பிக்பென் !!!!

                                                                   பிக்பென்

வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை. லண்டன் நகரின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை 1834 -ல் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது . இதில்தான் இங்கிலாந்து பாராளுமன்றம் இயங்கிவந்தது . எனவே , பழைய அரண்மனை இருந்த அதே இடத்தில் , புதுப் பொலிவுடன் மீண்டும் ஒரு அரண்மனையைக் கட்ட இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்தது .


இதற்காக சார்லஸ் பாரி என்ற கட்டடக் கலைஞரை இங்கிலாந்து அரசு நியமித்தது . அதற்காக அகஸ்டஸ் புகின் உதவியை நாடினார் சார்லஸ் பாரி .


புதிதாக கட்டப்படும் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் மிகப் பெரிய அளவில் , பிரமாண்டமான ஒரு மணிக்கூண்டு கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது . இதன்படி 315 அடி உயரத்தில் , நான்கு. திசைகளில் இருந்து பார்த்தால் தெரியுமாறு பிரமாண்ட மணிக்கூண்டு கட்டப்பட்டது .


அரசு கேட்டுக் கொண்டதற்காக மிக பிரமாண்டமான வெண்கல மணியை தயாரித்தது ஜான் வார்னர் கம்பெனி . 16 ஆயிரத்து 300 கிலோவில் மிகப் பெரிய மணி உருவாக்கப்பட்டு , 16 குதிரைகள் கட்டிய பிரமாண்ட சாரட் வண்டியில் அது இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது . ஆனால் , அதிக எடை காரணமாக , சாரட் முறிந்ததால் , மணி கீழே விழுந்து சேதம் அடைந்தது . இதையடுத்து , மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு , 1854 -ம் ஆண்டு லண்டன் டவருக்குள் கொண்டு வரப்பட்டது . மணியை கட்டுவதற்காக 5 டன் எடை கொண்ட கடிகார அறை கட்டப்பட்டது . இதில் காற்று புகாத அறையில் கடிகாரத்துடன் மணி இணைக்கப்பட்டு , ஒலி அளவு சோதிக்கப்பட்டது . ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் மிகச் சிறிய அளவில் மணி ஒலிக்குமாறு முதலில் பரிசோதிக்கப்பட்டது . பின்னர் , 1858 ஏப்ரல் 10 -ம் தேதி லண்டன் டவர் கடிகாரத்துடன் , பிரமாண்டமான மணி இணைக்கப்பட்டு , இயக்கத்திற்குத் தயாரானது .

2-ம் உலக போரின்போது 1941-ல் ஜெர்மன் குண்டு வீச்சில் இந்த கடிகார கோபுரத்தின் 2 பக்கங்கள் சேதம் அடைந்தன . கடந்த 1976-ல் கடும் பனிப்பொழிவு காரணமாக , கடிகாரத்தின் முட்கள் சரிவர இயங்கவில்லை . இன்று வரை லண்டன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது . உலகின் மிகப் பெரிய மணியோசை கடிகாரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .

2 மறுமொழிகள் to பிக்பென் !!!! :

அமுதா said...

சங்கர் ஒரு வித்தியாசமான விசயத்தை சொல்லி இருக்கீங்க . நல்ல இருக்கு .

தமிழ். சரவணன் said...

இதன் மனியோசயை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன்... மற்றும் இதன் அருகிலேயே பாராளுமன்ற கட்டிடம் தேம்ஸ் நதி போன்ற சுற்றலா சிறப்புமிக்க கட்டிடங்கள் பல உள்ளன.