை உறவுகள், எத்தனை உணர்வுகள், எத்தனை உரிமைகள் ,இப்படி எத்தனை எத்தனை இத்தனையும் எனக்கு மொத்தமாய் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம்.

எத்தனை பதிவுகள் எழுதினாலும் அத்தைப் பதிவுகளுக்கும் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தினமும் வருகை தந்து தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தி முகவரி இன்றி    இருந்த எனக்கு இந்தப் பதிவுலகில் ஒரு முகவரித் தந்த நட்பின்  பதிவர்களுக்கும்  , அன்பின் வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
குறுகிய காலத்தில் 1502 Followers பின் தொடர்பவர்களையும் தினமும்  பல  ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி 11 லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், நட்பின்  பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !

                                                               நேசத்துடன் ,
                                                      ❤ பனித்துளி சங்கர் ❤



மேலும் வாசிக்க.. >>

Tamil kavithai - முதல் பார்வை - பனித்துளிசங்கர் கவிதைகள் 14 May 2011

7


குடைக்குள்ளும் நனைகிறது
 தேகம்
ஆடைகளில் இன்னும்
 உதிராமல் அவனின்
முதல் பார்வை !.

                                                                   
                                                            -  ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

காத்திரு காதல் -Tamil love small kavithaigal - பனித்துளி சங்கர் காதல் குட்டிக் கவிதைகள்

17

                                                 

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது .!
ஆனால் உன் பார்வைகள் பதிந்த
 நான் மட்டும்தான் இன்னும்
 உனக்காகக் காத்துக்கிடக்கிறேன் !

                              
                                             -❤ பனித்துளி சங்கர் ❤



 
மேலும் வாசிக்க.. >>

உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS

17


யார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
 புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !


உனக்கு முன் பிறந்தேன் நான்
 எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
 ஒன்றாய் பிறந்தது காதல் ! 

                                
                                              ❤ பனித்துளி சங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011

14


சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
 பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
 படைத்து அனுப்பினானோ இவளை !? 
சற்றுமுன் பார்த்த முகம்
 யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
 புன்னகை வீசி சென்றாள்.,
 குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது   !???


                               ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

நீயென்றால் '' காதல் கவிதை'' ''பனித்துளி சங்கர்'' ''kadhal kavithai'' 08 மே 2011

12


லகின் எல்லை வரை
நீண்டு போகட்டும் இந்த பயணம்
 உடன் வருவது நீயென்றால் !
 உன் இதழ்கள் சொல்லுமுன்
 பிரிந்துபோகட்டும் இந்த உயிர்
விஷம் தருவது நீயென்றால் !

நான் வாழ்வதாயினும் வீழ்வதாயினும்
 அ தன் தொடக்கம்
உன் முடிவுகளில் மலரட்டும் !....

                                                                         ❤ பனித்துளி சங்கர் ❤




மேலும் வாசிக்க.. >>

கசியும் உணர்வுகள் - பனித்துளி சங்கர் காட்சிக் கவிதைகள் - Thanimai kavithaigal 07 May 2011

18


ந்த உலகம் மறந்துபோன
மனிதர்களிடம் இல்லாத சிறப்புகள்
இப்பொழுதும் குவிந்து கிடக்கிறது
எப்போதேனும் பார்வை எட்டும் காட்சிகளில் !
ங்கு சுவாசிக்கத் தெரிந்தவன் மனிதனா !?
இல்லை சிந்திக்கத் தெரிந்தவன் மனிதனா !?
என்ற குழப்பங்கள் சிலநேரம்
குரல்வளை நெருக்கத் தொடங்கிவிடுகிறது .

ருவங்கள் மாறிப் போயினும்
உணர்வுகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஒரு  தாய்மையின் முகவரியை !

ணவற்று வற்றியதேகம் என்றபோதிலும்
உயிர் உள்ளவரை தன் குழந்தைகளின்
 பசியாற்றி இறக்கத் துடிக்கும்
வார்தைகளில்லாத நன்றியுள்ள ஜீவனாய்
நீயாகிப்போனா (நா) ய் !

