அனைவருக்கும் வணக்கம் . வணக்கம் என்ற சொல் பழமையாக இருந்தாலும் தினம் தினம் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் சொல்லும் பொழுது புதுமையாகத்தான் தெரிகிறது . சரி இனி நாம் நேராக விசயத்திற்கு வருவோம் . சில தினங்களுக்கு முன்பு இன்று ஒரு தகவல் என்றப் பகுதியில் பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை என்ற தலைப்பில் பல வியப்பானத் தகவல்களை பற்றி எழுதி இருந்தேன் அதில் முதல் பகுதியில் .
பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 1
சரி இந்த இரயில்வே துறை என்றப் பெயரிலே இத்தனை ஆச்சரியங்களும் வினோதங்களும் இருக்கிறது என்றால் இன்னும் இந்த இரயில்கள் பயணிக்கும் ரெயில் பாதைகள் பற்றிய தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது. இதுவரை நீங்கள் அறிந்திடாத பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் பல இரயில்பாதைகள் சுமந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரெயில்பாதைகள் அழுகிறதா..!? என்ன இது என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம்..! உண்மை அதுதான் என்று சொல்லவேண்டும்.
இதுவரை உலகத்தில் பலர் அறிந்திடாத மர்மங்கள் இந்த ரெயில் பாதைகளில்தான் புதைந்துகிடக்கிறது. எது அந்த ரெயில்பாதை..!?? அப்படி என்னதான் அங்கு நடந்தது.!?? என்பதை அறிந்துகொள்ள அடுத்தப் பதிவிற்காக காத்திருங்கள் என்று முடித்திருந்தேன். சரி அப்படி என்னதான் அங்கு நடந்தது என்பதை இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம் .
இன்று உலகத்தின் சிறந்த சுற்றுலா செல்லும் நாடுகளாக விளங்கும் மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒரு காலத்தில் அடர்ந்தக் பெருங்காடுகளாகத்தான் இருந்திருக்கின்றன. அதுமட்டும் இல்லாது உலகத்தின் மிகவும் கொடிய மிருகங்களும் ஒரு காலத்தில் அங்குதான் வசித்து வந்திருக்கின்றன. 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் சஞ்சாய் கூலிகள் என்ற அடிமைகள் சாலைகள், ரெயில் பாதைகள், ரப்பர் தோட்டங்கள் அமைத்து சிறிது சிறிதாக இந்த நாடுகளை வளப்படுத்தத் தொடங்கினர்.
1940-களில் மலேயா தீபகற்பம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அப்போது மலேசியாவில் தமிழர்கள் கங்காணிகளாக (கண்காணிப்பாளர்கள்) வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இவர்களின் மூலம் தமிழகத்தில் இருந்து வேலை செய்வதற்கு ஆட்களைத் திரட்ட ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இந்த கங்காணிகளும் அதற்கு தகுந்தாற்போல் தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி இலவச பயணம், கைகள் நிறைய வருமானம் என்று பல ஆசை வார்த்தைகளைக் கூறி பல லட்சம் தமிழர்களை அழைத்து சென்றனர்.
இது நடந்து சில வருடங்களில் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களிடம் தோற்றனர். மலேசியா ஜப்பானியர்கள் வசம் வந்தது. அப்பொழுது பர்மா வழியாக இந்தியாவிற்குள் புகுந்து இந்தியாவையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஜப்பானியர்கள் திட்டம் தீட்டத் தொடங்கினர். அதற்கு வசதியாக தாய்லாந்தில் இருந்து பர்மாவிற்கு ரெயில் பாதை அமைக்க முடிவு செய்தார்கள். இதற்கு பின் நடந்தது என்ன !? ரெயில் பாதை அமைத்தார்களா.. !? இந்தியாவை ஜப்பானியர்கள் கைப்பற்ற முடியாமல் போனதின் மர்மங்கள் என்ன ? என்ற கேள்விகளுக்கு அடுத்தப் பதிவில் பதில்கள் தொடரவிருக்கிறது ரெயில்பாதைகள் வழியாக காத்திருங்கள்.
தொடரும் இந்த மர்ம ரெயில் பாதை
❤ பனித்துளி சங்கர் ❤