சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு !!!

இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

"செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது.

படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்டுத் திறன் குறித்து விளங்கும் வகையில், இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தம்மால் உருவாக்கப்பட்ட மேற்படி விமானத்தின் பரீட்சார்த்த பறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த "செøபர் 6' விமானமானது 82 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் பறந்தமை குறிப்பிடத்தக்கது. 54 மணி நேரம் பறந்து தன்னால் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட சாதனையை இவ்விமானம் முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

சுமார் 60,000 அடி உயரத்தில் தூர இருந்து இயக்கும் முறைமையின் கீழ் இவ்விமானம் பறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தயா பாலா0 மறுமொழிகள் to சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு !!! :