               
                               -❤ பனித்துளி சங்கர் ❤



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல்- கிங் மேக்கர் காமராஜர் - Kingmaker Kamarajar ( Panithuli Shankar )

42


னைவருக்கு வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அதிக வேலை பளு அதுதான் பதிவுகள் தர இயலாத நிலை. சரி இனி நாம் இன்றையத் தகவலுக்கு வருவோம். பொதுவாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். முதலில் எனக்கு காமராஜர் பற்றி எழுத ஆர்வத்தை ஏற்ப்படுத்திய ஆனந்த விகடன் இதழுக்கு நன்றிகள் பல.


னது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

இவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு 'காலா காந்தி', பெரியாருக்கு 'பச்சைத் தமிழர்', காங்கிரஸ்காரர்களுக்கு 'பெரியவர்' என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.
ன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!


யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..!.
பாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..!


தவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.
இப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவு ரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.

ப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.


நான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே..! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


மிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். 'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

திக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

இதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில் நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.


ன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..! தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..!


விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் !

இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.



டிஸ்கி :
                   ன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .
 
மேலும் வாசிக்க.. >>

சிரியுங்கள் சிந்தியுங்கள் - பகிர்தல்- பனித்துளி சங்கர் 03 May 2011

14


ன்பு நண்பர்களுக்கு வணக்கம் . பதிவுகள் எழுதுவதற்கு நேரம் இல்லாமையால் இந்த பகிர்தல் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் . பொதுவாக இந்த உலகில் நல்ல விசயங்களைத் தவிர .மற்ற அநாகரிக நிகழ்வுகள்  மற்றும் பயனற்ற பல காட்சிகள் என அனைத்தும் மக்களை விரைவாக சென்று அடைந்துவிடுகிறது என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு உண்மை .அதனால்தான் என்னவோ இன்னும் மக்களின் மத்தியில்  சிந்தனை , சிரிப்பு என்ற இரண்டு பொக்கிஷமான விஷயங்கள் இவர்களுக்குள்ளும் இருக்கிறதா !? என்று என்னும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது ஊடகங்கள் . இங்கு நான் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ  கோப்புகள் பலமையானதே என்ற போதிலும் . இதில் இருக்கும் சிந்தனையையும் , சிரிப்பையும் அறிந்திராத பல இதயங்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு இதுபோன்ற காட்சிகள் சென்றடையவேண்டும் என்பதன் நோக்கமே இந்த பகிர்தல் . சரி நண்பர்களே . இனி நீங்கள் பின் வரும் கோப்புகளை பார்த்து சிரித்தும் , சிந்தித்தும் மகிழுங்கள் . நாளை சந்திப்போம் .




                                                                                     



மேலும் வாசிக்க.. >>

ஒரு மனிதன் ஒரு மரம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - One Man One Tree - Iyarkai kavithai 02 May 2011

12


இது ஒரு மரம் தின்ற மனிதனின் உணர்வுகளின் அழுகுரல் !  

ரு உலகம்
ஒரு மனிதன்
ஒரு விதை
ஒரு செடி
ஒரு மரம்
ஒரு காய்
ஒரு கனி
வளர்த்துக்கொண்டே இருந்தான் மரங்கள் .
வளந்துகொண்டே இருந்தான் மனிதன் .
ல வருடங்கள்
பல மாற்றங்கள்
பல விஞ்ஞான வளர்ச்சிகள்
மறந்து போனான் மரங்கள் .
இறந்து போனான் மனிதன் .
இவன் உடல் எரிக்க மீண்டும்
இவன் உடன் கட்டை ஏறியது மரமும் !....

                                    ❤ பனித்துளி சங்கர் ❤



டிஸ்கி ; னிதன் இருக்கும் வரை மட்டும்தான் பயன் . ஆனால் மரங்கள் இறந்த பின்பும் பயன் . மரங்களை வளர்க்க இயலாவிட்டாலும் இயன்றவரை. மனிதனால் செய்யப்படும் மரங்களின் கொலைகளைத் தவிர்ப்போம் .
மேலும் வாசிக்க.. >>

தெருவோர நட்சத்திரங்கள் - கவிதைகள் -பனித்துளிசங்கர் - Star kavithaigal 01 Jun 201112

27




நான்
ஒரு தெருவோரக் குப்பையில்
வீசப்பிட்டிருக்கிறேன் 
ஆனால்
எனது பார்வைகள் நட்சத்திரங்களில் ......
எங்கிருப்பினும் ரசிப்பேன் இந்த உலகை .


                                                                     ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>