ஜோக்ஸ் !!!

டேய்.. நண்பா.. நான் நம்ம தேசத் தலைவர்கள் படமெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.
நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்டா.."
"சொல்லுடா" மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா"ஜோதிடர்:

உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

கஸ்டமர் : எது பல்லா
ரஞ்சனி:
சாதம் சாப்பிட்டா வெயிட் போட்டுருவோமா? ஓரவஞ்சனி: இல்லையே வெயிட் போட்டா தானே சாதம் சாப்பிட முடியும்... ரஞ்சனி: என்ன சொல்ற?

ஓரவஞ்சனி:

குக்கர்ல வெயிட் போட்டாதானே சாதம் வடிக்க முடியும்?பெண்மணி:
ஒரு டசன் மாம்பழம் கேட்டேன். வீட்டில் போய்ப் பார்த்தால் பத்துப் பழம் தான் இருந்தது.

கடைக்காரர்:
அந்த ஒரு டசன் மாம்பழத்தில் இரண்டு பழம் அழுகிப் போயிருந்தது. நீங்கள் எதற்கு வீணாகச் சுமந்து செல்லணும்னு நானே தூக்கி போட்டுட்டேன்மனைவி:
''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்:
''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''கம்பெனி எம்.டி :
இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நான் 5000 ரூபாய்க்கு செக் தர்றேன்.”

இளிச்சகுமார்:
ரொம்ப நன்றி சார்.” எம்.டி: இட்ஸ் ஓகே. இதே போல அடுத்த வருஷமும் நல்லா வேலை செஞ்சா இந்த செக்ல கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!கண்டக்டர் படியில் நிற்பவரிடம்....

கண்டக்டர்:
யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்

நிற்பவர்:
சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன்!
-ராமு:
நீ பைக்ல வந்த ஸ்பீடுல என் மேல மோதி இருந்தா என்ன ஆகியிருக்கும்....

சோமு:
நீ இவ்வளவு பேசி இருக்க மாட்ட!

1. அவர்: எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்: அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!


==========

2. ஒருவர்:
உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல... மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!

==========

3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .? இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க

==========

4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்! இப்பவாவது உணர்ந்தியே! கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

==========

5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்

==========

6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார். ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

==========

7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க! ==========

இன்றைய மெகா ஜோக்: 8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க... எதுக்கு டாக்டர் ? தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன் தவறுகள் செய்தாள் தண்டித்து விடு,ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே ,2 மறுமொழிகள் to ஜோக்ஸ் !!! :

Unknown said...

padikka koodathenre intha kalaril pottu irrukireerkala? onrume vassikka mudiavillai

Unknown said...

padikka koodathenre intha kalaril pottu irrukireerkala? onrume vassikka mudiavillai