புதுத் திருடன் .!!!

கழைக் கூத்தாடி ஒருத்தன் தன் உதவியாளை மேளம் அடிக்கச் சொல்லிவிட்டு ஒரே தடவையில் 20 அடி 25 அடி என்று தாண்டிக் கொண்டிருந்தான் . இதைக் கவனித்த திருடன் ஒருவன் ' இவனைப் பயன்படுத்தி நாம் இன்னும் அதிகக் கொள்ளை அடிக்கலாமே ' என்று கருதி , அந்த கழைக் கூத்தாடியைக் கூப்பிட்டு , ' நாள் முழுதும் கஷ்டப்பட்டு நாலோ ஐந்தோ சம்பாதிக்கிறாயே , என்னோடு வந்து நான் சொல்வதைக் கேள் . உனக்குத் தினமும் நூறு ரூபாய் தருகிறேன் ' என்றான் . கழைக் கூத்தாடியும் சம்மதித்தான் .


அன்று நள்ளிரவு , திருடன் கழைக் கூத்தாடியை ஒரு பெரிய வீட்டுக்கு முன் அழைத்துச் சென்றான் . உயரமான சுவர் . ' இப்பொழுது நீ இந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே போய்த் தாழ்ப்பாளைத் திறந்து விடு . பிறகு நான் கவனித்துக் கொள்கிறேன் ' என்றான் .


உடனே கழைக் கூத்தாடி , " இதைவிட , உயரமான சுவரைக் கூடத் தாண்டி விடுவேன் . ஆனால் ஒன்று . காலையில் என் ஆள் மேளம் கொட்டியது போல இப்பொழுது யாராவது கொட்டினால்தான் எனக்குத் தாண்ட வரும் ; இல்லாவிட்டால் முடியாது " என்றானாம் . திருடன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! .

0 மறுமொழிகள் to புதுத் திருடன் .!!! :