பனிக்குடம் . !!!


கர்ப்பமான இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் உருவாகிறது . அந்த திரவத்தின் பெயர் பனிநீர் என்றழைக்கப்படுகிறது . கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து கொண்டிருக்கும் .

கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் திரவத்தின் அளவு 600 முதல் 1200 மி.லி. பனிநீரின் அளவு குறைவது ஆபத்தானது .பிரசவத்தின் போது கருப்பையின் வாயையும் , பெண் உறுப்பையும் விரிவாக்குவதும் , குழந்தை பிறக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்வதும் பனிநீரின் பணியாகும் . பனிநீரை பரிசோதனை செய்தே ,

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர முடியும் .நஞ்சு .கருப்பையில் கரு உருவாகி குழ்ந்தையாக வளர்ந்து .... பிறக்க.... துணை புரிவது , நஞ்சு . இதன் மத்தியில் இருந்து தொப்புள் கொடி ஆரம்பித்து , கருக்குழந்தையின் தொப்புள் வரை நீண்டிருக்கும் .கருவின் வளர்ச்சிக்குரிய உணவையும் , ஆக்ஸிஜனையும் தாயின் ரத்தத்தில் இருந்து எடுத்து , கருக்குழந்தைக்கு செலுத்துகிறது .

கருக் குழந்தையின் உதிரத்தை தொப்புள் கொடி வழியாகப்பெற்று , அதன் கழிவுகளையும் அகற்றுகிறது .கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை நோய் அணுகாமல் பாதுகாப்பதும் , சீதோஷ்ண நிலை தாக்காமல் கவசம்போல் செயல்படுவதும் நஞ்சின் வேலைதான் . குழந்தையின் நுரையீரலாக , உணவுப்பாதையாக , சிறுநீரைப் பிரிக்கும் உறுப்பாக நஞ்சு செயல்படுகிறது . இது கருப்பையின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும்

0 மறுமொழிகள் to பனிக்குடம் . !!! :