வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?

பல சுயதொழில் புரிபவர்கள் தங்களது நிறுவன வெற்றிகளைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்க மட்டுமே சாத்தியமா? அதை அடைய முடியாதா?
முடியும்! அதற்குத் தேவை மாற்றம்.


மாற்றம் கொண்டுவரத் தயாராக இருப் பவர்கள் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர். மாற்றத்திற்கு தயாராகாதவர்கள் தோற்றுக் கொண்டு இருக்கின்றனர்.


Mascot, Mphasis, Sasken Communication Tech, ஆகிய மூன்று கம்ப்யூட்டர் துறை நிறுவனங்கள் தங்களது வெற்றிகளை நிலைப்படுத்திக் கொண் டுள்ளன. அதுவும், இத்துறை மிக மோசமாக இருந்த 2001-ம் ஆண்டில்!
தொழில் சூழ்நிலைகளைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பதை விட அதற்குத் தேவையான வகையில் நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் (Better to light a candle than curse darkness).இதற்கு சில மனோதத்துவக் கோட்பாடுகளை (Psychological) புரிந்து கொள்ள வேண்டும்.


1. பிரச்சினைகளைத் தீர்க்க, நீங்கள் வழக்கமாக கையாளும் முறை விஞ்ஞானப் பூர்வமானதாக இருக்க வேண்டும் (Scientific Approach).


2. மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு (Pre Conceived Idea) அதன் மூலமாகவே சூழ்நிலைகளை ஆராயக்கூடாது. திறந்த மனதுடன் சூழ்நிலைகளை ஆராய்ந்து எது நிஜமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கையாள வேண்டும்.


3. மிக மிக குறைவாக அனுமானம்
(Assumption) செய்ய வேண்டும். விளம்பரம், செய்தி ஆகியவற்றைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்து அனைத்தும் புரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.ஒருவரை அணுகி ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்குக் கூட EGO பார்க்கி றோம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய மனப்போக்கு ஒரு மாற்றம் கொண்டு வர தடையாக செயல்படும். நமது EGO விற்கு எடுத்துக்காட்டு - “நேரம் இல்லை”, “எனக்குத் தெரியும்” போன்ற எண்ணங்கள்.


4. தொழில் மோசமான நிலையில் இருக்கும் பொழுது, ஆலோசனை (Consultation) பெற முனைப்பு காட்ட வேண்டும்.

ஒரு நிறுவன வளர்ச்சிக்கு மைய அச்சாக
(Central axis) இருப்பது விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறை - பொருளாதாரம் (Economics) மனோதத்துவம் (Psychology) இவையும் விஞ்ஞானம் என உணர வேண்டும்.


தொழில் சூழ்நிலை சரியில்லாமைக்கு ஆலோசகர் (Consultant) என்ன செய்து விட முடியும்? என தவறான அனுமானித்தல் கூடாது. அதே போல், தொழில் சரியில்லாத வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கும் போது, ஆலோசகர்களை அணுக தயக்கம் காட்டுவது ஆபத்தானது.


5. தொழில் நலிவுறுவதற்கு சுய தொழில் புரிபவர்தான் முதல் காரணம் என்பதை உணர வேண்டும். If the ship sinks, the captain is responsible.


6. பிறர் கொண்டுள்ள பொதுவான கருத்து களைத் தானும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக, தொழில் சூழ்நிலை சரியில்லை என்பது பொதுவான கருத்து. அதனாலேயே தமது நிறுவனமும் அதிக லாபம் பெற முடியவில்லை என நினைப்பது தவறு. அறிவுப்பூர்வமான சுய ஆய்வுக்கு (Logical self analysis) இத்தகைய மனப்பான்மை தடையாக இருக்கும்.
இத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தால், முதலில் சொன்ன மூன்று நிறுவனங்களும், மோசமான தொழில் சூழ்நிலையிலும், சாதித்திருக்க முடியுமா?7. தொழில் சூழ்நிலை முன்பு இருந்தது போல் சாதகமாக இல்லை என்று பலர் நினைக்கின்றனர். சூழ்நிலை என்பது மாற்றத்திற்குரியது என்பது அடிப்படை அறிவு (Common sense ). இதில் சாதகமாக உள்ளது என்றோ அல்லது சாதகமாக இல்லை என்றோ நினைப்பது தவறு.


உண்மையில்,
இத்தனை காலம் கையாண்ட அணுகு முறை என்பது தற்போது மாறியுள்ள தொழில் சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்ற அளவில்தான் பார்க்க வேண்டும். புதிய சூழ்நிலைக்கான புதிய யுக்திகளை, புதிய எண்ணங்களை கைக்கொண்டால், எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றி பெறுகிறோம் என்ற எண்ணம் ஏற்படும்.


8. சூழ்நிலை சரியில்லை என்ற எண்ணம் பிறர் வழி போவோரிடம் (Followers) இருக்கலாம். பிறரை தன் வழிக்கு கொண்டு வருவோரிடம் (Leaders) இருக்கலாமா? ஒரு சுய தொழில் புரிபவர் பிறர் வழி போகும் மனப்போக்கு உடையவராக இருக்க முடியுமா?


9. சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் அணுகு முறைகளை விஞ்ஞான ரீதியில் கலந்தா லோசித்து (Scientific Consultation) மாற்றி யமைத்துக் கொள்ள வேண்டும். அதன் வெற்றி, பிறரை உங்களது வழிக்கு கொண்டு வர உதவும்.


10. சுய தொழிலில் இத்தகைய தலைமைப் பண்பு முக்கியம். Business Leader ஆக முயற்சிக்க வேண்டுமே தவிர Business Followers ஆக முயற்சிக்கக் கூடாது.


11. பிறர் போகாத, கால் பதிக்காத இடத்திலேயும் நீங்கள் கால் பதித்து, பாதையாக்கிக்கொள்ள வேண்டும். பிறர் கையாளாத அணுகு முறையைக் கூட நீங்கள் கையாளத் தயாராக இருக்க வேண்டும். பிறரின் ஏளனத்தையும் பொருட்படுத்தாமல், நவீன அணுகுமுறை களைக் கையாளும் துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.


12. இறுதியாக, ஆனால் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். When you hire a dog, allow it to bark என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசகர் என்ன சொல்ல வேண்டும் (Consultant) என்ற உங்களது விருப்பத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதே போல் உங்கள் ஆலோசகர் என்ன ஆலோசனை கூறுகிறாறோ, அதை அப்படியே செயல்படுத்துங்கள். நீங்கள் அதை மாற்றாதீர்கள்.


அவருடைய ஆலோசனையை செயல்படுத்திய பிறகும், நல்ல பலன் கிடைக்கவில்லையெனில், அவரையே கலந்தாலோசித்து வேறொரு ஐடியா கூறச் சொல்லுங்கள். அப்பொழுது தான், செயல்பாடுகளையும், பலாபலன்களை யும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.


13. சுய ஆய்விற்கு

உங்களது செயல்பிரச்சனைகளைச் சமாளிக்க……

1. தொழில், சூழ்நிலை சரியில்லை என்று நடப்பது நடக்கட்டும் என இருந்து விடுவீர்கள்

2. பணம் இருந்தால், தொழில் சரிவை சரிசெய்து விடலாம் என்று நினைத்து செயல்படுகிறீர்கள்.

3. ஆலோசகர்களை அணுக தயங்குகிறீர்கள்

4. யாருடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் இல்லாமலேயே தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நினைக்கிறீர்கள்
அத்தயை செயலுக்கு காரணமான உங்கள்மன இயல்பு


ஆக்கப்பூர்வமான (Creative thinking) எண்ணம் குறைவாக உள்ளது. உற்சாகம் குறைந்தும், மனச்சோர்வு (Depression) அதிகமாகவும் உள்ள மனநிலை.
பணமில்லாமல் போனதற்குக் காரணம், உங்களது கடந்தகால செயல்பாடுகள்லி சுபாவங்கள் என்று உணரத் தவறிவிட்டீர்கள். மீண்டும் பணத்தை மாத்திரம் முதலீடு செய்தால் கடந்த கால முதலீடு கரைந்தது போல் இதுவும் கரைந்து விடும்.


அதை உணர்ந்து செயல்பட்டால், ஆக்க பூர்வமாய் சிந்தித்து உற்சாகமாய் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

உங்கள் மனதினுள் உங்களைப் பற்றிய சுய ஆய்வு செய்து கொள்ள தயக்கமும் தோல்விக்கு தானே காரணம் என தெரிய வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சியும், உங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சுய கௌரவம் (EGO) உங்களுக்குத் தோல்வியை ஏற்படுத்தும் விதமான மனதை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.14. மேலும் ஒருவரிடம் ஆலோசனை பெற. அவருடைய தகுதியைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர் பிரபலமா என்று பார்க்க வேண்டிய தில்லை. பிரபலத்திற்கும் ரிசல்ட்டிற் கும் சம்பந்தமில்லை - உதாரணத் திற்கு பிரபலமாகாத எத்தனையோ மருத்துவர்கள் நல்ல ரிசல்ட்டை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

அது மட்டுமல்ல, ஒரு பிரபலத்தின் ஆலோசனைக் கட்டணத்தை தர எத்தனை பேருக்கு மனம் வரும்? எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், எல்லோருமே மும்பை மருத்துவமனையில் செலவு செய்து சிகிச்சை பெற முன்வருவார்களா?

எனவே, பிரபலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஒரு நல்ல ஆலோசகரின் திறமைக்கும், அவர் உங்களுக்கு ஏற்படுத்தித் தரவல்ல ரிசல்ட்டிற்கும் முக்கியத்துவம் தரும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4 மறுமொழிகள் to வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…? :

RK GRAPHIC said...

EXCELLENT SIR

RK GRAPHIC said...

EXCELLENT SIR

Unknown said...

அருமையான கருத்துக்கள், நன்றி நண்பரே...

Unknown said...

அருமையான கருத்துக்கள், நன்றி நண்பரே...