படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம் !!!

மேலை நாடுகளான அமெரிக்காவில் ஒரு நாள் இரவில் மாபெரும் அதிசயம் நடந்தது. நாடு முழுவதும் ஒரு நிமிடம் எல்லா மின் விளக்குகளையும் அணைத்து ஒரு மாபெரும் அந்த விஞ்ஞானி மௌன அஞ்சலி செலுத்தியது.

அந்த விஞ்ஞானிதான் எலக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். அவர் வாழ்ந்த நகருக்கு எடிசன் என்று பெயரிட்பட்டது.


தாமஸ் ஆல்வா எடிசன் அதிகம் படிக்காதவர். பள்ளிக்கு செல்லாதவர். ஆனால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தவர். எப்படியாவது ஒரு பொருளில் மின்சாரத்தை செலுத்தி மின்விளக்கேற்றி ஒளி தரவேண்டும் என்பதற்காக அயராது உழைத்தவர். தான் கண்டுபிடித்த மின்சாரத்தை சுமார் 1,600 உலோகப் பொருள்களை பாய்ச்சி பரிசோதனை செய்தார். அவரது விடா முயற்சியின் பரிசாக 1991 -வது தடவை கார்பன் கலந்த பருத்தி நூலில் மின்சாரம் பற்றி எரிந்தது.


முதன் முறை மின் குமிழ்விளக்கு (Electric Bulb) உண்டானது. இந்த பரிசோதனையில் அவர் ஆராய்ச்சி நடத்தி தொழிற்கூடம் கந்தகக் கலவையால் பற்றி எரிந்தது. இம்முயற்சியிகளின் போது அவருக்கு திருமணம் நடந்தது. கல்யாணம் செய்துக் கொண்ட அதே நாளில் கல்யாண மாப்பிள்ளையாக மனைவியோடு ஓடினார். நடு இரவில் அவர் நண்பர் கல்யாணத்தை நினைவுபடுத்த வீட்டிற்கு திரும்பி வந்தார். இத்தைகய அளவிடற்கரிய தியாகங்கள், விடாமுயற்சி, ஒரே இலட்சியம், ஒரே எண்ணம் ஆய்வில் 24 மணி நேர அர்ப்பணிப்பு இவைதான் புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு தருகிறது.


“மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்துஞ்சார்எவ்வெர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினர்”

என்ற நாலடியார் வார்த்தைகள் இது போன்ற விஞ்ஞானிகளுக்கு முற்றிலும் பொருந்தும்.

ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பது மனிதனுடைய கனவிலும், கற்னையிலும் உருவாகிறது. எல்லோரும் தினம் தினம் மரத்திலிருந்து தரையில் விழும் ஆப்பிள் பழத்தைப்பார்த்து, போய் கொண்டிருக்க; மாற்றுச் சிந்தனையுடைய ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி மட்டும், ஏன் அந்த பழம் கீழே விழுகிறது. ஏன் அது மேலே போகவில்லை என்ற ஒரு கேள்வியை தனக்குள் எழுப்பினான். அந்த கேள்வியின் பதிலாக புவியீர்ப்பு தத்துவம் பிறந்தது. இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு (invension) தேவையான நிலைகள் ஐந்து.


1. மாற்றுச் சிந்தனை (Lateral Thinking)


2. தயார்நிலை (Preparation)


3. எண்ணங்களை அடைகாத்தல் (Incubation


4. ஒளிர்தல் (Illumination)


5. மெய்ப்பித்தல் (Proof by Experimental Verification)


1. மாற்றுச் சிந்தனை (Lateral Thinking)


மாற்றுச் சிந்தனை என்பது மற்றவர்கள் சிந்திக்காத புதிய எண்ணத்தை, புதிய கருத்தை, ஒரு புது கண்ணோட்டத்தோடு பார்ப்பது. இந்த மாற்றுச் சிந்தனை இக்கால இளைஞர்களிடம் நிறையவே இருக்கிறது. இன்றைய கல்வி, மாணவர்களிடம் மனப்பாடம் செய்யும் திறமையையும், நினைவாற்றலையும் வளர்க்கிறதே தவிர அவர்களை சுயமாக சிந்திக்க விடுவதில்லை. அப்படி சிந்தித்தாலும் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு சமுதாயம் அங்கீகாரம் தருவதில்லை. வரவேற்பதில்லை. அதன் பலனாக இந்திய சமுதாயத்தில் படிப்பாளிகள்தான் உருவாகின்றனரே தவிர, படைப்பாளிகள் உருவாவதில்லை. இக்குறையை நீக்க அரசும், கல்வியாளர்களும் முன் வர வேண்டும். இளைஞர்கள் சாடும்பொழுது ஒரு ரேஷன் கடையை பார்க்கிறான். அக்கடைக்காரரின் தராசில் சரியான எடைக்கற்கள் இல்லை. இந்த அவலத்தை சாட நினைக்கும் மனம் பொங்கி எழுந்து ஒருபுதுக் கவிதையை வடிக்கிறது.
ரேஷன் கடைக்காரருக்குஒரு குழந்தை பிறந்ததுஎடைக் குறைவாக!
பறவைகள் பறப்பதைப் பார்த்த ரைட் சகோதரர்கள், செயற்கை பறவையை விமானத்தை - சிருஷ்டிக்க நினைத்து ஒரு மாற்றுச் சிந்தனையே.s


