குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

டியர் சார்! சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் "குருதிகனல்" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும்!,

மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க இந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான்!

உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன்!

என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்கம்மாகரை கண்ணன்செவ்வாய்கிரகம்

0 மறுமொழிகள் to குறுந்தகவல் நகைச்சுவைகள் !!! :