பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் டைரி ரூ.1 கோடிக்கு ஏலம்

பிரெஞ்சு நாட்டு சக்ரவர்த்தி நெப்போலியன் போன்பர்டே கைப்பட எழுதிய டைரி ஏலத்தில் விடப்பட்டது.

அது 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. இதை சுவிஸ் நாட்டு பழங் காலப் பொருட்கள் சேகரிப்பவர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.சில எழுத்துப் பிழைகளுடன் நெப்போலியனே எழுதிய இந்த 13 பக்க டைரியில் அரசியல் ராணுவ வெற்றி தோல்விகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளன.

1817 முதல் 1820_ம் ஆண்டுகளில் செயின்ட் ஹெலெனா தீவில் தங்கி இருந்தபோது இது எழுதப்பட்டது. 1815_ம் ஆண்டு ஜுன் மாதம் நடந்த வாட்டர்லூ யுத்தத்தில் தோல்வி அடைந்த பிறகு எழுதப்பட்ட நாள் குறிப்பு ஆகும்.

0 மறுமொழிகள் to பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் டைரி ரூ.1 கோடிக்கு ஏலம் :