2. தயார் நிலை (Preparation)

ஒரு புதிய கருத்தைப் பற்றிய ஆய்வில் அதைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் சேகரிப்பது மிகமிக அவசியம். ஆய்வுக்கு உரிய பகுதி ஆய்வுக்குப் பின் அதன் பயன் இதுவரை அதைப்பற்றி செய்த ஆய்வுகள் அதன் வெற்றி தோல்விகள் அனைத்தையும் முறையாகக் கணிக்க வேண்டும். தேவையானால் பல நாடுகளுக்கும் சென்று அதே ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளோடு கலந்து பேசி விவரங்கள் பெற வேண்டும். அந்தக் கருத்தை பல கோணங்களில் சிந்தித்து தக்கக் குறிப்புகளோடு ஆய்வைத் தொடர வேண்டும். முறையான தயாரிப்பே நாளை வெற்றிக்கு வழிகோலும். ( Chance Favours a Prepared Mind)


3. எண்ணங்களை அடைகாத்தல் (Incubation)


மனதில் எழுந்த ஒரு புதுமையான எண்ணத்தை ஏன், எதற்கு, எப்படி, எங்கே, எப்பொழுது என்ற கேள்விகள் கேட்டு மனதை ஒருநிலைப்படுத்தி, எண்ணங்களை நிறுத்தி ஆழ்மனதில், எண்ணங்களை உலவவிடுவது. இது மின் வரைவுப் படத்தில் (Eletroencephalogram) டெல்டா அலைகளா O-3 அலை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..

அவ்வெண்ணம் திடீரென்று ஒரு பக்குவப்பட்ட நிலையில் இதுவரை உலகம் கண்டிராத, கேட்டிராத புதிய எண்ணமாக (Illumination) உருவாகும். மனிதனின் பெருமூளை வலது பகுதி, இடது பகுதி என இரண்டு பகுதிகளாகும். வலது கையை பயன்படுத்துவோருக்கு இடது பகுதி பெருமூளை காரணக் காரியங்களைக் காட்டும் (Logical Brain) மூளையாகச் செயல்படுகிறது. இவர்களின் வலதுப்பகுதி பெருமூளை புதுவகைச் சிந்தனை, புதுக்கவிதை, புத்தம் புதிய எண்ணங்கள, புதிய இசை, கண்டுபிடிப்புகள் இவற்றை தரும் மூளையாக (Creative Brain) செயல்படுகிறது. குழந்தைப் பருவத்தில் இரண்டு பகுதிகளும் இணைந்து வேலை செய்யும். பிறகு வலது மூளைக்கு பயிற்சி தராவிடின் பலன்றறுப்போகும்.

எனவேதான் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு புதுச்சிந்தனையை வளர்க்கும் கல்வி தருவது அவசியம். பெரும்பான்மையான மக்கள் வலது மூளையைப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் சிந்தனையற்ற ஜடங்களாகவே வாழ்ந்து மறைகிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைத் தேவை வலது மூளையின் வளர்ச்சியே.
நமது மூளையின் 200 கோடி பெட்ஸ் செல்ஸ் (Bets Cells) இருக்கின்றன. இவற்றை இணைக்கும் நரம்புச் சுருள்கள் கணக்கற்றவை. அவற்றின் நீளம் சந்திரமண்டலத்துக்குப் போய் திரும்பி வரும் தூரம்! இச்செல்களில், சுமார் 100க்கு ஒரு விழுகாட்டைத் தான் சாதாரண மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். பெட்ரண்ட்ரசல், ஆலபர்ட் எயின்ஸ்டின், பெர்னாட்ஷா போன்ற மாபெரும் மேதைகள் கூட நூற்றுக்கு இரண்டு விழுக்காட்டிற்கு மேல் பயன்படுத்துவதில்லை! என்பது, விஞ்ஞானிகள் கணிப்பு. மீதி உள்ள 98 விழுக்காடு பயன்படுத்துவோர்கள் மாபெரும் மேதைகளாக, கண்டுபிடிப்பாளர்களாக (Super Geniors) மாறி புதுப்புது கண்டுபிடிப்புகளையும், படைப்புத் திறனையும் பெற்று வையத்துக்கு வழிகாட்ட வாய்ப்பு அதிகம் உள்ளது.

- பேராசிரியர் டாக்டர். பி.கி. சிவராமன்

1 மறுமொழிகள்:

Unknown said...

dear shankar, the poem "meivarutham paarar" is not from naladiyaar, it is from "neethineri vilakkam" by Kumaragurubarar